Saturday, March 6, 2010

உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்

உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்


* நீ எதுவாக மாற நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமை படைத்தவன் என நினைத்தால், வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

* சில விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படுகின்றன. அதை உடனே தெரிந்து கொண்டுவிடுகிறோம். ஆனால், பல விஷயங்கள் நம் பார்வைக்குத் தெரிவதே இல்லை. அவற்றின் சக்தியை மட்டும் நம்மால் உணர முடிகிறது. நாம் உட்கார்ந்து பாட்டு கேட்கிறோம். அந்த வானொலிப் பெட்டியை நம்மால் பார்க்க முடிகிறது. வான்வெளியில் வரும் ஒலியை பார்க்க முடியாது. அதுபோல் கடவுளை உணரத்தான் முடியும். பார்க்க முடியாது.

* வெற்றி பெறுவதற்கு விடாமுயற்சியும், பெரும் மனஉறுதியும் வேண்டும். விடாமுயற்சி செய்பவர்கள் கடலைக் கூட குடித்துவிடலாம்.

* கடவுளை அவருடைய அருளால் மட்டுமே பார்க்கமுடியும். கடவுள் நமக்கு மிகச் சமீபத்தில் தான் இருக்கிறார். அவர் நமக்குள்ளே இருந்தாலும், தேடினால் மட்டுமே காணக்கூடியவராக இருக்கிறார். அதுதான் அவருடைய தனிச்சிறப்பு. கடவுள் உலகில் உள்ள அனைத்தையும் கடந்தவராக இருக்கிறார். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

* கடவுளை உணர முற்படுபவர்கள் படிப்படியாகவே முன்னேற முடியும். தொடர்ந்த தேடுதலின் சிகரமாக முழுமையாக அவரை அறிந்து கொள்ள இயலும்.

2 comments:

  1. ALL POWER IS WITH IN YOU
    YOU CAN DO ANYTHING AND EVERYTHING
    BELIEVE IN THAT

    STRENTH IS LIFE WEAKNESS IS DEATH

    ReplyDelete
  2. அறிவு களஞ்சியத்திற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களையும்,வாழ்த்துகளையும் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரே வலைப்பக்கத்தில் அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள ஒரு பொக்கிசமாய் திகழ்கிறது.
    தங்களின் சேவைக்கு மிகப்பெரிய நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.
    ச.அருண் குமார்

    ReplyDelete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.