உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Thursday, March 18, 2010

இந்திய நீர்வாழ் தேசிய விலங்காக டால்பின் .

இந்தியாவின் தேசிய விலங்காக புலி, தேசியப்பறவை யாக மயில் உள்ளது. தற்போது இந்திய நீர்வாழ் தேசிய விலங்காக டால்பின் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்திய நீர் நிலைகளில் டால்பின் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.


எனவே டால்பின் இனத்தை பாதுகாக்க அதை தேசிய நீர்வாழ் விலங்காக அறிவிக்க வேண்டும் என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்திருந்தார். அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு அக்டோபர் 5,2009 அன்று இந்திய தேசிய நீர் விலங்காக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.

ஒவ்வொரு டால்பினும் தனித்துவமான சீட்டி (சீழ்க்கை) ஒலியை எழுப்புகின்றன. இவை மனிதர்களின் கை இரேகையைப் போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்தன்மையானவை.[

மனிதர்களிடம் நட்புடன் வாழும் ஒரே கடல் வாழ் உயிரினம் டால்பின் மீன்கள்தான். மனிதனிடம் தானாகவே வந்து நட்புறவு கொள்ளும் டால்பின் மீன்கள் பார்ப்பதற்கு அழகானவை மட்டுமல்ல. மிகவும் புத்திசாலியான விலங்கும்கூட.


டால்பின் மீன்கள் அவை வாழும் பகுதியின் சுற்றுச்சூழலின் அளவுகோலாக இருக்கிறது. டால்பின்கள் அதிகம் வாழும் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதாக சூழலியல் அறிஞர்கள் கருதுகின்றனர்

இந்த டால்பின் மீன்களை பழக்கி பொழுதுபோக்கு பூங்காக்களில் பயன்படுத்தும் பழக்கம் நீண்ட காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகிறது.

இன்று இந்த டால்பின் மீன்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. காரணமாக இருப்பவன் வழக்கம்போல மனிதன்தான்.No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.