உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Thursday, March 25, 2010

இணையதள தேடலில் திரு பூ.ஆ.நரேஷ்....02

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் அவர்களுடன்
முதன்மை கல்வி அதிகாரி பூ.ஆ.நரேஷ் .


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம்
தமிழக‌த்‌தி‌ல் முதன்மை கல்வி அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 10 பள்ளிக்கல்வி ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். இத‌ற்கான உ‌த்தரவை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் எம்.குற்றாலிங்கம் ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

இடமா‌ற்ற‌ம் : ஊட்டி முதன்மை கல்வி அதிகாரியாக ‌ஜி.ராஜல‌ட்சு‌மியு‌ம், ‌திருவண்ணாமலை முதன்மை கல்வி அதிகாரியாக வி.பாலமுருகனு‌ம், திருவண்ணாமலை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) எஸ்.அசோகனு‌ம் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

சேலம் முதன்மை கல்வி அதிகாரியாக கே.ராஜராஜனு‌ம், தஞ்சை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) சி.அப்பாத்துரையு‌ம், நாமக்கல் முதன்மை கல்வி அதிகாரியாக ஆர்.மல்லிகாவு‌ம், விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரியாக பி.குப்புசாமியு‌‌ம் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இதேபோ‌ல் சென்னை முதன்மை கல்வி அதிகாரியாக பி.ஏ.நரேசு‌ம், கடலூர் முதன்மை கல்வி அதிகாரியாக சி.அமுதவல்லியு‌ம், நாகர்கோவில் கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.ஏ.ஏ.) டி.பெரியசாமியு‌ம், ஈரோடு கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) எஸ்.ராஜாராமனு‌ம் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

சேலம் கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) எஸ்.உமாராணியு‌ம், கரூர் கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) எஸ்.ஆர்.சிவஞானமு‌ம் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பத‌வி உய‌ர்வு : கடலூர் கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) எஸ்.சீனிவாசனு‌ம், புதுக்கோட்டை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) ஏ.முண்டையனு‌ம், காஞ்‌சிபுரம் கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) வி.சரஸ்வதியு‌ம், ஊட்டி கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) பி.காஞ்சனாவு‌ம் ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.

திருச்சி கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) எம்.விஜயகுமா‌ரியு‌ம், ராமநாதபுரம் கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) ஜி.வசந்தகுமாரியு‌ம், அரியலூர் முதன்மை கல்வி அதிகாரியாக எஸ்.தேன்மொழியு‌ம் ‌நி‌ய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.

தருமபுரி முதன்மை கல்வி அதிகாரியாக என்.திருநாவுக்கரசு‌ம், பெரம்பலூர் முதன்மை கல்வி அதிகாரியாக சி.சக்கரபாணியு‌ம், மதுரை முதன்மை கல்வி அதிகாரியாக ஜி.ரஜினிரத்னமாலாவு‌ம் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

நாளை தலைமை ஆசிரியர்கள் கூட்டம்

விழுப்புரம், ஏப். 25: பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது என முதன்மைக் கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 2009-ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகளை மாவட்ட அளவில் வெளியிடுதல் தொடர்பான அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக்தில் ஏப். 27-ல் நடைபெறுகிறது.

இக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர் பணி காலியாக உள்ள பள்ளிகளின் பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம். தொகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் இரண்டு நகல்கள் (தேர்வு முடிவுகள் அடங்கிய விவரம், மாணவர் பெயர் பட்டியலுடன்), பாடவாரியான மதிப்பெண் பட்டியல்கள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்றார்.
 
திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
 
விழுப்புரம், ஜூன் 18: விழுப்புரம் மாவட்டத்தில் 11-வது நிதிக்குழுவின் மானியத் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் ஆர்.சீனுவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.

இக் கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்ற பணிகள், கல்வித்துறைப் பணிகள், கல்வித்துறையில் தேர்ச்சி விகிதம், சுகாதாரத்துறை செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.

இக் கூட்டத்தில் திட்ட அலுவலர் வெ.மகேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ், துணை இயக்குநர் கிருஷ்ணராஜ், கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இலவச கலர் டி.வி.கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

விழுப்புரம், ஜூலை 5: விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த கட்டமாக நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்க கணக்கெடுக்கும் பணி தொடக்கப்பட்டுவிட்டது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

அரசமங்கலம், குச்சிப்பாளையம், பிடாகம் ஆகிய கிராமங்களில் இலவச டி.வி. வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி.கதிரவன் தலைமை தாங்கினார். இலவச டி.வி.க்களை வழங்கி உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 715 ஊராட்சிகளில் 3,72,543 இலவச கலர் டி.வி.க்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் 22 ஊராட்சிகளுக்கு வழங்க 22,239 இலவச டி.வி.க்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிதியாண்டுக்குள் அனைத்து ஊராட்சிகளுக்கும் இலவச கலர் டி.வி.க்கள் கொடுக்கப்பட்டு விடும்.

அடுத்தகட்டமாக பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும். அதற்கான கணக்கெக்கும்பணி தொடங்கப்பட்டு விட்டது.

தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தரமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்றார்.

இந் நிகழ்ச்சிகளில் முதியோர் உதவித் தொகை, மகப்பேறு நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. முதன்மைக் கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ், வருவாய் கோட்டாட்சியர் மீ.தங்கவேல், தனித்துணை ஆட்சியர் எம்.சேஷாத்ரி, வட்டாட்சியர் ராஜேந்திரதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மு.பழனிச்சாமி நன்றி கூறினார்.
 
மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை


விழுப்புரம், ஜூன் 11: மாணவர்களிடம் நன்கொடை மற்றும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் அரசு தேர்வுத்துறை இயக்குநரால் வெளியிடப்பட்டுள்ளன. அன்றைய தினம் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி முடிவுகள் குறித்த பட்டியல்கள் வழங்கப்ப்டடுள்ளன.

இதனை ஆதாரமாக கொண்டு 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஜூன் 12-ம் தேதிக்குள் பிளஸ் 1 வகுப்பில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் சேர்க்க வேண்டும்.

பிளஸ் 1 வகுப்புகளை ஜூன் 15-ம் தேதி முதல் புதிய கால அட்டவணைப்படி நடத்த வேண்டும். மாணவர்களிடம் முறையற்ற வகையில் கட்டணம் மற்றும் தொகை வசூலிக்கக் கூடாது என்று ஏற்கெனவே பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகள் மீறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தேர்வுகள் தள்ளி வைப்பு

விழுப்புரம் செப்-15.(டிஎன்எஸ்) பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி தமிழகம் முழுவதும் அரசு இன்று (செப்-15) பொது விடுமுறை அறிவித்து இருந்தது.

இந்த உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் விடுமுறை விடப் பட்டது.

எனவே இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் வருகிற 24ந் தேதி புதன்கிழமை நடைபெறும். அன்று அதற்குள் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களை தயார் படுத்திக்கொள்ளவேண்டும்.

மற்ற தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த கால அட்டவணைப்படி வழக்கம் போல் நடக்கும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ் தெரிவித்துள்ளார். (டிஎன்எஸ்) 
 
சாரண இயக்க மாவட்டச் செயலர் நியமனம்
   
 விழுப்புரம், ஜூலை 27: விழுப்புரம் மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாவட்டச் செயலராக முட்டத்தூர் ஓய்க்காப் மேல்நிலைப் பள்ளி சாரண ஆசிரியர் எம்.பாபுசெல்வதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் இப் பொறுப்பில் இருந்த விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரகுபதி பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக வேறு மாவட்டத்துக்கு சென்றுவிட்டார். எனவே இப் பதவியை பாபுசெல்வதுரைக்கு வழங்கி முதன்மைக் கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.