You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: அறி​வுப் புரட்​சிக்கு அடித்​த​ளம்
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Saturday, May 8, 2010

அறி​வுப் புரட்​சிக்கு அடித்​த​ளம்

இங்​கி​லாந்​திலே பிறந்து வளர்ந்​த​வர் தாமஸ் பெயின்.​ பன்​னி​ரெண்​டாம் வயது வரை மட்​டுமே பள்​ளிக்​கூ​டத்​துக்​குச் சென்று படிக்​கிற வாய்ப்​பைப் பெற்ற பெயின்,​​ இள​மை​யி​லேயே வறு​மை​யின் கோரப்​பி​டி​யில் உழன்​றார்.​ ஒரே வேலை​யில் நிலைத்து நிற்க முடி​யாத சூழ​லி​லும்,​​ குடும்ப நிலைமை கார​ண​மாக வெவ்​வேறு வேலை​க​ளை​யும் செய்து பார்த்​தார்.​

க​லால் அலு​வ​ல​கத்​தில் பணி​செய்த போது அங்​குள்​ள​வர்​க​ளைத் திரட்டி உரி​மைக் குரல் எழுப்​பி​ய​தால் உயர் அதி​கா​ரி​க​ளால் அவ்​வே​லையி​லி​ருந்து விரட்​டப்​பட்​டார் பெயின்.​ வறு​மை​யின் உச்​சத்​தில் வாடிய அக்​கால கட்​டத்​தில்​தான்,​​ பின்​னர் உல​கப் புகழ்​பெற்​ற​வ​ராக விளங்​கிய பெஞ்​ச​மின் பிராங்​கி​ளி​னைச் சந்​தித்​தார்.​ பெஞ்​ச​மின் பிராங்​கி​ளின் அப்​போது இங்​கி​லாந்து காலனி நாடு​க​ளின் கமி​ஷ​ன​ரா​கப் பணி​யாற்​றிக் கொண்​டி​ருந்​தார்.

பெ​யி​னின் பிரச்​னை​யைப் பரி​வு​டன் கேட்​ட​றிந்த பிராங்​கி​ளின்,​​ பெயி​னுக்​குள் உறங்​கிக்​கொண்​டி​ருந்த உள்​ளொ​ளியை ஓர​ளவு புரிந்​து​கொண்ட நிலை​யில் அவ​ருக்கு ஒரு பரிந்​து​ரைக் கடி​தத்​தைக் கொடுத்து அமெ​ரிக்​கா​வில் அப்​போது வசித்​து​வந்த தனது மரு​ம​க​னி​டம் அனுப்​பி​னார்.​ 1977-ம் ஆண்டு தனது முப்​பத்​தே​ழா​வது வய​தில் பெயின் அமெ​ரிக்​கா​வில் உள்ள ஃபி​டெல்​பியா நக​ருக்​குச் சென்​றார்.​

"பென்​ஸில்​வே​னியா மேக​ஸின்' என்ற இத​ழின் ஆசி​ரி​யர் பொறுப்பு நம்​பிக்​கை​யு​டன் பெயி​னுக்கு அளிக்​கப்​பட்​டது.​ கறுப்பு இன நீக்ரோ மக்​க​ளுக்கு அமெ​ரிக்​கா​வில் இழைக்​கப்​பட்ட கொடு​மை​கள் குறித்து ஒரு கட்​டுரை எழு​தி​னார்.​ இக்​கட்​டுரை வெளி​வந்து ஐந்து வாரங்​க​ளில் அமெ​ரிக்​கா​வில் முதன் முத​லாக "அடிமை எதிர்ப்​புச் சங்​கம்' உரு​வா​னது.​ச​மூ​கக் கொடு​மை​கள் குறித்​தும், மக்​கள் படும் அவ​தி​கள் குறித்​தும் தொடர்ந்து கட்​டு​ரை​க​ளும் சிறு பிர​சு​ரங்​க​ளும் எழுதி வெளி​யிட்டு வந்​தார் தாமஸ்​பெ​யின்.​ இப்​பி​ர​சு​ரங்​க​ளுக்கு மக்​க​ளி​டத்​தில் அமோக வர​வேற்​புக் கிடைத்​த​தோடு,​​ படிப்​ப​டி​யாக விழிப்​பு​ணர்வு ஏற்​ப​டத் தொடங்​கி​யது.​

"இங்​கி​லாந்தி​லி​ருந்து அமெ​ரிக்கா பிரி​வது தவிர்க்க முடி​யாது' என்ற கருத்தை அழுத்​தம் திருத்​த​மா​கத் தனது எழுத்​து​கள் மூலம் தொடர்ந்து வாதிட்டு வந்​தார் தாமஸ்​பெ​யின்.​ "இங்​கி​லாந்து' எனும் தேசத்​துக்கு கீழ்ப்​ப​டிந்த அடிமை நாடாக எக்​கா​ர​ணம் கொண்​டும் அமெ​ரிக்கா நீடிக்​கக் கூடாது என்​ப​தற்கு அடுக்​க​டுக்​கான ஆதா​ரங்​களை அடிப்​ப​டை​யா​கக் கொண்டு "பகுத்​த​றிவு' எனும் தலைப்​பில் ஒரு சிறு நூலை எழுதி வெளி​யிட்​டார்.​

