Monday, March 8, 2010

இந்தியாவில் வேலை செய்வதே என் விருப்பம்


நானோ டெக்னாலஜியில் சாதிக்கும் சிவராமன்: என் பூர்வீகம் புதுக் கோட்டை. என் அப்பா ராமசாமி மும் பையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இயக்குனராக இருக்கிறார். சென்னை, மும்பை, கோல்கட்டா என, பல ஊர்களில் பள் ளிப் படிப்பை முடித்து சென்னையில் உள்ள எஸ்.ஆர். எம்., பல்கலைக்கழகத்தில் பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தேன்.மாணவர் பரிமாற் றத் திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் உள்ள கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ் டர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு இருந்த பேராசிரியர் கோல்ட்ஸ்டீன், எனக்கு நானோ டெக் னாலஜி மீது ஆர்வத் தை ஏற்படுத்தியவர்.அதன் பின், நானோ டெக்னாலஜியில் ஆர்வம் அதிகரித்து, அந்த துறையில் படிக்க நினைத் தேன். எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் பி.டெக்., படித்தவுடன், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண் டிற்கு 8.2 லட்ச ரூபாய் ஊதியத்தில் வேலை கிடைத்தது. ஆனால், நான் அந்த வேலையில் சேரவில்லை.நானோ டெக்னாலஜியில் முதுநிலைப் படிப்பு படிக்க நினைத்தேன். ஜி.ஆர்.இ., தேர்வில் எனக்கு நல்ல ஸ்கோர். அதனால், அமெரிக்காவில் முதுநிலைப் படிப்பில் சேர இடம் கிடைத்தது.ஆனால், வெளிநாடுகளில் சென்று படிக் கும் எண்ணத்தை விட்டுவிட்டு, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்திலேயே தொடர்ந்து படித் தேன். அங்கு என் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற் றேன். கடந்த செப் டம்பரில் சீனாவில் நடந்த ஆய்வரங்கில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது. அங்கு என் ஆய்வு குறித்து அறிந்து, "சீ கேட்' நிறுவனத்தில் சயின் டிஸ்ட் பதவியைத் தருவதாகக் கூறினர்.ஆண்டிற்கு இரண்டு லட்சம் டாலர் சம்பளம்; குறைந்தது ஐந்தாண்டு காலம் அந்த நிறுவனத்தில் பணி புரிய வேண்டும் என்பது நிறுவனத்தின் நிபந்தனை.ஆனால், பணம் ஒன்றை மட்டுமே வைத்து எனது முடிவைத் தீர்மானிக்க விரும்பவில்லை. இந்தியாவில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகம். டீச் சிங் என்பது எனக்கு விருப்பமான துறை.



No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.