உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Sunday, April 4, 2010

சாக்லேட் சாப்பிடுபவருக்கு இதய நோய் வராது; ஆய்வில் தகவல்

சாக்லேட் சாப்பிடுபவருக்கு இதய நோய் வராது; ஆய்வில் தகவல்


தினமும் சாக்லேட் சாப்பிடுபவர்களை இதய நோய் தாக்காது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக 35 வயது முதல் 65 வயது வரை உள்ள 30 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் சுமார் 39 சதவீதம் பேருக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படவில்லை. சாக்லேட்டில் உள்ள கோகோ பீன்ஸ் ரத்தத்தில் நைட்ரிக் அமிலத்தை அதிகரிக்க செய்கிறது. இதன்மூலம் ரத்தநாளங்கள் நன்றாக செயல்படுகின்றன. எனவே இதயநோய் ஏற்பட வாய்ப்பு இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் வழக்கத்தை விட தினமும் 6 கிராம் கூடுதலாக சாக்லேட் சாப்பிடுபவர்களில் 85 சத வீதம் பேருக்கு இதய நோய்கள் பாதிப்பு இல்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக அளவில் சாக்லேட் சாப்படுபவர்களின் இதயம் வலுப்பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.