உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Thursday, April 1, 2010

நன்றி ....! மாருதி 800.............


நன்றி ....!  மாருதி 800......


கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் முன்னிலை வகித்த மாருதி 800 கார் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களிலிருந்து நேற்று விடைபெற்றது. மாருதி சுசூகி நிறுவனம் கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்தது. இந்த கார் வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. அப்போது பிரபலமாக இருந்த பிரிமியர் பத்மினி மற்றும் அம்பாசிடர் கார்களை பின்னுக்குத் தள்ளி விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது.

கார்களிலேயே குறைந்தபட்ச விலைக்கு விற்கப்பட்டதால், நடுத்தர மக்களின் கார் கனவை நனவாக்கியது.

இந்நிலையில், பாரத் 4 என்ற வாகன புகை கட்டுப்பாட்டு விதிகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, புனே, அகமதாபாத், சூரத், கான்பூர், ஆக்ரா, ஐதராபாத் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் 13 நகரங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, மாருதி 800 கார் இன்ஜினை மேம்படுத்தினால் மட்டுமே மேற்கொண்டு விற்க முடியும்.ஆனால், இன்ஜினை மேம்படுத்தப் போவதில்லை என மாருதி அறிவித்துள்ளது. இதனால் புகை விதி நடைமுறைக்கு வந்துள்ள 13 நகரங்களில் மட்டும் மாருதி 800 கார் இன்று முதல் விற்பனை செய்யப்பட மாட்டாது. எனினும், பிற நகரங்களில் விற்பனை செய்யப்படும். படிப்படியாக இந்த மாடலின் உற்பத்தியை நிறுத்தவும் மாருதி திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.