Thursday, October 19, 2017

தொப்புளில் எண்ணை போடுங்கள்!


தொப்புளில் எண்ணை போடுங்கள்! நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது. நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்! அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும். காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும். நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது. நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும். தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது. கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்? நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் . ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அது ஒரு சைக்காலஜி வகுப்பு


நான் படிக்கும்போதே உடல் சிலிர்த்து விட்டேன். ((((அது ஒரு சைக்காலஜி வகுப்பு)))) ஆசிரியர் வந்து, "இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார். அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்... இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்.... இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்... இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்... வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்... மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்... அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்... ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, "ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர். உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. பின் ஏன் ..?" என்று கேட்டார்.. முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது... அதற்கு அந்த பெண்...."இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது... என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்.... ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்...." என்றார்..... அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்.... இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்...தோழமைகளே... இது மனைவிக்கு மட்டும் இல்லை கணவர்களுக்கு தான்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...


தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது... கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார். 'ராஜா ராஜா!' என்றழைக்க... ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்... தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக. இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார். ராஜா ராஜனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான். கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான். சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார். எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார். இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது. எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்... அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம். அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்... என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது. அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி. இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது... எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான். ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..." என்று கண்ணீர் மல்கி... பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்... இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல... இதற்கு இறைவனே சாட்சி என்றான்..."

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மழைக்காலத்தில் கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் பணியை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செய்துவந்தது தட்டான்கள்தான்.


மழைக்காலத்தில் கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் பணியை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செய்துவந்தது தட்டான்கள்தான். தட்டான்களுக்கு நீர்நிலைகள்தான் உலகம். இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் தட்டான்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை நீர்நிலைகளில் இட்டுவிட்டுச்செல்லும். நம் வெப்பமண்டல சூழலுக்கு அம்முட்டைகள் 10 நாள்களில் பொறித்துவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம்உயிரியானது சுமார் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டு வரை நீரிலேயே வாழும். அந்தக் காலகட்டத்தில் அதன் முக்கிய உணவு கொசுக்களின் லார்வாக்கள்தான். தன்னால் முடிந்தவரை கொசுக்களின் லார்வாக்களை உண்டு முதிர்ச்சியடைந்ததும் நீரை விட்டு வெளியேறிவிடும். தனது உடலைச் சுற்றியிருக்கும் உறை போன்ற பகுதியை உடைத்துக்கொண்டு இறக்கைகள் உடைய, முழுமையாக வளர்ச்சியடைந்த  தட்டானாக வெளியே வரும். நீரில் இருக்கும் போதும் , வெளியே பறக்க ஆரம்பத்த பிறகும் கொசுக்கள்தான் அதன் பிரதான உணவு. இரண்டு மீட்டர் வரை துல்லியமாகப் பார்க்கும் திறன் உடைய இரண்டு கூட்டுக்கண்கள் தட்டானுக்கு உண்டு. அவை, கொசுக்களை வேட்டையாடும் முறை வித்தியாசமானது. பறக்கும்போது தனது ஆறு கால்களையும் ஒன்று சேர்த்து கூடை போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். அந்தக் கூடைக்குள் விழும் கொசுக்கள்தான் அந்நேரத்து உணவு. பறந்துகொண்டே சாப்பிடும் அல்லது செடியில் அமர்ந்துகொண்டு சாப்பிடும். பின்னர் கூடைக் கால்களோடு மீண்டும் வேட்டைக்குப் புறப்பட்டுவிடும். இப்படிக் கொசுக்களின் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தியது தட்டான்கள்தான். இன்று கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை தட்டான்களின் உதவியால் விரட்டியிருக்கலாம். நீர்நிலைகளில் மணல் அள்ளுவதில் தொடங்கி, சாக்கடைக் கலப்பு வரை சகலத்தையும் செய்துவிட்ட நாம், இப்போது தட்டான்களைத் தேடுவதில் நியாயம் இல்லை. சிறகு விரித்துப் பறக்கும் அதன் அழகும், நின்றுகொண்டே பறக்கும் அதன் திறமையும், கருப்பட்டிக்காகக் கல்லைத்தூக்கும் அதன் பாங்கும், இனி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பார்க்கமுடியாது என்பதே கசப்பான உண்மை.மிக நீண்ட தொலைவிற்கு வலசை போகும் திறன் கொண்ட ஒரே பூச்சியினம் தட்டான்தான். காற்றில் மேலடுக்கு நகர்வு மூலம் இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா சென்றுவிட்டு மீண்டும் இந்தியா திரும்பும் திறன் அவற்றிற்கு உண்டு. மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு பறக்கும். இவற்றால் நின்றுகொண்டே பறக்க முடியும். அப்படியே 180டிகிரி தன்னைத் திருப்பிக்கொண்டு பின்னால் பறக்க முடியும். தட்டானைப் பார்த்துதான் ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டது என்று கூட சொல்வார்கள். பொதுவாக இரண்டு வகை தட்டான்கள் இருக்கின்றன. ஒன்று சாதாரண தட்டான். மற்றொன்று ஊசித்தட்டான். இதை வேறுபடுத்தி அறிந்துகொள்ள எளிமையான வழி இருக்கிறது. தட்டான் வந்து அமரும் போது அதன் இறக்கைகள் விரிந்த நிலையிலேயே இருந்தால் அது சாதாரண தட்டான். தனது முதுகுப் பகுதியுடன் இறக்கைகளை மடக்கிக் கொண்டு அமர்ந்தால் அது ஊசித்தட்டான். ஏறத்தாழ 6ஆயிரம் வகை தட்டான் இனங்கள் உலகம் முழுவதிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 503 இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. 325மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பூமியில் வாழும் பூச்சியினம் தட்டான் மட்டுமே. உலகில் எல்லா இடங்களிலும் இவற்றைப் பார்க்க முடியுமாம்.......

