உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Sunday, April 25, 2010

பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி: பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடிப்பு

கருமுட்டைகளில் உட்கருவை மாற்றம் செய்வதன் மூலம், பரம்பரை நோய்கள் மற்றும் அரிய வகை நோய்களுக்கு முடிவு கட்டி விடலாம் என்று, பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மனித குணங்களை நிர்ணயிக்கும் டி.என்.ஏ.,வின் ஒரு நுண்ணுறுப்பு, 'மைட்டோகான்ட்ரியா!' இது மொச்சைக் கொட்டை வடிவில் அமைந்திருக்கும். இது தான், ஒரு செல்லுக்கு சக்தியை வழங்குகிறது.இதில் ஏற்படும் குறைபாடுகளே பரம்பரை நோய்கள் வரக் காரணம் என்று நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.பிரிட்டனில் நடந்த ஆய்வுப்படி, தாய்வழியில் வரும் பரம்பரை நோய்கள் 250 பேரில் ஒருவருக்கு மிகச் சிறிய அளவில் இருப்பதாக கண்டறியப்பட் டுள்ளது.

உலகளவில், 6,500 பேரில் ஒருவரை பரம்பரை நோய்கள் மிகத் தீவிரமாகத் தாக்குகின்றன. இதனால் தசைப் பலவீனம், செவிட்டுத் தன்மை, இதயச் செயலிழப்பு, கண்களில் பார்வை பாதிப்பு மற்றும் இதர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். சில சமயம் உயிரிழப்பு கூட நேரிடும்.இதுபோன்ற பரம்பரை மற்றும் அரிய வகை நோய்களை முற்றிலும் நீக்குவதற் காக, பிரிட்டன் டாக்டர்கள், ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளனர்.அதன்படி, செயற்கைக் கருத்தரிப்பு முறையில், விந்தணு சேர்க்கப்பட்ட குறைபாடில்லாத கருமுட்டை ஒன்றை எடுத்து, அதிலுள்ள உட்கருவை (நியூக்ளியஸ்) நீக்குகின்றனர்.பின் இந்தக் குறைபாடுள்ள கருமுட்டையிலுள்ள உட்கரு, ஏற்கனவே உட்கரு நீக்கப்பட்ட கருமுட்டையில் வைக்கப்படுகிறது. இம்முறையில் நோய் பாதிப்பு ஏற்படுத்தும் டி.என்.ஏ.,வின் அளவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், பரம்பரை நோய் மற்றும் அரிய வகை நோய்கள் வர வாய்ப்பில்லை.

இதுகுறித்து, வடகிழக்கு பிரிட்டனைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டக்ளஸ் டர்ன்புல் கூறுகையில், 'இது நமது லேப்-டாப்பில் பேட்டரி மாற்றுவது போன்றது. பேட்டரி மாற்றப்பட்டவுடன் வழக்கம் போல் அது இயங்குகிறது. அதன் 'ஹார்ட் டிரைவ்'வில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.அதுபோல், இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் வழி பரம்பரை நோயால் பாதிக்கப்படுவதில்லை' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.