You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: மாற்​றம்​கூ​டத் தீர்​வு​தானே...(மக்​கள்​தொ​கை பிரச்னை)
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Monday, March 15, 2010

மாற்​றம்​கூ​டத் தீர்​வு​தானே...(மக்​கள்​தொ​கை பிரச்னை)

மக்​கள்​தொ​கைப் பெருக்​க​மா​னது சீனா - இந்​தியா இரு நாடு​க​ளுமே எதிர்​கொள்​ளும் மிகப் பெரிய பிரச்னை என்​றா​லும்,​​ பிரச்​னை​யின் தீவி​ரம் இரு நாடு​க​ளுக்​கும் சம​மா​னது அல்ல.​ அடிப்​ப​டை​யி​லேயே மிகப்​பெ​ரிய நிலப்​ப​ரப்​பைக் கொண்ட நாடு சீனா.​ ​ இந்​தி​யா​வின் நிலப்​ப​ரப்பு -​ வளங்​கள் -​ மக்​கள்​தொகை அடர்த்​தி​யு​டன் சீனா​வின் நிலப்​ப​ரப்பு - வளங்​கள் -​ மக்​கள்​தொகை அடர்த்​தியை ஒப்​பிட்​டால் பிரச்​னை​யின் தீவி​ரம் சீனர்​க​ளு​டன் நமக்​குப் பல மடங்கு அதி​கம் என்​பதை எளி​மை​யா​கப் புரிந்​து​கொள்​ள​லாம்.​ இந்த விஷ​யத்​தில் மிக முக்​கி​ய​மான முடிவை எடுக்க வேண்​டிய கால​கட்​டத்​தில் நாம் இருக்​கி​றோம்.​

ஆனால்,​​ சீனர்​கள்​தான் பிரச்​னை​யைப் புரிந்து தீவி​ர​மா​கச் செயல்​ப​டு​கி​றார்​கள்.​ மக்​கள்​தொ​கைப் பெருக்​கத்​தைக் கட்​டுப்​ப​டுத்​து​வ​தில் மட்​டு​மல்ல;​ உணவு உற்​பத்​தி​யைப் பெருக்​கு​வ​தி​லும்.​ தீவிர சட்ட அம​லாக்​கம் மற்​றும் கடு​மை​யான தண்​டனை ஆகி​ய​வற்​றின் மூலம் மக்​கள்​தொ​கைப் பெருக்​கத்​தைக் கட்​டுப்​ப​டுத்​தி​வ​ரும் சீன அரசு,​​ ​(மக்​கள்​தொகை வளர்ச்சி விகி​தம் இந்​தி​யா​வில் 1.41%; சீனா​வில் 0.66%),​ ​ நவீன ​ வேளாண் சாகு​ப​டிக்கு மாறி​ய​தன் மூலம் உணவு உற்​பத்​தி​யைப் பெருக்​கி​வ​ரு​கி​றது ​(ஒரு ஹெக்​டேர் தானிய விளைச்​சல் இந்​தி​யா​வில் 2,203 கிலோ;​ சீனா​வில் 10,500 கிலோ)​.​

இந்த இரு விஷ​யங்​க​ளி​லுமே சீன பாணியை இந்​தி​யா​வில் கடைப்​பி​டிக்க முடி​யாது.​ ​ ஆனால்,​​ நமக்கு என்று ஒரு பாணி​யில் இந்த இரு விஷ​யங்​க​ளை​யும் கட்​டா​யம் நாம் கவ​னித்​தாக வேண்​டும்.​ எப்​படி?​ மூன்று வழி​கள் இருக்​கின்​றன.​

இந்​தி​யா​வில் மக்​கள்​தொ​கைப் பெருக்​கத்​தைக் கட்​டுப்​ப​டுத்த அரசு உறு​தி​யான சட்ட திட்​டங்​களை அம​லாக்க வேண்​டும்.​ குறைந்​த​பட்​சம் "ஒரு குடும்​பம் இரு குழந்​தை​கள்' கொள்​கை​யை​யா​வது இந்​தியா வகுக்க வேண்​டும்.​ அதைத் தீவி​ர​மாக அமல்​ப​டுத்த வேண்​டும்.​ உதா​ர​ண​மாக,​​ இந்​தக் கட்​டுப்​பாட்டை மீறு​வோ​ருக்கு அர​சின் எந்த நலத்​திட்​டப் பலன்​க​ளும் கிடைக்​கா​த​வா​றும் ஒரு குழந்தை பெற்​றோ​ருக்கு கூடு​தல் சலு​கை​கள் கிடைக்​கு​மா​றும் சட்​ட​மி​யற்​ற​லாம்.​ இந்த நட​வ​டிக்கை நியா​ய​மா​னது மட்​டு​மல்ல;​ அவ​சி​ய​மா​ன​தும்​கூட.​

வே​ளாண்​மை​யில் உண்​மை​யான புரட்​சியை உரு​வாக்க வேண்​டும்.​ இதற்​கான அர்த்​தம்,​​ புது தில்​லி​யில் இன்று நம் ஆளும்​வர்க்​கம் யோசித்​துக்​கொண்​டி​ருக்​கும் ஒப்​பந்த முறை விவ​சா​யமோ;​ கலப்​பின விதை விவ​சா​யமோ அல்ல.​ மாறாக,​​ நவீ​னக் கண்​டு​பி​டிப்​பு​க​ளின் நல்ல அம்​சங்​க​ளு​டன் நம்​மு​டைய பாரம்​ப​ரிய விவ​சாய முறைக்​குத் திரும்​பு​தல்.​

நாட்​டி​லுள்ள பயி​ரி​டத்​தக்க நிலங்​களை மீள் ஆய்​வு​செய்து,​​ சாகு​படி பரப்பை அதி​க​ரித்​தல்;​ அந்​தந்​தப் பகு​திக்​கும் சூழ​லுக்​கும் ஏற்ற பயிர்ச் சாகு​படி;​ கிரா​மங்​கள்​தோ​றும் சுய பூர்த்தி பாசன நீர்க் கட்​டு​மா​னங்​கள் - சிக்​கன நீர்ப் பாச​னம்;​ கூட்​டுப் பண்ணை முறை;​ அனைத்​துப் பயிர்​க​ளை​யும் ​ கொள்​மு​தல் செய்​யும் அர​சு​சார் கொள்​மு​தல் அமைப்​பு​கள் மற்​றும் மதிப்​புக்​கூட்​டுப்​பொ​ருள் தொழிற்​சா​லை​கள் }​ விற்​ப​னை​ய​கங்​கள்.​ விவ​சா​யத்தை லாப​க​ர​மான ஒரு தொழி​லாக மாற்ற நாம் முனைப்​பு​டன் செயல்​பட வேண்​டிய நேரம் இது.​ ​

மக்​க​ளின் உண​வுப் பழக்​கத்தை நிர்​வ​கித்​தல்,​​ மாற்றி அமைத்​தல் என்​பது உண​வுத் தேவையை எதிர்​கொள்ள மிக​வும் அவ​சி​ய​மான மாற்​றம்.​ அந்​தந்​தப் பகு​திக்​கேற்ற பயிர்ச் சாகு​ப​டிக்​கான தேவையை உரு​வாக்​கும் வகை​யில் நம்​மு​டைய உணவு முறை​யில் அனைத்​துப் பயிர்​க​ளுக்​கும் இடம் அளித்​தல் என்​ப​து​தான் நாம் மேற்​கொள்ள வேண்​டிய உட​னடி மாற்​றம்.​

உ​தா​ர​ண​மாக,​​ தமி​ழ​கத்​தி​லுள்ள மானா​வாரி பகு​தி​க​ளில் உள்ள பயி​ரி​டத்​தக்க நிலங்​கள் ஏரா​ள​மா​னவை பெரும்​பா​லான காலங்​க​ளில் தரி​சா​கவே கிடக்​கின்​றன.​ ​ வச​தி​யுள்​ளோர் ஆழ்​கு​ழாய்க் கிணற்று நீர்ப் பாச​னம் மூலம் நெல் சாகு​படி மேற்​கொள்​வ​தும் ஏனை​யோர் வாய்ப்​புள்ள சந்​தர்ப்​பங்​க​ளில் மட்​டும் அப்​போ​தைய சந்​தைத் தேவைக்​கேற்ற பயிர் சாகு​படி மேற்​கொள்​வ​துமே இதற்கு கார​ணம்.​

பொது​வாக,​​ தமி​ழ​கத்​தில் மக்​கா​சோ​ளம் தவிர்த்து ​(அது​வும்​கூட கோழித் தீவ​ன​மா​கப் பயன்​ப​டு​வ​தால்)​,​​ ஏனைய மானா​வா​ரிப் பயிர்​க​ளுக்கு உறு​தி​யான ஆதார விலை விவ​சா​யி​க​ளுக்கு கிடைப்​ப​தில்லை.​ ஆனால்,​​ மக்​க​ளின் உணவு முறை​யில் ஒரு சின்ன மாற்​றத்தை உரு​வாக்​கு​வ​தன் மூலம் தமி​ழ​கத்​தின் உண​வுத் தேவை - மானா​வாரி பயிர் ​ சாகு​ப​டி​யில் மகத்​தான மாற்​றத்தை உரு​வாக்க முடி​யும்.​

கா​லை​யில் இட்லி-​தோசை-​சப்​பாத்​திக்​குப் பதி​லாக ஒரு கோப்பை கேழ்​வ​ரகு கூழ் அல்​லது கம்​பங்​கூழ் போன்ற உட​லுக்கு நல்ல வலு​வைத் தரக்​கூ​டிய உண​வுக்கு மாறு​வ​தன் மூலம் ஒரு​பு​றம் தமி​ழ​கத்​தின் அரிசி - கோதுமை தேவை​யில் நான்​கில் ஒரு பங்கை அப்​ப​டியே குறைக்க முடி​யும்;​ மறு​பு​றம் மானா​வா​ரிப் பயிர்​க​ளுக்கு என்று ஒரு பெரும் தேவை​யை​யும் சந்​தை​யை​யும் உரு​வாக்க முடி​யும்.​ இப்​படி,​​ ஒவ்​வொரு மானா​வா​ரிப் பயி​ரை​யும் வாரத்​தில் ஒரு நாள் உண​வுப் பட்​டிய​லில் சேர்ப்​ப​தன் மூலம் பெரும் மாற்​றத்தை உரு​வாக்க முடி​யும்.​

மக்​க​ளி​டத்​தில் நம்​மு​டைய உண​வுத் தேவை மற்​றும் உற்​பத்​தி​யில் உள்ள சிக்​கல்​க​ளை​யும் உண​வுப் பழக்​கத்தை மாற்​றிக்​கொள்ள வேண்​டிய தேவை​யை​யும் அரசு விளக்​க​லாம்.​ மானா​வா​ரிப் பயிர்​க​ளைக் கொண்டு புதுப்​புது உணவு வகை​க​ளைத் தயா​ரிப்​பது குறித்த விழிப்​பு​ணர்வை உரு​வாக்​க​லாம்.​ மாற்​றத்தை உரு​வாக்​க​லாம்.​

உல​கி​லுள்ள எல்லா பிரச்​னை​க​ளுக்​கான தீர்​வு​க​ளும் ஒரே​யொரு அடிப்​ப​டையி​லி​ருந்​து​தான் உரு​வா​கின்​றன:​ மாற்​றம்.​ விலை​வாசி உயர்​வுப் ​ பிரச்​னைக்கு வெற்​றுச் சவ​டால்​க​ளால் நிரந்​த​ரத் தீர்​வைக் காண முடி​யாது.​


No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.