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, October 7, 2017

மழை பெய்யும் சமயங்களில் செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்குமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்


மழை பெய்யும் சமயங்களில் செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்குமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் | கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த இருவேறு மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல சில நாட்களுக்கு முன் செங்குன்றம் அருகே கல்லூரி மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் மின்னல் தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் மழையின்போது மின்சாதனங்களைப் பயன்படுத்துவோர், திறந்தவெளியில் நிற்போர் மீதே மின்னல் தாக்குகிறது. செல்போன் மட்டுமல்லாமல் எந்த வயர்லெஸ் மின்சாதனங்களைப் பயன் படுத்தினாலும் மின்னல் தாக்காது என அண்ணா பல்கலைக்கழக மின்னணு மற்றும் தகவல்தொடர்பு துறைத் தலைவர் எஸ்.முத்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 'தி இந்து'விடம் அவர் கூறியதாவது: செல்போன் பயன்படுத்துவதால் மின்னல் தாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் செல்போன் உட்பட எந்த வயர்லெஸ் கருவி வழியாகவும் மின்னல் தாக்குதல் நடப்பதில்லை. மாறாக மின் இணைப்பில் செருகப்பட்டுள்ள கருவிகளைப் பயன்படுத்தும்போதுதான் ஆபத்து. உதாரணமாக, செல்போனை சாதாரணமாகப் பயன்படுத்தினால் ஆபத்தில்லை. ஆனால் சார்ஜரில் இணைத்து பயன்படுத்தும்போது மின்னல் தாக்க வாய்ப்புள்ளது. செல்போன் கதிர்வீச்சுக்கும் மின்னலுக்கும் தொடர்பில்லை. வீட்டின் மீது மின்னல் தாக்கினாலோ அல்லது அருகாமை பகுதியில் மின்னல் தாக்கினாலோ, சுவர்கள் மற்றும் மின் இணைப்பு வழியாக மின்னலின் அதிகளவு மின்சாரம் பாயும். அப்போது சார்ஜரில் போடப்பட்ட செல்போனைப் பயன்படுத்தும்போது, பயன்படுத்துவோர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படும். அதேவேளையில் கேபிளால் இணைக்கப்பட்ட லேண்ட்- லைன் தொலைபேசியால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகம். எனவே மழை பெய்யும்போது லேண்ட்- லைன் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கும் முறைகள் மழை வரும்போது மரங்களுக்கு அடியிலோ அருகாமையிலோ நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் நீர்நிலைகளின் அருகிலும் இருக்கக்கூடாது. திறந்த வெளியில் இருப்பதை தவிர்த்து, வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும். மின்னல் தாக்கும்போது மின்சாரம், கம்பி வேலிகளில் பயணிக்க வாய்ப்புள்ளதால், அவற்றை தொடக் கூடாது. ஒருவேளை மழை பெய்யும்போது வெளியில் சிக்கிக் கொண்டால், காருக்குள் சென்றுவிட வேண்டும். காருக்குள்ளும் கையை குறுக்கி வைத்திருக்க வேண்டும். வானொலி, ஜிபிஎஸ் வசதிகளை இயக்கக் கூடாது. அதேபோல, வீடுகளின் மீது சிறிய இடிதாங்கி அமைப்பைப் பொருத்துவது மின்னல் தாக்குவதில் இருந்து காப்பாற்றும். முன்னெச்சரிக்கை வசதிகள் பொதுவாக குறிப்பிட்ட இடத்தில்மின்னல் தாக்கினால், அதே இடத்தில் மற்றொரு மின்னல் தாக்க வாய்ப்பு அதிகம். எனவே மின்னல் தாக்கிய இடங்களை அந்தந்த பொதுமக்களுக்கு தெரிவிக்க வசதி ஏற்படுத்தலாம். ஏஎம் (Amplitude Modulation) வானொலிகள் மின்னல் தாக்கிய அலைவரிசையைத் தெரியப்படுத்தும். அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தெந்த இடங்களில் மின்னல் தாக்கும் என்பதை கணித்து, மக்களுக்கு தெரிவித்தால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம் என்றார். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜெ.எம். ருத்ரன் பராசு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE