Saturday, March 6, 2010

உங்களுக்குள் எப்படி இருக்கிறீர்கள்?


* உடல் ஆரோக்கியத்தை மட்டும் விரும்பினால், டென்னிஸ் விளையாடவோ, மலை ஏறவோ, நடக்கவோ, நீச்சலடிக்கவோ செய்தால் அவை சிறந்த பலனைத் தரும். ஆனால், யோகா வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. அது தெய்வீகத்தை அடைவதற்கான ஏணி. உங்களுக்குள் இருக்கிற உயர்ந்த வாய்ப்பை அடைவதற்கான ஒரு வழி. படைத்தவரை அடைவதற்கான இனிய வழி.


* உலகம் எப்படி இருக்க வேண்டும் எனப் பார்ப்பதற்கு முன்பாக, உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கவேண்டும் எனப் பார்க்க வேண்டும். உங்களை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ள இயலாவிட்டால், உலகை அமைதியாக வைத்துக்கொள்வது என்பது கனவே!

* அளப்பரிய உயிர்த்தன்மையை உணர வேண்டுமானால், உங்கள் எண்ணங்களைக் காட்டிலும், தர்க்க அறிவை விடவும் மேலான அறிவு தேவை. அந்தப் பரிமாணத்தினுள் பிரவேசித்தால் தான், வாழ்க்கையின் பெரும்பகுதியினை ருசிப்பீர்கள்!

* உங்களை ஆனந்தத்தின் ஊற்றாக உருவாக்கிக் கொண்டால் உறவுகளை ஆனந்தத்தின் தேடலுக்காக பயன்படுத்தமாட்டீர்கள். இந்த மகத்தான மாற்றமே உங்களைச் சுதந்திரமானவராக ஆக்கும்.

-சத்குரு ஜக்கிவாசுதேவ்


No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.