You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: May 2010
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Monday, May 31, 2010

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். போர்ச்சுகீசிய நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் மூலம் 16 ம் நூற்றாண்டுகளில் புகையிலை இந்தியாவுக்கு அறிமுகம் ஆனது. தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள், நன்மைகள் குறித்து மதுரை மனநல டாக்டர் சி. ராமசுப்பிரமணியன், டாக்டர் ரத்தினவேல், உளவியல் நிபுணர் ரவிச்சந்திரன், பேராசிரியர் கண்ணன் கூறியதாவது :புகையிலையால், நுரையீரல், கண் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கும். புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்றவற்றை வாங்க தினமும் 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. தோலின் தன்மைமாறி, சுருக்கங்கள் ஏற்பட்டு, எண்ணெய் பசை குறைந்து, இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் இருக்கும். எப்போதும் வாய் நாற்றம், இருமல் இருக்கும். பற்கள் மஞ்சளாகவும், கை விரல்கள் கறுப்பாகவும், ரத்தசோகை பிடித்தது போல் இருக்கும்.

புகையை கைவிடுவது எளிது : புகைப்பதை ஏன் விட்டுவிட வேண்டும் என்று பட்டியல் தயார் செய்ய வேண்டும். நன்மைகளை கைப்பட எழுதி வைத்திருக்க வேண்டும். எப்போது, ஏன், யாருடன், எந்த சூழலில் புகைபிடிக்கிறோம் என அட்டவணை தயார் செய்ய வேண்டும். லைட்டர், தீப்பெட்டி, ஆஷ்டிரே, மீதமுள்ள சிகரெட்டை, காலி பாக்ஸ்களை வீட்டிற்கு வெளியே போட்டு விட வேண்டும். வீட்டை நறுமண பினாயில் போட்டு சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். நெருக்கமான உறவினர்கள், நண்பர்களிடம் எந்த தேதியிலிருந்து புகைபிடிப்பதை விட்டுவிட போகிறீர்கள் என தெரிவிக்க வேண்டும். பின் சொன்னதை செய்ய வேண்டும்.

புகைப்பதை விட்டுவிட்டால் ஏற்படும் நன்மைகள் : ரத்தஅழுத்தம், நாடித்துடிப்பும் சாதாரண நிலைக்கு வரும். கை, காலில் அபரிமிதமான சூடு உஷ்ணம் குறையும். உடலில் தீங்கு விளைவிக்கும் கார்பன் மோனாக்ஸைடு குறையும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். நாக்கில் சரியான ருசி தெரியவரும். மாரடைப்பு வாய்ப்பு குறையும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. இருவாரங்களுக்கு பின், ரத்தம் ஓட்டம் சீராக இருக்கும். நடக்கவே சிரமப்பட்டவர்கள், நுரையீரல் விரிவடைந்து பிராண வாய்வு அதிகமாக சென்றுவிடுவதினால் மிக வேகமாக நடக்கவும், ஓடவும் முடியும்.

ஒன்பது மாதங்களுக்கு பின், இருமல், மூக்கடைப்பு குறைந்து சளி வருவது நிற்கும். ஓராண்டிற்கு பின், மாரடைப்பு வருவது பாதியாக குறையும். ஐந்து ஆண்டுகளுக்கு பின், பக்கவாதம், மாரடைப்பு, ரத்தஅழுத்தத்தினால் மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவற்றிலிருந்து விடுதலை ஏற்படும்.பத்தாண்டுகளுக்கு பின், புற்றுநோயால் இறப்பது பாதியாக குறையும். பதினைந்து ஆண்டுகளுக்கு பின், புகைப்பதை நிச்சயம் விட்டுவிட முடியும் என்று உறுதியாக நம்பி, மற்றவர்களையும் இதைப்போல நடந்துகொள்ளும் வகையில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Saturday, May 22, 2010

செயற்கை செல் உருவாக்கி விஞ்ஞானிகள் புரட்சி: உயிர் உருவாக்க வழி கண்டனர்

உயிரியல் உலகின் உச்சக்கட்ட சாதனையாக, செயற்கை செல்லை உருவாக்கி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
செல் என்பது, ஒரு உயிர் அணு. இது உட்கரு, மரபணுவை நிர்ணயிக்கும் டி.என்.ஏ., சைட்டோபிளாசம், செல் சுவர் உட்பட பல பாகங்கள் உள்ளன. "குளோனிங்' முறையில், ஒரு உயிரினத்தின் செல்லிலிருந்து, மரபணுவை எடுத்து, மற்றொரு செல்லில் புதைத்து பலபடியாக்கி, அதே உயிரினத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர். இப்போது, அதையும் மீறி, ஒரு புதிய செல்லையே உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இதை "சிந்தடிக் செல்' என்றழைக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதற்கான முயற்சியை, ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் துவக்கினர்.

ஒரு செல்லின் மொத்த மரபணுவையும், வேறு ஒரு புதிய செல்லுக்கு மாற்றி, அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் மேரிலாண்டை சேர்ந்த கிரெய்க் என்ற விஞ்ஞானி. அவர் தன் குழுவுடன் நடத்திய ஆய்வு வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து, ஒரு செல் உயிரினமான பாக்டீரியாவின் செல்லில், செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ., மூலக்கூறுகளை செலுத்தி, அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். அதில் ஒரு மரபணு ஜோடி பொருத்தத்தில் தவறு நேர்ந்ததை, கம்ப்யூட்டர் உதவியுடன் கண்டறிந்தனர். பின், அதை சரி செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, அதை மீண்டும், வேறு ஒரு செல்லில் பயன்படுத்தினர். அதன் வளர்ச்சியை கண்டு ஆச்சரியமடைந்த அவர்கள், அந்த செல்லின் முற்றிலும் மாறுபட்டிருந்த மரபணுவை, மீண்டும், வேறு ஒரு உயிரினத்தின் செல்லில் செலுத்தினர். அப்போது தான் ஆச்சரியம் நிகழ்ந்தது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ., புதிய மரபணுவுடன், தாய் செல் போலவே, வளர்ச்சி அடைய துவங்கியது. வேறு விதமாக சொன்னால், ஆட்டின் உயிரணு மாட்டின் உயிரணுவாக மாறியது. அப்படியானால் மரபணுவிலுள்ள குரோமசோம்களையே மாற்றி வேறுவிதமாக செய்யும் சாதனை இது. "செயற்கையாக உருவாக்கப்பட்ட புதிய செல், மருத்துவ உலகில் பல புதிய பரிணாமங்களை தோற்றுவிக்கும்' என இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை அவர்கள் "சிந்தடிக் செல்' என்று அழைக்கின்றனர்.
பாரம்பரிய நோய்கள் உட்பட பலவற்றுக்கும், இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும். உதாரணத்திற்கு அழுக்கு தண்ணீரை மிகவும் சுத்தமான தண்ணீராக்குவது, குறுகிய காலத்தில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பது போன்றவைகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் "உயிரி ஆயுதமாக இது பயன்படுத்தப்படலாம்' என்ற அச்சமும் பேசப்படுகிறது. ஆகவே மரபுப்படி பாதுகாக்கும் நடைமுறைகள் குறித்த கமிஷன் தலைவர் அமி குட்மானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதியுள்ளார். இந்த வெற்றியை பாராட்டிய அவர், " மருத்துவ, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய துறைகளில் இது எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைத்தல் - தலைமை ஆசிரியர்கள் ஆய்வுக் கூட்டம்


Wednesday, May 19, 2010

வேலை வாய்ப்பிற்கு பதிய மாணவர்களுக்கு ஏற்பாடு

விழுப்புரம் மாவட்டத் தில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப் பிற்கும் பதிந்து கொள்ளலாம்.இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத் தில் எஸ்.எஸ்.எல்.சி., மற் றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிகளிலேயே வேலை வாய்ப் பிற்கும் பதிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.விழுப்புரம் மாவட்டத் தைச் சேர்ந்த எஸ்.எஸ். எல்.சி.,மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டும் தங்கள் மதிப் பெண் சான்றிதழ்களை பெற பள்ளிக்குச் செல்லும் போது ரேஷன் கார்டு மற்றும் ஏற்கனவே எஸ். எஸ்.எல்.சி.,யில் பதிந்திருந்தால் அந்த வேலை வாய்ப்பு அட்டையை எடுத் துச் செல்ல வேண்டும்.ரேஷன் கார்டில் மாணவ, மாணவிகளின் பெயர் இல்லை என்றால் வேலை வாய்ப்பிற்கு பதிய முடியாது.

பதிவு தாரர்களுக்கு வழங்கப்படும் பதிவு அடையாள அட்டை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் பள்ளியிலேயே வழங்கப்படும். எஸ்.எஸ். எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பதிவு செய்பவர் கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வரத் தேவையில்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 286 பேர் மாறுதல்


விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 286 பேர் மாறுதல் (டிரான்ஸ்பர்) பெற்றனர்.விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சி.இ.ஓ., குப்புசாமி தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஒ., பன்னீர்செல்வம், டி.இ.ஓ.,க்கள் பூபதி, கலியப்படையாச்சி முன்னிலையில் 10 தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் கலந்தாய்வு முகாமை நடத்தினர்.காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதன் படி ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாறுதல் இடங்களைக் கோரினர். விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டது.

கலந்தாய்வில் பங்கேற்ற முதுகலை ஆசிரியர்கள் 192 பேரில் 75 பேர் விரும்பிய மாறுதல் பெற்று சென்றனர். இதே போல் முகாமில் பங்கேற்ற 536 பட்டதாரி ஆசிரியர்களில் 162 பேர் மாறுதல் பெற்றனர். 34 இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றதில் 17 பேர் மாறுதல் பெற்றனர்.ஆசிரிய பயிற்றுநர்கள் 45 பேர் பங்கேற்று அதில் 8 பேர் மாறுதல் பெற்றனர். சிறப்பு ஆசிரியர்கள் 40 பேர் பங்கேற்று 24 பேர் மாறுதல் பெற்றனர். இதன் மூலம் நேற்று நடந்த கலந்தாய்வு முகாமில் 847 ஆசிரியர்கள் பங்கேற்றதில் 286 பேர் விரும்பிய மாறுதல்களை பெற்று சென்றனர். மாறுதல் கலந்தாய்வில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியர்கள் குவிந்ததால் அரசு மகளிர் பள்ளி வளாகம் திருவிழாக் கூட்டம் போல் பரபரப்புடன் காணப்பட்டது.தொடர்ந்து இன்று (19ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் குறித்த கலந்தாய்வு நடக்கிறது.

மாவட்ட ஆசிரியர்கள் பொதுமாறுதல் நாளை துவங்குகிறது

விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களின் பொது மாறு தல் கலந்தாய்வு நாளை (20ம் தேதி) முதல் துவங்குகிறது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) தனசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத் தில் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக் கான கலந்தாய்வு நாளை முதல் துவங்குகிறது.விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட் ரிக் மேல்நிலை பள்ளியில் நாளை துவங்கும் கலந் தாய்வில் காலை மாவட் டத்தில் உள்ள நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வும் நடக்கிறது.மேலும் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த் தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் 6,7,8ம் வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள் ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் நடக்கிறது.நாளை மதியம் பட்டதாரிகள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது.

மறுநாள் காலை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வும், மதியம் உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் 6,7,8ம் வகுப் புகளில் பணிபுரிந்து உயர் நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற் றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பணி நிரவல் கலந்தாய்வும் நடக்கிறது.வரும் 24ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற் றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் நடக்கிறது. அன்று மதியம் இடைநிலை ஆசிரியர்கள் மாவட் டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்த õய்வு நடக்கிறது. 25ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வில் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந் தாய்விலும், தேர்ந் தோர் பெயர் பட்டியலின் படி பதவி உயர்வுக்கு தகுதி யுள்ள ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந் தாய்விலும் கலந்து கொண்டு விரும்பும் இடத்தை பூர்த்தி செய்ய லாம். பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கு அன்றே உரிய ஆணைகள் வழங்கப்படுகிறது.

தலைமை ஆசிரியர் கவுன்சிலிங்: 413 பேருக்கு மாறுதல் உத்தரவு


அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங், சென்னையில் நேற்று நடந்தது. 413 பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.சென்னை அசோக்நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில் நேற்று கவுன்சிலிங் நடந்தது. இதற்காக, மாநிலம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் வந்திருந்தனர். காலையில், காலிப்பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டன.

அதன்பின், இணை இயக்குனர்கள் ராமேஸ்வர முருகன், கார்மேகம், தர்ம.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மூன்று குழுக்கள், தலா 10 மாவட்டங்கள் வீதம் கவுன்சிலிங்கை நடத்தின. மாவட்டத்திற்குள் 273 தலைமை ஆசிரியர்களும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு 140 தலைமை ஆசிரியர்களும் என 413 பேர், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றனர். அவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம், மாறுதல் உத்தரவுகளை வழங்கினார்.சென்னை மாவட்ட அளவிலான கவுன்சிலிங், முதன்மைக் கல்வி அலுவலர் நரேஷ் தலைமையில், சைதாப்பேட்டையில் நடந்தது. இதில், 200 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சார்லஸ் டார்வினின் பயம் சரியானது தான் என கண்டுபிடிப்பு

தன் மூன்று குழந்தைகளின் திடீர் மரணம், மூன்று குழந்தைகளுக்கு வாரிசு இல்லாமை போன்றவற்றுக்கு, நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டது தான் காரணமென, சார்லஸ் டார்வின் பயந்தது சரிதான் என, நவீன ஆய்வு ஒன்று உறுதி செய்துள்ளது.பரிணாம கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின், தன் 30 வயதில், நெருங்கிய உறவினரான 31 வயதுடைய எம்மா வெட்ஜ்வுட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் மூன்று பேர், 10 வயதில் இறந்து போயினர். மேலும் மூன்று பேரின் நீண்டகால திருமண வாழ்வில் குழந்தை பேறே கிட்டவில்லை.

இப்பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணமாக, தனது திருமணம் இருக்கலாமோ என்று அவர் பயந்தார். அவரது பயம் சரியானது தான் என்று, சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது.ஓகியோ மாநில பல்கலைக்கழகத்தின் பரிணாம துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் டிம் பெர்ரா மற்றும் அவரது உடன் பணியாற்றும் இரண்டு பேர், சார்லஸ் டார்வினின் குடும்ப பாரம்பரியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.சார்லசின் தந்தை மற்றும் தாய்வழி மரபுகளின் வேர்களை, கி.பி., 16ம் நூற்றாண்டு வரை தேடி கண்டுபிடித்து சேகரித்தனர். அந்த உறவு முறைகளை பற்றிய இவர்களின் ஆராய்ச்சியில், சார்லசின் குழந்தைகள், தங்கள் முன்னோரிடமிருந்து மரபணுக்களை பெறுவதற்கு 6 சதவீதம் வாய்ப்பு இருந்துள்ளது தெரியவந்தது.

'சார்லஸ் தம்பதியரின் பெற்றோரிடம் நோய் விளைவிக்கக்கூடிய மரபணுக்கள், ஒரே குரோமோசோமில் பதிவாகியிருந்தால், அவை இரண்டும் ஒரே நேரத்தில், அவர்களின் சந்ததியரிடம் வந்து சேர வாய்ப்பு அதிகம் உள்ளது. அவை தான் நோய்களை உருவாக்கும்' என்கிறார் பெர்ரா.சார்லஸ், இரண்டு வேறுவிதமான தாவரங்களை ஒட்டு முறையில் சேர்த்து புதிய தாவரங்களை உருவாக்கி பார்த்தார். வழக்கமான தாவரங்களை விட, இவை மிகவும் ஆரோக்கியமாக இருந்ததையும், சந்ததி எண்ணிக்கையில் அதிகரித்ததையும் கண்டறிந்தார். அதன் முடிவுகளை மனித குலத்துக்கும் பொருத்தி பார்த்துதான் அந்த முடிவுக்கு அவர் வந்தார்.'டார்வினின் பயத்துக்கான காரணத்தை கண்டறிய விரும்பினேன். அவரது பயம் சரிதான் என் பது இப்போது தெளிவாகி விட்டது. அவருக்கு நவீன தோற்றவியல் குறித்து எதுவும் தெரியாது. அவர் ஒட்டு முறையில் தாவரங்களை உருவாக்கி பார்த்து, அதன் முடிவுகளை மனித குலத்தோடும் பொருத்தி பார்த்தார்' என்கிறார் பெர்ரா.

PREPARATION OF PROMOTION PANEL

2012-2013
.
கீழே கிளிக் செய்தால் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்யலாம்
HR.SEC.HM  PROMOTION  -  STATE LEVEL PREPARATION OF PANEL


(MS-WORD FILE)
(PDF FILE)2012-2013


கீழே கிளிக் செய்தால் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்யலாம்
HIGH SCHOOL HM PROMOTION  -  STATE LEVEL PREPARATION OF PANEL


(MS WORD FILE)
(PDF FILE)


2012-2013

கீழே கிளிக் செய்தால் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்யலாம்
PG PROMOTION - STATE LEVEL PREPARATION OF PANEL


(MS WORD FILE)

(PDF FILE)


2012-2013
.
கீழே கிளிக் செய்தால் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்யலாம்
SGT TO BT PROMOTION  -  STATE LEVEL PREPARATION OF PANEL


(MS WORD FILE)
(PDF FILE)

மிகவும் வெப்பமான ஆண்டு 2010 : நான்கு மாத ஆய்வில் வெளியானது

வாஷிங்டன் : 'உலக வரலாற்றில் 2010ம் ஆண்டு தான் மிகவும் வெப்பமான ஆண்டு என, அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:சர்வதேச அளவில் நிலம் மற்றும் கடலின் மேற்பரப்பில் நிலவிய வெப்பநிலையை கணக்கிட்டு பார்த்து, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்கள், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகில் உள்ள நாடுகளிலுள்ள வெப்பநிலை முழுவதையும் ஆய்வு செய்து, அதன் சராசரி அளவை சேகரித்தனர்.இதில், உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தாண்டு தான் மிகவும் வெப்பமான ஆண்டு என்பது தெரிய வந்துள்ளது. இந்த நான்கு மாதங்களில், உலகின் சராசரி வெப்ப நிலை 13.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது, கடந்த 20ம் நூற்றாண்டில் நிலவிய சராசரி வெப்பநிலையை விட 0.69 டிகிரி செல்சியஸ் அதிகம். இதேபோல், இந்த நான்கு மாதங்களில், ஏப்ரல் தான் அதிகம் வெப்பமான மாதமாக இருந்துள்ளது.இவ்வாறு வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு ஆலோசனைக்கூட்டம்


Monday, May 17, 2010

கல்விச்சோலை | கட்டுரைகள்

  கல்வி
 1. பாடநூலும் ஆயுதமே!
 2. அனைவருக்கும் கல்வி
 3. தோல்வி என்பது வீழ்ச்சியல்ல
 4. அறி​வுப் புரட்​சிக்கு அடித்​த​ளம்
 5. நேர் வழியில் கல்வி நெறி
 6. படிப்பது எப்படி?
 7. நேரான கல்விக்கு சீரான பார்வை
 8. சரிநிகர் தருமா சமத்துவ கல்வி
 9. வளர்இளம் பருவத்து மாணவர்கள்
 10. என் மரியாதைக்குரிய மனிதர்-சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
 11. அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி
 12. அறிவியல் அறிஞர்கள்
 13. ரைட் சகோதரர்கள்
 14. விஞ்ஞான மேதை ஐன்ஸ்டின்
 15. தாமஸ் ஆல்வா எடிசன்
 16. கொலம்பஸ்
 17. STEPHEN HAWKING (விஞ்ஞானி "ஸ்டீபன் ஹாக்கிங்" )
 18. Stephen W. Hawking - My Life in Physics
 19. கல்பனா செளலா
 20. காலிலியோ
 21. கணித மேதை ராமானுஜன்
 22. இந்திய முதல் விண்ணலை விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ்
 23. விஞ்ஞானியல்ல, ஞானி ஸ்டீவ் ஜாப்ஸ்
 24. வரலாற்று நாயகர்கள்
 25. செஞ்சிக்கோட்டை மாவீரன் தேசிங்கு ராஜன்,
 26. Dr. B.R. AMBEDKAR
 27. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
 28. Jagdish Chandra Bose
 29. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
 30. சேரர்கள்
 31. நானாஜி தேஷ்முக்
 32. பராக் ஒபாமா
 33. தத்துவ ஞானி சாக்ரடீஸ்
 34. இலக்கிய மேதை ரூசோ
 35. சே குவேரா
 36. ஜிரோநிமா
 37. ப்ரூஸ்லீ
 38. மாவீரர் மகா அலெக்ஸாண்டர்
 39. நெப்போலியன்
 40. ஆபிரகாம் லிங்கன்
 41. ஹிட்லர்
 42. பெனிட்டோ முசோலினி
 43. காலத்திற்கும் கலைக்குமான முகாலய பேரரசு
 44. புத்தர்
 45. திப்பு சுல்தான்.
 46. ரவீந்திரநாத் தாகூர்
 47. மாமன்னர் மருதுபாண்டியர்
 48. கருப்பினத் தலைவரே வருக, வருக...
 49. லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு "ஹீரோ'வின், "ப்ளாஷ்பேக்'
 50. தமிழ் அறிஞர்கள்
 51. மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
 52. என் கணவர் - செல்லம்மாள் பாரதி
 53. ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர்!
 54. மகாகவி பாரதியார்.
 55. ஊக்கம் தரும் தாய்மொழி
 56. வ.உ.சி. கண்ட பாரதி
 57. பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி
 58. ராஜராஜன் நேருவின் பார்வையில்
 59. என்.எஸ்.கிருஷ்ணன் - சி‌ரிக்க வைத்த சிந்தனையாளர்
 60. கட்டுரைகள்
 61. மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க
 62. Minjur Desalination Plant
 63. ஏழாவது சொர்க்கம்!
 64. தேவை நேர்த்தியான உழைப்பு!
 65. வாழ நினைத்தால் வாழலாம்
 66. அலைபேசிகளால் விலைபோகும் நிம்மதி
 67. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
 68. விஞ்ஞான வளர்ச்சியும் ஆபத்தும்
 69. கடவுள் எங்கே இருக்கிறார்?
 70. The Anna Centenary Library - Kotturpuram - Chennai
 71. MOTHERLANDS FATHER
 72. சாதனைகள்
 73. கண்ணைக் கவரும் கலை உலகம் - திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் - நேர்காணல்
 74. பெண் சிசுவை காப்போம் - அனிமேஷன் வீடியோ
 75. தூரிகை தொட்ட மேனகை !
 76. உங்கள் விரல் வழி ஓவியமாய் கசிய வேண்டும்...
 77. "கலைரத்னா' மேனகா
 78. நடிகர் சிவக்குமார் அவர்கள் திறந்து வைத்த திருமதி மேனகா நரேஷ் அவர்களின் ஓவியக்கண்காட்சி
 79. மனம் இறுக்கத்தை தளர்த்துங்கள்
 80. மன இறுக்கத்தைத் தளர்த்துங்கள்.
 81. இரவு தூக்கம் இனிமையாக அமைய...
 82. என் அழகிய கிராமம்
 83. உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்
 84. உங்களுக்குள் எப்படி இருக்கிறீர்கள்?
 85. நல்லதோ, கெட்டதோ... ஒரு அடக்கமான மனிதன் மிகவும் செழிப்பானவன்,
 86. உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கலாமா?
 87. ஆடைதரும் உறவு
 88. அறிவியல் செய்திகள்
 89. கோழி முட்டை முதல் வறுவல் வரை அரிய புகைப்படங்கள்
 90. "ஸ்டெம்செல்' சேமிப்போம்...
 91. பிரபஞ்ச ரகசியம் தெரியும்?
 92. பால் தயிராவது எப்படி?
 93. வெல்வெட் ஆப்பிள்
 94. வாசிப்பே என் நேசிப்பு
 95. புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டா ?
 96. சர்வதேச புத்தக தினம்
 97. வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம்
 98. சுற்றுச்சூழல்
 99. பருவநிலை மாற்றத்தால் எரிமலை சீறலாம் நிலச்சரிவு ஏற்படலாம்; ஆய்வாளர் தகவல்
 100. மாசற்ற வாழ்வே மகத்தான வாழ்வு
 101. சூரிய மின் சக்தி
 102. ஒலி மாசுவின் விஸ்வரூபம்
 103. மாற்​றம்​கூ​டத் தீர்​வு​தானே...(மக்​கள்​தொ​கை பிரச்னை)
 104. நீர் ஆதார மேம்பாட்டுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி
 105. பாலைவனமாகும் சோலை வனங்கள்!
 106. தப்புமா இந்த உலகம்...
 107. விழிக்க வேண்டிய தேசமும் ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்கும்
 108. இயற்கையே நமது எதிர்காலம்
 109. தண்ணீர்ப் பஞ்சம்
 110. குப்பை இல்லா நல்லுலகம்?
 111. நிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம்
 112. முக்கிய தினங்கள்
 113. சாலைப் பாதுகாப்பு
 114. மார்ச் 15-ம் நாள் நுகர்வோர் விழிப்புணர்வு தினம்
 115. ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம்
 116. உழைப்பாளர் தினம்
 117. உலக புகையிலை எதிர்ப்பு தினம்
 118. முக்கிய நிகழ்வுகள்
 119. இரண்டாம் உலகப்போர் - ஹிரோஷிமா
 120. சுனாமி
 121. விலங்குகள் அறிவோம்
 122. சிட்டுக்குருவி பற்றி உனக்கு சேதி தெரியுமா?
 123. நவீனமயத்தால் அழியும் சிட்டுக்குருவிகள்
 124. டைனோசர் இனம்
 125. மனித முரண்பாடுகளால் இடம்பெயரும் யானைகள்!
 126. இந்திய நீர்வாழ் தேசிய விலங்காக டால்பின்
 127. காம்பிரியன் யுகத்தில் தோன்றிய 'பொரி பெரா'
 128. கடல் ஆமை
 129. யானை.... தெரிந்ததும்... தெரியாததும்...
 130. முத்துச்சிப்பி
 131. ஆக்டோபஸ்
 132. தேனீக்கள்
 133. மின்மினிகள்,சிலந்தி,கங்காரு,கடல்குதிரை,முள்ளம் பன்றி
 134. வவ்வால்,சிப்பிக்குள் முத்து,ஒட்​ட​கம்.​
 135. அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
 136. கதைகள்
 137. எல்லாம் தெரிந்தவர் உலகில் யாருமில்லை.
 138. குள்ளநரித்தனம்
 139. ஆசைகளே துன்பத்திற்கு காரணம்
 140. முல்லாவின் ஆராய்ச்சி
 141. அறஞ்செயவிரும்பு
 142. இருபதும் இரண்டும்
 143. உலகத்தின் ராஜா
 144. மருத்துவம்
 145. பெண்களிடையே தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை தமிழகத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளது.
 146. கல்விச்சோலை
 147. ஆனந்த விகடன் வரவேற்பறையில் கல்விச்சோலை பக்கம்.
 148. கல்விச்சோலை.காம் - கல்வித்துறை சார்ந்த அனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்
 149. விக்கிபீடியாவிற்கு கல்விச்சோலையின் பங்களிப்பு
 150. சுட்டி விகடனில் கல்விச்சோலை

KALVISOLAI | QUICK LINKS

  TAMIL NADU GOVT WEBSITES
 1. www.tn.gov.in
 2. ONLINE SERVICES
 3. INDIAN RAILWAY ONLINE RESEVATION WEBSITE
 4. BSNL ONLINE PAYMENT WEBSITE
 5. TNEB ONLINE PAYMENT WEBSITE
 6. Government Technical Examinations in Commerce Subjects |Online Registration
 7. www.tnebnet.org
 8. www.onlinesbi.com
 9. www.oxicash.in
 10. www.sundirect.in
 11. E.MAIL LINKS
 12. www.gmail.com
 13. www.rediff.com
 14. www.yahoomail.com
 15. www.aol.com
 16. www.mail.nic.in
 17. www.kmail.com
 18. UNIVESITIES
 19. www.ugcnetonline.in
 20. www.ignou.ac.in
 21. IMAGE TOOLS
 22. www.imagesplitter.net
 23. FREE SMS SITES
 24. www.way2sms.com
 25. VIDEO 
 26. www.youtube.com
 27. TAMIL TYPE WRITING TOOLS
 28. www.google.com/transliterate/indic/TAMIL
 29. TAMIL FONTS
 30. www.kalvisolai.com/search/label/FONTS
 31. ONLINE BANKING INDIAN GOVT SITES
 32. www.india.gov.in
 33. VARIOUS ARTICLES
 34. www.en.wikipedia.org
 35. TAMIL NEWS PAPERS
 36. www.dinamalar.com
 37. www.dinamani.com
 38. www.dinakaran.com
 39. www.dailythanthi.com
 40. www.nakkheeran.in
 41. www.thatstamil.oneindia.in
 42. www.thinaboomi.com
 43. www.maalaimalar.com
 44. www.tamilmurasu.org
 45. www.newindianews.com
 46. www.tamil.webdunia.com
 47. www.maalaisudar.com
 48. www.thinaboomi.com
 49. www.maalaimalar.com
 50. www.tamilmurasu.org
 51. www.tamilsudr.com
 52. www.chennaivision.com
 53. www.kumudam.com
 54. www.new.vikatan.com
 55. www.theekkathir.in"
 56. www.new.vikatan.com
 57. www.makkalmurasu.com
 58. ENGLISH NEWS PAPERS
 59. www.thehindu.com
 60. www.deccanchronicle.com
 61. www.deccanherald.com
 62. www.deccanchronicle.com
 63. www.indianexpress.com
 64. www.tribuneindia.com
 65. www.thehindu.com
 66. www.timesofindia.indiatimes.com
 67. MUSIC 
 68. www.gaana.com
 69. www.saavn.com
 70. www.isaiaruvy.com
 71. www.mp3.tamilwire.com
 72. EDUCATIONAL SITES
 73. www.kalvisolai.com
 74. MAGAZINES
 75. www.vikatan.com
 76. OTHER USEFUL LINKS
 77. www.1-hit.com/all-in-one/tool.loading-time-checker.htm
 78. www.blogger.com
 79. www.wordpress.com
 80. www.domainindia.org
 81. www.kandupidi.com
 82. www.tableizer.journalistopia.com
 83. http://schools.ks.com/wp-login
 84. http://108.167.136.182:2082/kc cpanel
 85. www.cartoonize.net

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 17ம் தேதி கவுன்சிலிங்

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நாளை முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.

தொடக்கக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் கவுன்சிலிங், இணையதளம் மூலமாக நாளை காலை 9 மணிக்கு கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில், தொடக்கக் கல்வி இயக்குனர் முன்னிலையில் நடக்கிறது. இதன் அடிப்படையில் மற்ற மாவட்டங்களில் 20ம் தேதி முதல் கவுன்சிலிங் நடக்கவுள்ளது. மற்ற மாவட்டங்களிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாறுதல் கோரும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் 25ம் தேதி நடைபெறும்.

காஞ்சிபுரம் தவிர மற்ற மாவட்ட ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. 20ம் தேதி காலையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் நடைபெறும். பிற்பகலில் பட்டதாரி, தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடைபெறும். 21ம் தேதி காலையில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கும், பிற்பகலில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்த நடுநிலைப் பள்ளி 6, 7, 8, வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங் நடைபெறும்.

வரும் 24ம் தேதி காலையில், இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், பிற்பகலில் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் கவுன்சிலிங் நடைபெறும். 25ம் தேதி காலையில் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் அந்தந்த மாவட்ட கவுன்சிலிங் மையங்களில் நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Sunday, May 16, 2010

இந்திய ஏழைகள் எண்ணிக்கை 40 கோடியாக எகிறும்

நாட்டில் வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும், எனவே உணவு தானிய உற்பத்தியை பெருக்க வேண்டுமென மத்திய திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அமைக் கப்பட்ட மத்திய அமைச்சர் களை கொண்ட குழுவின் கூட் டம், கடந்த வாரம் நடந்தது. இக்கூட்டத்திற்கு, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.இதில் உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஆராய அமைக்கப் பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி, அறிக்கை தாக்கல் செய்து சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கைபடி, நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை, கடந்த 2005ம் ஆண்டு 37 கோடியாக இருந்தது. ஆனால் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை உயர்ந்து, 40.5 கோடியாக இருக்கும். இதன்படி நடப்பு ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில், ஏழைகளின் எண்ணிக்கை 3.5 கோடி உயர்ந்துவிடும். எனவே உணவு தானிய தேவைகளும் பன்மடங்கு உயரும்.நாட்டிலுள்ள ஏழைகள் கணக் கெடுப்பு அடிப்படையில், ஆண்டுக்கு 34 மில்லியன் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக மத்திய அரசு,மாநில அரசுகளுக்கு 54 ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக அளிக்கிறது.2005ம் ஆண்டின் ஏழைகள் கணக்கெடுப்பின்படி வழங்கப் பட்ட மானியத்தை விட, 6 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகும். 2010-11ம் ஆண்டில் உணவு மானியம் 55 ஆயிரம் கோடி ரூபாயாக அரசு அறிவித்துள் ளது.தற்போதைய ஏழைகளின் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தொகை மிகக்குறைவு என்பதுதான் உண்மை.

எனவே ஏழைகளுக்கு அளிக் கப்படும் உணவு மானிய தொகையை தோராயமாக கணக் கிட்டு, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொருவருக்கும் 6 கிலோவும், ஒரு குடும்பத் திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியம் கிடைக்கும் வகையில், மானியம் வழங்க வேண்டுமென கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.இதனை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவை குழு ஏற்றுக் கொண்டது.மேலும் ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதிலுள்ள, நடைமுறை சிக்கல் களை கருத்தில் கொண்டு, அதில் சில மாறுதல்களை செய்யுமாறு, காங்கிரஸ் தலைவர் சோனியா, அரசுக்கு விடுத்த வேண்டுகோளையும் அமைச்சரவை குழு ஏற்றது.

மேலும் கமிட்டி அளித்துள்ள மற்றொரு பரிந்துரையில், மாநில அரசுகள் பொது வினியோக திட்டத்தை முறைபடுத்த வேண்டும்.மத்திய அரசு அளிக்கும் மானியம் பயனாளிகளை நேரடியாக செல்லும் வகையில், பொது வினியோக முறை இருக்க வேண்டும்.இதற்காக பொது வினியோக முறை திட்டத்தை, தேசிய அடையாள அட்டை திட்டத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்த வேண்டும் அல் லது டில்லி மற்றும் சண்டிகர் நகரங்களில் செயல்படுத்தப் பட்டுள்ள முன்னோடி திட்டம் போன்று,வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி, பொது வினியோக திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, நாட்டில் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள 11.52 கோடி குடும் பங்களை பொதுவினியோக திட்டத்தில் சேர்ப்பது குறித்து, அமைச்சரவை குழு முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் டூ மாவட்ட வாரி தேர்ச்சி விபரம் 2010

Friday, May 14, 2010

பாடவாரியாக முதல் 3 இடங்கள் பிடித்தவர்கள்

தமிழ்

1. மோனிஷா-197,
எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்.
2. காயத்திரி-197
எஸ்.வி. மந்திர் மேல்நிலைப்பள்ளி,
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
3. மணிவண்ணன்-197,
சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம், சேலம்.

ஆங்கிலம்

1. வெங்கடேஷ்-196,
சன்பீம் மெட்ரிக்குலேசன் பள்ளி,
மேட்டுக்குளம் வேலூர், திருப்பத்தூர்.
2. காருண்யா-195,
எஸ்.வி. மந்திர் மெட்ரிக்குலேசன் பள்ளி,
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
2. கிருத்திகா-195, சீதா தேவி
கரோடியா மெட்ரிக்குலேசன், தாம்பரம்.
3. மனோபிரவீன்-195,
வித்யாவிகாஷ் மெட்ரிகுலேசன் பள்ளி, நாமக்கல்.

கணிதம்

1. பாண்டியன்-200,
எஸ்.வி. இந்து மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.
2. தினேஷ்-200,
எஸ்.வி. மந்திர் மேல்நிலைப்பள்ளி,
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
3. அபிநயா-200,
 பி.வி.பி. மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.

கம்ப்யூட்டர் சயின்ஸ்

1. பாண்டியன்-200,
எஸ்.வி. இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
2. சரவணன்-200,
குறிஞ்சி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.
3. சதீஷ்குமார்-200,
பொன்னு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், ஈரோடு.

இயற்பியல்

1. பாண்டியன்-200,
எஸ்.வி. இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
2. தினேஷ்-200,
எஸ்.வி. மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
3. அபிநயா-200,
பி.வி.பி. மெட்ரிக்குலேசன் பள்ளி, திண்டல், ஈரோடு.

வேதியியல்

1. பாண்டியன்-200,
எஸ்.வி. இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
2. தினேஷ்-200,
 எஸ்.வி. மந்திர் மெட்ரிகுலேசன், ஊத் தங்கரை, கிருஷ்ணகிரி.
 3. அபிநயா-200,
 பி.வி.பி. மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.

உயிரியல்

1. தினேஷ்-200,
எஸ்.வி. மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
2. அபிநயா-200,
பி.வி.பி. மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.
3. விக்னேஸ்வரன்-200,
 வித்யாவிகாஸ் மெட்ரிக்கு லேசன் பள்ளி, நாமக்கல்.

தாவரவியல்

1. ஜெனிஷா-200,
செயிண்ட் லாரன்ஸ் மேல்நிலைப்பள்ளி, மதாத்துவிளை, தக்கலை.
2. ராமலட்சுமி-200,
எஸ்.பி.கே. மகளிர் மேல் நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.
3. பிரீத்தா-200,
ஹோலி கிராஸ் மெட்ரிக்குலேசன், வேலூர்.

விலங்கியல்

1. ஜெனிதா எட்வின்- 200,
 கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேசன், மார்த்தாண்டம், குளித்துறை.
2. கற்பக மதுபதி-199,
 செயிண்ட் அலோசியஸ், மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
3. சர்வத்நவீன்-199,
ஹசனத் ஜரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர், திருப்பத்தூர்.

புள்ளியல்

1. தீரஜ்-200,
பி.வி.பி. மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.
2. ராஜ்குமார்-200,
 பி.வி.பி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.
3. நிவேதிதா-200,
பி.வி.பி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.

வரலாறு

1. கார்த்திகா-199,
 பசுபதீஸ்வரா மேல்நிலைப்பள்ளி, கரூர்.
2. ராதிகா-199,
பி.எஸ்.ஜி. ஆர்.கே.ஜி. மேல்நிலைப் பள்ளி, பீளமேடு, கோவை.
3. மேரி ஸ்டெல்லா-199,
அலங்கார அன்னை மேல் நிலைப்பள்ளி, வி.ஆர். பேட்டை, உடையார்பாளையம்.

புவியியல்

1. பரமேஸ்வரி-197,
அவ்வை மாநகராட்சி பள்ளி, மதுரை.
2. ஜெயபிரியா-197, மனு மேல்நிலைப்பள்ளி, மதுரை.
3. ஜாஸ்மின்-196,
எஸ்.ஏ. நாடார் மேல்நிலைப்பள்ளி, நாகலாபுரம், கோவில் பட்டி.

பொருளாதாரம்

1. சுவப்னா சாரா குருவில்லா-200,
குளூனி மேல் நிலைப்பள்ளி, புதுச்சேரி.
2. யாகியா-200, சேரன் மேல்நிலைப்பள்ளி, கரூர்.
3. புவனேசுவரி-200,
வியாசவித்யா மேல்நிலைப் பள்ளி, புழுதிவாக்கம், சென்னை.

வணிகவியல்

1. ஜெயலட்சுமி-200,
டி.எஸ். மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.
2. யாக்னபிரியா-200,
மகரிஷி வித்யாலயா மேல் நிலைப்பள்ளி, சென்னை.
3. அர்ச்சனா-200,
வேல்ஸ் மேல்நிலைப்பள்ளி, பல்லாவரம், சென்னை.

அக்கவுண்டன்சி

1. சுவப்னா சாரா குரு வில்லா-200,
குளூனி மேல் நிலைப்பள்ளி, புதுச்சேரி.
2. யாக்னபிரியா-200,
மகரிஷி வித்யாலயா மேல் நிலைப்பள்ளி, சென்னை.
3. அர்ச்சனா-200,
வேல்ஸ் மேல்நிலைப்பள்ளி, பல்லா வரம், சென்னை.

பவுண்டேசன் சயின்ஸ்

1. சங்கரேஸ்வரி-186,
செயிண்ட் இக்னேசியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.
2. மகாரிஷி-182,
செயிண்ட் இக்னேசியஷ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.
3. பாண்டியம்மாள்-182,
ஆர்.சி.எல்.எப். மகளிர் மேல் நிலைப்பள்ளி, உசிலம் பட்டி.

பிரெஞ்சு

1. கிருஷ்ணபிரியா-198,
எஸ்.பி.கே.வி.எம். மேல் நிலைப்பள்ளி, கோவை.
2. மோனிகா-198,
எஸ்.பி. கே.வ.எம். மேல்நிலைப் பள்ளி, கோவை.
3. சுவப்னாசாரா குரு வில்லா-198,
குளூனி மேல் நிலைப்பள்ளி, புதுச்சேரி.

அரபி

1. ஹிப்சுர் ரகுமான்- 194,
முர்துசவியா மேல் நிலைப்பள்ளி, சென்னை.
2. சஜிதா பாத்திமா-192,
யூ.எச்.ஏ. அரபி மேல்நிலைப் பள்ளி, கரூர்.
3. தகீருல்லா ஷெரீப்- 191,
முர்துசவியா மேல் நிலைப்பள்ளி, சென்னை.

இந்தி

1. பூஜாபாண்டே-197,
ஆட்டோமிக் எனர்ஜி மேல் நிலைப்பள்ளி, கல்பாக்கம்.
2. மாதவி-197,
கேசரி மேல் நிலைப்பள்ளி, மயிலாப்பூர், சென்னை.
3. பயல் அசேர்-196,
சி.எஸ்.ஐ. எவர்ட் மேல் நிலைப்பள்ளி, சென்னை.

கன்னடம்

1. மதுஸ்ரீ-188,
மகரிஷி மேல்நிலைப்பள்ளி, ஓசூர்.
2. தத்தா மதாயி-186,
 அரசு மேல்நிலைப்பள்ளி, தாளவாடி, கோபிசெட்டிப் பாளையம்.
3. காவ்யா-184
மகரிஷி மேல்நிலைப்பள்ளி, ஓசூர்.

மலையாளம்

1. கிளிஞ்சி-193,
பாரத் மாதா மேல்நிலைப்பள்ளி, உப்பட்டி, கூடலூர்.
2. சினி -192,
சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி, கணபதி, கோவை.
3 அஸ்வதி கிருஷ்ணா-192,
கேரள வித்யாலயா மேல் நிலைப்பள்ளி, சென்னை.

தெலுங்கு

1. கீர்த்தனா-192,
சன்பீம் மேல்நிலைப்பள்ளி, மேட்டுக்குளம், வேலூர், திருப்பத்தூர்.
2. குமார்-189,
டி.ஆர்.பி.சி. மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
3. சினேகலதா ஸ்ரீபாரதி- 188,
எஸ்.ஆர்.கே.எம். சாரதா மேல்நிலைப்பள்ளி, தி.நகர். சென்னை.

சமஸ்கிருதம்

1. அனு ஆசைதம்பி-198,
டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம், சென்னை.
2. பிரதீப் ராஜா-198,
டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு, சென்னை.
3. ஷரினி-198,
டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபா லபுரம், சென்னை.

உருது

1. வசிமா அம்ரீன்-195,
நுஸரத்துல் இஸ்லாம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பேர ணாம்பட்டு, திருப்பத்தூர்.
2. முகமது சவ்ஹபீப்- 195,
இஸ்லாமிக் மேல்நிலைப் பள்ளி, மேல்விசாரம், வேலூர்.
3. சாதியா இக்ராம்-193,
இஸ்லாமிக் மகளிர் மேல் நிலைப்பள்ளி, வாணியம்பாடி.

பிளஸ் 2 உடனடித் தேர்வு 2010

பிளஸ் 2 தேர்வில் மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் உடனடித் தேர்வு எழுதலாம். உடனடித் தேர்வு ஜூன் 29-ம் தேதி தொடங்கி, ஜூலை 9-ம் தேதி வரை நடைபெறும்.

இதுகுறித்து அதன் இயக்குநர் வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை 7,43,822 பேர் எழுதினர். இத்தேர்வர்களின் தேர்வு முடிவுகளைவெள்ளிக்கிழமை
(மே 14) காலை 9 மணிக்கு, அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட உள்ளார்.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல், தேர்வு முடிவுடன் அவர்கள் பயின்ற பள்ளியில் மே 14-ம் தேதி காலை 10 மணிக்குள் ஒட்டப்படும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மே 17-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை அரசுத் தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வு மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
விடைத்தாள் நகல்:

தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொன்றிற்கும் ரூ.550-ம், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.275-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மறுகூட்டல்:

தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மறுகூட்டல் கோரி தற்போது விண்ணப்பிக்கத் தேவையில்லை. விடைத்தாள் நகல் கிடைக்கப் பெற்ற பிறகு, விரும்பினால் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டலுக்கான கட்டணம்:

மறுகூட்டலுக்கு கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.305-ம், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205-ம் வசூலிக்கப்படும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையினை தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் Dire​ctor of Government Ex​amin​ations, இட்ங்ய்ய்ஹண்-6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையாக நேரில் ஒப்படைத்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்கூறிய அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

மறுமதிப்பீடு:

விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விரும்பினால் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்ற பின் மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணபிக்க விரும்புவோர், விடைத்தாள் நகல் பெற்ற 5 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுமதிப்பீடு கட்டணம் முதன்மை மொழி மற்றும் ஆங்கில மொழி பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.1010, இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.505 ஆகும்.

மறுகூட்டலுக்கு கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம்,உயிரியல் பாடத்திற்கு ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் ஆகும். இதற்கான அறிவுரைகள் விடைத்தாள் நகலுடன் இணைத்து அனுப்பப்படும்.
உடனடித் தேர்வு: மார்ச் 2010ல் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்கள் ஜூன்-ஜூலை 2010-ல் நடைபெற உள்ள மேல்நிலைச் சிறப்புத் துணைத் தேர்வு எழுதலாம். இதற்கான விண்ணப்பங்கள் மே 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வழங்கப்படும்.

பள்ளி மாணவராகத் தேர்வெழுதியவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியில் எஸ்எச் வகை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, அந்தந்த பள்ளிகளிலேயே மே 21-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தினைப் பணமாகப் பள்ளியில் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:
ஒரு பாடத்திற்கு ரூ.85, இரண்டு பாடங்களுக்கு ரூ.135, மூன்று பாடங்களுக்கு ரூ.185 கட்டணமாகப் பெறப்படும். மார்ச் 2010-ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்களும், மார்ச் 2010-க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்களும் ஜூன்-ஜூலை 2010 சிறப்புத் துணைத் தேர்வு எழுத விரும்பினால் அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களில் மே 24-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் மே 28-ம் தேதிக்குள் சேரும் வகையில் பதிவு அஞ்சலிலோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன், மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது இணையதளம் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகலை இணைக்க வேண்டும்.
மே 26-ல் மதிப்பெண் சான்றிதழ்

மதிப்பெண் சான்றிதழ்கள் மே 26-ம் தேதி, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும்.

தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

சதம் அடித்தவர்கள் எண்ணிக்கை

2010 ஆண்டுக்கான தேர்ச்சி விகிதம் - 85.2

பெண்கள் - 88

ஆண்கள் - 81.9

இந்த ஆண்டு சதம் அடித்தவர்கள் எண்ணிக்கை 1762.

கடந்த ஆண்டு எண்ணிக்கை 4060.

சதம் அடித்தவர்கள் விவரம்:

இயற்பியல் - 231

வேதியியல் - 741

உயிரியல் - 258

தாவரவியல் - 4

விலங்கியல் - 1

வணிகவியல் - 968

கணக்கு பதிவியல் - 851

வணிக கணிதம் - 341

கம்ப்யூட்டர் சயின்ஸ் - 265

பிளஸ் 2 ரிசல்ட் - 2010

பிளஸ் 2 ரிசல்ட் - 2010தேர்வு எழுதியோர் : 6,89,687

தேர்ச்சி சதவீதம் : 85 .2

முதலிடம்

பாண்டியன்
சக்தி விநாயகர்இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
தூத்துக்குடி

பெற்ற மதிப்பெண்கள் : 1187

தமிழ் : 194,
ஆங்கிலம் : 193,
கணிதம் : 200,
இயற்பியல் : 200,
வேதியியல் : 200,
கம்ப்யூட்டர் சயின்ஸ் : 200.

இரண்டாம் இடம்

1. சந்தியா
விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி
பண்டமங்கலம் நாமக்கல்

2. காருண்யா
எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி
ஊத்தங்கரை கிருஷ்ணகிரி

3. தினேஷ்
எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி
ஊத்தங்கரை கிருஷ்ணகிரி

பெற்ற மதிப்பெண்கள் : 1186

மூன்றாம் இடம்

1.பிரவக்சனா
சி.வி.பி.,ஏ.சி.ஆர்.ஆர்.,மெட்., பள்ளி

2. மனோசித்ரா
குறிஞ்சி மெட்.,மேல்நிலைப்பள்ளி
நாமக்கல்

3. அபிநயா
பி.வி.பி.,மெட்ரிக்பள்ளி
திண்டல் ஈரோடு

4.ஸ்ரீவித்யா
பிரின்ஸ் மெட்., மேல் நிலைப்பள்ளி
மடிப்பாக்கம் செங்கல்பட்டு

5.அண்டோ நசீரின்
அரசு நகர் மேல்நிலைப்பள்ளி மெட்., மேல்நிலைப்பள்ளி
அரியலூர்

பெற்ற மதிப்பெண்கள் : 1185

ஆடைதரும் உறவு

நம்முடைய வாழ்க்கையில் உடல் தூய்மையும், உள்ளத்தூய்மையும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை நம்முடைய வெளித்தோற்றமே காட்டிவிடும்.

உள்ளம் தெளிவாக இருப்பின் உடலின் தோற்றமும் கம்பீரமாகக் காட்சி அளிக்கும். நல்ல உடை நம்முடைய ஒழுக்கம் பண்பு செயல்திறன், புத்துணர்ச்சி ஆகியவற்றை நிச்சயமாக உருவாக்கித் தரும்.

அழகாக ஆடை, அணிந்த பின்பு அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க முடியாது. துடிப்பாகச் செயலைச் செய்ய மனம் தூண்டுதல் செய்யும். சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். மனம் தெளிவுடன் இருக்கும்.

இங்கு இயங்கும் தன்மை தான் செயலை வெற்றிகரமாக அமைக்க வழிவகுக்கும். உன்னுடைய தோற்றமே உன் வருங்காலத்தை முடிவு செய்கிறது என்கிறார் எல்லன் ஹாப்பர் என்ற அறிஞர்.

நம்முடைய தோற்றத்தைப் பார்த்து தான் மற்றவர்கள் மதிப்பீடு செய்வார்கள். இந்த மதிப்பீடு தான் நம்முடன் நட்புறவு கொள்ளவும் தொழில் துறையில் இணைந்து பணியாற்றவும், பொருள் உதவி செய்யவும் உதவி செய்யும் துணை புரியும்.

நம்முடைய தோற்றம் சரியாக இல்லா விட்டால் யாரும் நம்முடன் தொடர்பும் உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஜெர்மனியில் புகழ் பெற்ற அறிஞராக இருந்தவர் ஹொ ரோஸ். இவர் வீட்டிற்கு வந்தவுடன் நல்ல ஆடைகளைக் களைந்துவிட்டு மிகவும் எளிய ஆடைகளை அணிந்து கொள்வார்.

தான் வளர்த்து வந்த பறவைகளுக்காக தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் புழுக்களைத் தேடிக் கொண்டிருந்தார்.

அந்த வழியே சென்ற ஒருவர் இவருடைய செயலைப் பார்த்து இவர் ஒரு பிச்சைக்காரர் போலும். எச்சில் உணவைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு அறிஞரிடம் சில நாணயங்களைக் கொடுத்தார்.

அறிஞரைப் பிச்சைக்காரன் என்று எண்ண வைத்தது அவருடைய தோற்றம் தானே! அதனால் நம்முடைய தகுதிக்கேற்ப நல்ல உடைகளை அணிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

நாடகத்தில் அரசராக நடிப்பவர் அரசரைப் போன்றே ஆடை அணிய வேண்டும் அல்லவா? ஆண்டியை போல ஆடை அணிந்தால் அவரை அரசராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இல்லையா!

இதே போன்று உலகமாகிய நாடக மேடையில் நாம் ஒவ்வொருவரும் விதவிதமான பாகத்தை கொண்டிருக்கிறோம். அதற்கு ஏற்றவாறு நம்முடைய உடை இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும்.

நீதி மன்றம் என்பது எல்லோருக்கும் நீதி வழங்கும் இடம். நீதிபதிகளும் வழக்கறிஞர் அங்கு கம்பீரமாக வீற்றிருப்பதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன?
நீதி என்பது உயர்வானது அதனை வழங்குபவர்களும் உயர்வானவர்களாக உன்னதமானவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எளிய தன்மையுடன் இருப்பதாக நாமே எண்ணிக் கொண்டு பிறரை ஏமாற்றக் கூடாது.

ஹட்சன் என்ற காரை உற்பத்தி செய்யும் தொழில் அதிபரைச் சந்திக்க ஒரு செல்வந்தர் அழைத்து வரப்பட்டார். அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் அந்த செல்வந்தர் பல கோடிகளுக்கு அதிபதி என்று கூறினார்கள்.

ஆனால் அந்த செல்வந்தர் மிகவும் எளிய உடையை அணிந்து வந்தார். இவரை பார்த்த ஹட்சன் கார் முதலாளி, அவருடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தன்னுடைய தொழிற்சாலைக்குப் போய்விட்டார்.

அவரிடம் சென்று ஏன் செல்வந்தரிடம் பேசாமல் போய்விட்டீர்கள் என்று கேட்டனர். அந்தச் செல்வந்தர் தன்னுடைய தகுதிக்குத் தக்கபடி உடை அணிந்து வரவில்லை.

இப்படி அவர் போலி வேடம் போட்டு தன்னையே ஏமாற்றிக் கொள்வதோடு பிறரையும் ஏமாற்றுகிறார். அதனால் அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. உண்மையானவர் அல்ல. அப்படிப்பட்டவரிடம் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார் கார் முதலாளி.
நம்மை மற்றவர்கள் எவ்விதம் எண்ண வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குத் தக்கபடி உடை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி நாம் செய்யவில்லை என்றால் நமக்கு நாமே தீங்கும் துரோகமும் செய்து கொள்கிறோம்.

உனக்காக நீ உணவு சாப்பிட வேண்டும். பிறருக்காக நீ உடை அணிய வேண்டும். ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழி இருக்கிறது. வீட்டில் எளிய உணவாக இருந்தாலும் பரவாயில்லை. அதை மற்றவர்கள் அறியமாட்டார்கள்.

ஆனால் நாம் அணியும் ஆடை ஒழுங்கானதாகவும் தூய்மையானதாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்.

இப்படி இல்லாவிட்டால் பிறர் நமக்கு மதிப்பை தரமாட்டார்கள். நாம் சொல்லும் வார்த்தைக்கு ஒரு அந்த …ஏற்படாது. அதற்காக படாடோபமான ஆடம்பரமான ஆடைகளை அணிய வேண்டியது இல்லை.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எந்த வித உடை அணிந்து கொண்டிருக்கிறார்களோ அந்த ஆடையை அணிந்து கொண்டால் போதும். ரோமில் இருக்கும் போதும் ரோமான்யர்கள் போன்று இருக்க வேண்டும் என்ற பழமொழியை எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும்.

அதே நேரத்தில் அணியும் ஆடை நம்முடைய வருமானத்திற்கு தக்கபடி இருக்க வேண்டுமே தவிர அதற்கு அப்பாற்பட்டதாக இருக்கக்கூடாது.

நாம் ஒழுங்கான உடைகளை அணிந்திருப்பதைப் பார்த்து மற்றவர்கள் நம்மைப் புகழ வேண்டுமே தவிர இகழக்கூடாது.

“மகனே நீ எங்கு இருக்கின்றாயோ அங்குள்ள சமகாலத்து அறிவாளிகள் எவ்விதம் உடை உடுத்திக் கொண்டிருக்கிறார்களோ அவ்விதமே நீயும் அவர்களைப் போன்ற உடை அணிய வேண்டும். உன்னுடைய தகுதிக்கு மீறிய ஆடையை அணியாதே என்று செஸ்டர் பீல்டு தன் மகனுக்கு தெரிவித்தார்.

“உன்னுடைய பணப்பையால் வாங்கும் அளவுக்கு உடைகள் இருக்க வேண்டும். அலங்காரத்திற்காக இருக்கக்கூடாது. உயர்தர ஆடையாக இருந்தாலும் பரவாயில்லை. பகட்டுடன் இருக்கக்கூடாது. உடையே ஒருவரை வெளிப்படுத்திக் காட்டும்” என்கிறார் சேக்ஸ்பியர்.
தூய்மையுடன் ஒழுங்குடனும் உடை அணிந்து இருக்கிறோம் என்ற எண்ணமே நமக்கு நன் மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் அளிக்கும்.

இதன் காரணமாக நமக்குப் பலரும் மரியாதை தருவார்கள். அதுவே நாமும் பலருடன் பழகி நம்முடைய அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ள துணை புரியும்.

Wednesday, May 12, 2010

தோல்வி என்பது வீழ்ச்சியல்ல

'பிளஸ் 2 தேர்வில், மாநிலத்திலேயே சென்னையைச் சேர்ந்த மாணவி முதலாவதாக தேர்வு; தேர்வில் வெற்றி கிடைக்காது என்று நினைத்து விஷமருந்தி, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட மாணவன் தேர்ச்சி பெற்றான். தமிழில் 100க்கு 98 பெற்ற மாணவிக்கு, செம்மொழி சங்கத்தினர் பாராட்டு. 'தேர்ச்சி பெறாத மாணவர் மூவர், பெற்றோருக்கு பயந்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு ஓட்டம்; குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவி, தாவணியில் மரணத்தைத் தேடிக் கொள்ள, பெற்றோர் மட்டுமல்ல, பள்ளிக்கூடமே சோகத்தில் மூழ்கியது...' - இது போன்ற செய்திகள், ஒவ்வொரு வருடமும், பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவு வரும்போது வருவது வழக்கமாய் போனாலும், அது பெற்றோரை சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளாக்குகிறது. 'இளம் வயதினர் ஏன் இந்த முடிவுக்கு வருகின்றனர்? இதை தடுக்க வேண் டாமா?' என்ற கேள்விக்கு சமூக ஆர்வலர்களை பதில் தேட வைக்கின்றன. இருந்தாலும், ஆண்டுக்காண்டு இந்த எண்ணிக்கை பெருகி வருவது தான் மிகவும் வேதனைக்குரியது.

ஒவ்வொரு பெற்றோரும், பிள்ளைகள் பற்றி காண்கிற கனவு மட்டுமல்ல, 2020ல் இந்தியா எப்படி இருக்கும் என்பது பற்றி, 'கனவு மெய்ப்படட்டும்' என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், குழந்தைகளை உற்சாகப்படுத்தி வரும் சூழ்நிலையில், இந்த நிலைமை தொடரலாமா? இச்செயலை பிள்ளைகளுக்கு யார் கற்றுக் கொடுத்தது? யாரும் கற்றுக் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. அப்படி இருக்கையில், இந்நிகழ்வு தொடர்வது, பள்ளி பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், தன்னம்பிக்கை குறைவதையும், இருக்கிற நம்பிக்கை தளர்வதையும் அல்லவா காட்டுகிறது? இது, சமுதாயத்திற்கு நல்லதா? இதை முறியடிக்க வேண்டாமா? பிஞ்சு மனங்களை நஞ்சாக மாற்றும் தற்கொலை என்ற பயங்கரவாதத்தை, விதையிலேயே கிள்ளி எறிய வேண்டாமா? ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் நினைத்து நினைத்து, சுவைத்து சுவைத்து, அசை போடுகிற மாணவ பருவத்தை துளிர விடாது தூபம் போடும் செயலை எதிர்க்க வேண்டாமா? படிப்பில் சிரமப்படும் பிள்ளைகள் மட்டுமல்ல, நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கூட, சில நேரங்களில் இந்த முடிவை தேடிக்கொள்வதும் உண்டு. காரணம், படிக்க முடியவில்லை; முயற்சி எடுத்தும் முடியால் போய் விடுகிறது; பெற்றோரின் எதிர்பார்ப்பின் மிகுதி அல்லது அவர்களின் அதிகப்படியான கண்டிப்பு; அவமானத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற எண்ணம். காரணம் எதுவாக இருந்தாலும், நிகழ்வுகள் தொடராமல் இருப்பதற்கு வழிதான் என்ன?

'அன்றாட வேலைகளை ஆசையோடு செய்; அதுதான் வெற்றியின் ஒருவரி ரகசியம்' என்ற வரியை நினைவு படுத்துங்கள். 'தோல்வி என்பது விலகி நிற்கும் வெற்றி' என்பதை பிள்ளைகளுக்கு, புரிய வைக்க வேண்டும். தேர்வில் தோற்றால் வாழ்வே முடிந்து விடாது. ஆபிரகாம் லிங்கனுக்கு, 15 வயதில் தான் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பே கிடைத்தது. அவர் பள்ளியில் படித்த மொத்த நாட்கள் 365 தான். படிப்பதற்கு வாய்ப்பும், வசதியும் இருக்கும் போது, மனம் தளர்ந்து விடலாமா? அதைவிட சிறந்து காட்ட வேண்டாமா? ஒரு கனம் சிந்தித்து பாருங்கள்... தற்கொலை என்பது நொடியில் எடுக்கும் முடிவு தான். மனித வாழ்வு என்பது, கிடைத்ததற்கரிய பெரும் பாக்கியம். சவால்களை சமாளிக்காது, வெற்றிப் பாதையிலிருந்து விலகி கோழைகளாய் சாவதை, எந்த வகையில் எடுத்துக் கொள்வது? வாழ்வதோ ஒரு முறை, அதில் வாழ்ந்து, சிறந்து காட்ட வேண்டும். வாழ்வில் வெற்றியை ஏற்றுக் கொள்வது போன்று, ஏற்படுகிற சிறு சறுக்கலையும் சிறு சிறு தோல்விகளையும், ஏற்று கொள்கிற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

'திறமையற்றவர்கள் என்று யாரும் இல்லை. என்றாலும், சிலர் தோல்வி அடைவதின் காரணம் அத்திறமையை பயன்படுத்தாததே' என்கிறார் கால்வின் கூலிட்ஜ் என்ற அறிஞர். பிளஸ் 2 தேர்விலோ அல்லது 10ம் வகுப்பு தேர்விலோ வெற்றி பெறவில்லை என்றால், வாழ்வு முடிந்து விட்டதாய் பொருள் அல்ல. ஒவ்வொரு மாணவனுக்கும், பிளஸ் 2 என்பது வாழ்வில் அடித்தளம் தான். அந்த அடித்தளத்தில் ஆரம்ப வாழ்க்கை ஓரளவு நிர்ணயிக்கப்படுவது உண்மை தான். அதற்காக அடித்தளத்தில் கொடுக்கிற நெருக்கம், அடித்தளமே ஆட்டம் கண்டு விடக்கூடாது. முதலுக்கே மோசம் வந்து விடக்கூடாது. 'நான் அப்பவே சொன்னேன்... நீ நன்றாய் படித்திருந்தால் இது போல் நடக்குமா?' என்று சொல்வதை காட்டிலும், 'பரவாயில்லை... மனம் தளராதே; நம்பிக்கையை கைவிடாதே. வருகிற தேர்வில் ஒரு கை பார்த்து விடலாம்' என்ற வார்த்தைகள், நிச்சயம் ஏமாற்றத்தை நீக்கி, மாற்றத்தை கொடுக்கும்.

பெற்றோர் இக்காரியத்தில், அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். 10 மாதம் சுமந்து வளர்த்து, 16 வயதில் முழுமையாக இழக்கிற இழப்பை, எந்த பெற்றோரால் தான் தாங்கி கொள்ள முடியும். உங்கள் கவலையை கோபமாக்கி, திட்ட வேண்டாம். அதிலும், பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு, ஒருபோதும் ஒப்பிட்டு சொல்ல வேண்டாம். 'நான் திட்டியதால் தானே, இதுபோல் செய்து விட்டாய்; இனி திட்டவே மாட்டேண்டா...' என்று, கதறி அழுத பெற்றோர் பலரை பார்க்க நேர்ந்துள்ளது. பிள்ளைகளுக்கு, வருத்தம் ஏற்பட்டுள்ள நேரத்தில், உங்களின் ஆதரவும், அன்பும், பரிவும் தேவைப்படுகிறது என்பதை, நீங்கள் உணர வேண்டும். உங்களை விட்டால் வேறு யார் அவர்களுக்கு, தைரியம் கொடுக்க முடியும், தோல்வி, வாழ்க்கையின் இயல்பு என்பதை உணருங்கள். 'எனது நேற்றைய சந்தோஷம் நாளைக்கு தீர்ந்துவிடும். போன வாரத்து துக்கம் இந்த வாரம் சாதாரணமாய்த் தெரியும். திங்கட்கிழமை இருந்த பயமும், வேதனையும், புதன் கிழமை வரை கூட இருப்பதில்லை. இந்த புரிதல் மனிதனுக்கு வந்துவிட்டால், சோர்ந்து போகாமல் தன் கடமையை தொடர்ந்து கொண்டிருப்பான்' என்கிறார் பிரபல எழுத்தாளர் ஒருவர். எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிள்ளைகளுக்கு, ஆசிரியர்களும், பெற்றோரும் ஆதரவாக இருந்து, அவசரப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், நீங்களே அவர்களின் அவசரத்திற்கு, ஆதாரமாகி விடக் கூடாது.

உடலில் மிகப்பெரிய குறைகளை கொண்டவர்கள், அதை தங்களின் நிறைகளாக மாற்றி, ஜொலித்தவர்களை சற்றே பாருங்கள். அதன்பின், ஒரு முடிவுக்கு வாருங்கள். பின், வாழ்ந்து காட்டுங்கள். போலியோ பாதித்த ரூஸ்வெல்ட், அமெரிக்க அதிபராக ஆகவில்லையா? சிறுவயதில் சரியாக ஆகாரம் இல்லாததால், உடல் உறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சி அடையாது, பார்த்தவர்கள் எல்லாம் பரிகாசம் செய்யும் தோற்றத்தில் அமைந்துவிட்ட சார்லி சாப்ளின், தன்னை பார்த்து சிரித்தவர்கள் எல்லாரும் காசு கொடுத்து, தன் சிரிப்பை பார்க்க வைக்கவில்லையா? தன்னைப் போல் கண் பார்வையில்லாதவர்கள் குறையைப் போக்க, அவர்கள் படிப்பதற்கு எழுத்துக்களை கண்டுபிடித்து கொடுத்தார் பிரெய்லி. காது கேட்காத தாமஸ் ஆல்வா எடிசன், பிறர் கேட்டு மகிழ கிராமபோனை கண்டுபிடித்தார். 'தடைகள், சறுக்கல்கள் மற்றும் தோல்விகளை ஒழிக்கும் மருந்து, இரண்டு ரசாயன கலவையால் ஆனது. அவை, 'பயிற்சி, முயற்சி' என்பவை. தோல்வியை கண்டு துவண்டு விட வேண்டாம். 'கடின உழைப்பு உன் கைவசமானால், பின், கவலைப்பட அவகாசம் ஏது?' முயற்சி செய்யுங்கள்; வெற்றி பெறுங்கள்.

                                                        -பெ.மாடசாமி, காவல் துறை உதவி ஆணையாளர்

TAMIL NADU TEXT BOOKS

Class 1  Class 2
Class 3  Class 4
Class 5  Class 6
Class 7  Class 8
Class 9  Class 10
Class 11  Class 12
Diploma in Teacher Education - First Year  Diploma in Teacher Education - Second Year

=====================================================
====================================================
====================================================
====================================================
=====================================================
====================================================