​இங்​கி​லாந்​தில் பிறந்​தி​ருந்​தா​லும்,​​ பெயி​னுக்கு,​​ அமெ​ரிக்கா புகுந்த வீடாக விளங்​கி​னா​லும்,​​ இங்​கி​லாந்​தின் முடி​யாட்​சிக்கு எதி​ரா​கக் குடி​யாட்​சித் தத்​து​வத்தை வலி​யு​றுத்தி அவர் எழு​திய "பகுத்​த​றிவு' நூல் அமெ​ரிக்​கர்​க​ளையே ஆச்​ச​ரி​யத்​தில் ஆழ்த்​தி​யது.​

1776-ம் ஆண்டு ஜன​வரி 10-ம் தேதி,​​ "பகுத்​த​றிவு' நூல் வெளி​யி​டப்​பட்​டது.​ "ஓர் ஆங்​கி​லே​ய​ரால் எழு​தப்​பெற்​றது' என்ற குறிப்​பு​டன் வெளி​யான இந்த நூல், வெளி​வந்த மூன்று மாதங்​க​ளில் 1,20,000 பிர​தி​கள் விற்​றுத் தீர்ந்​தன.​ வெகு விரை​வில் ஐந்து லட்​சம் பிர​தி​கள் எவ்​வித முயற்​சி​யும் எடுக்​கா​ம​லேயே விற்​ப​னை​யா​னது.​

​அன்​றி​ருந்த மக்​கள் தொகை​யைக் கணக்​கில் எடுத்​துப் பார்த்​தால்,​​ அமெ​ரிக்​கா​வில் அன்​றி​ருந்த பதி​மூன்று கால​னி​க​ளில் வாழ்ந்த எழு​தப்​ப​டிக்​கத் தெரிந்த அனை​வ​ரின் கையி​லும் இந்​தச் சிறு​நூல் இருந்​தி​ருக்க வேண்​டும் என்று கணிக்க முடி​கி​றது.​
சிங்​கம் அமர வேண்​டிய இடத்​தில் ஒரு கழுதை அமர நேரிட்டு மனித சமூ​கமே கேலி செய்​யும்​ப​டி​யான ஒரு நிலை​மையை அது அடிக்​கடி தோற்​று​வித்து விடு​கி​றது'' என்று முடி​யாட்​சி​யால் ஏற்​ப​டக்​கூ​டிய கேடு​கள் குறித்து இந்நூ​லில் எரி​ம​லை​யாய் வெடித்​தி​ருக்​கி​றார் தாமஸ்​பெ​யின்.​ ""முட்​டாள்​கள்,​​ போக்​கி​ரி​கள்,​​ தகு​தி​யற்​ற​வர்​கள் ஏற்​றம் காண்​ப​தற்கு அது வழி​யைத் திறந்து விடு​கி​றது'' என்று எழுத்​துச் சாட்டை கொண்டு விளா​சி​யுள்​ளார் பெயின்.​

தா​மஸ்​பெ​யி​னின் அர்த்​த​மும் அழுத்​த​மும் ஆவே​ச​மும் அடங்​கிய வாதங்​கள் நிறைந்த "பகுத்​த​றிவு' எனும் துண்​டுப் பிர​சு​ரம் போன்ற வெறும் 47 பக்​கங்​களை மட்​டுமே உள்​ள​டக்​கிய இச்​சி​று​நூல் அமெ​ரிக்​கா​வில் ஒரு பெரும் அர​சி​யல் அதிர்​வ​லையை உரு​வாக்​கி​யது.​

"உட​ன​டி​யா​கப் பய​ன​ளித்து,​​ படர்ந்து,​​ செல்​வாக்​குள்​ள​தாக நீடித்து நிலைத்​து​விட்ட வேறு எந்த நூலை​யும் எந்த மனி​த​னும் இப்​படி எழு​தி​ய​தில்லை'' என்று "பகுத்​த​றிவு' நூல் குறித்து தனது கருத்தை "அமெ​ரிக்​கப் புரட்​சி​யின் வர​லாறு' என்ற தனது நூலில் பதிவு செய்​துள்​ளார் ஜார்ஜ் டிரெவி​லி​யன்.​

தா​மஸ்​பெ​யி​னின் "பகுத்​த​றிவு' நூல் வெளி​யான ஆறு மாதங்​க​ளுக்​குள் அமெ​ரிக்​கக் கண்​டத்து காங்​கி​ரஸ், ஃபி​ல​டெல்​பி​யா​வில் உள்ள அர​சாங்க மாளி​கை​யில் கூடி அமெ​ரிக்க ஐக்​கிய நாடு​க​ளின் ​ சுதந்​தி​ரத்​தைப் பிர​க​ட​னம் செய்​தது.​

இங்​கி​லாந்​தி​ட​மி​ருந்து சுதந்​தி​ர​மாக,​​ சுயேச்​சை​யாக அமெ​ரிக்கா செயல்​பட அடித்​த​ள​மிட்ட நூல்​க​ளில் பிர​தா​ன​மான நூலா​கிய "பகுத்​த​றிவு' போலவே அமெ​ரிக்​கா​வில் நில​விய நிற​வெ​றிக்​கெ​தி​ராக உரு​வெ​டுத்த நூல்​தான் "அங்​கிள் டாம்ஸ் கேபின்'

"ஹேரி​யட் பீச்​சர் ஸ்டோவ்' என்ற பெண்​மணி அமெ​ரிக்கா நாட்​டில் சின்​சி​னாட்டி நக​ரில் ஒரு மத போத​க​ரின் மக​ளா​கப் பிறந்​தார்.​ அன்று அமெ​ரிக்​கா​வில் இருந்த நிற​வெறி கொண்ட எஜ​மா​னர்​க​ளாக விளங்​கிய வெள்​ளை​யர்​கள் பல​ரால் சித்​தி​ர​வதை செய்​யப்​பட்ட கறுப்பு நிற நீக்ரோ இன அடிமை மக்​கள் மத​போ​த​கர் நடத்​திய பாட​சா​லைக்​குத் தப்​பித்து வந்து தஞ்​சம் புகுந்​த​னர்.​

அவர்​க​ளின் கண்​ணீர்க் கதை​க​ளைக் கேட்​டுக் கேட்டு மத​போ​த​க​ரின் மகள் ஹேரி​யட் பீச்​சர் ஸ்டோவ் மனம் நெகிழ்ந்து எழு​திய காவி​யம்​தான் "அங்​கிள் டாம்ஸ் கேபின்'.​

இரண்டு பாகங்​க​ளைக் கொண்ட மிகப்​பெ​ரிய நூலாம் "அங்​கிள் டாம்ஸ் கேபின்' 1852-ம் ஆண்டு வெளி​யி​டப்​பட்​டது.​ இது​தான் ஹேரி​யட் எழு​திய முதல் நூல்.​ அந்​நூல் அச்​ச​டித்து வெளி​யான ஐயா​யி​ரம் பிர​தி​க​ளில் முதல் நாளே மூவா​யி​ரம் பிர​தி​கள் விற்​றுத் தீர்ந்​தன.​ மீத​முள்ள இரண்​டா​யி​ரம் பிர​தி​க​ளும் அடுத்த நாளே விற்​கப்​பட்​டு​விட்​டன.​

இந்​நூல் வெளி​யான ஓராண்​டுக்​குள் மூன்று லட்​சம் பிர​தி​கள் அமெ​ரிக்​கா​வில் மட்​டும் விற்​றன.​ அக்​கா​லத்​தி​லேயே நவீன விசை​யால் இயங்​கிய எட்டு அச்சு இயந்​தி​ரங்​கள் இரவு பக​லாக ஓடி இந்த நூலைத் தொடர்ந்து அச்​ச​டித்த வண்​ண​மி​ருந்​தன.​ இரண்டே ஆண்​டு​க​ளுக்​குள் உல​கெங்​கும் சுமார் அறு​பது மொழி​க​ளில் இந்​நூல் மொழி​யாக்​கம் செய்​யப்​பட்டு வெளி​வந்​தது.​

ஹே​ரி​யட்​டின் நூல் ஆதிக்க நிற​வெ​றிக்கு எதி​ராக ஒரு பெரும் போரை உரு​வாக்க மக்​களை ஆயத்​தப்​ப​டுத்த முனைந்​தது.​ ""இந்த உள்​நாட்டு யுத்​தத்தை உரு​வாக்​கிய புத்​த​கத்தை எழு​திய சிறு​பெண்'' என்று ஹேரி​யட் குறித்து,​​ ஆப்​ர​காம் லிங்​கன் கருத்​துத் தெரி​வித்​துள்​ளார்.​

ச​மூ​கப் போக்​கு​க​ளைச்​சாடி மனித குலத்​தைச் சிந்​திக்க வைக்​கும் புத்​த​கங்​கள் வெளி​வந்​த​தைப் போலவே,​​ இயற்கை குறித்​தும்,​​ மனி​த​குல வர​லாறு பற்​றி​யும்,​​ ஆய்வு நோக்​கி​லும் அறி​வி​யல் பார்​வை​யி​லும் நூல்​கள் பல வெளி​வ​ரத் தொடங்​கின.​ இந்த வரி​சை​யில் டார்​வின் எழு​திய "உயி​ரி​னங்​க​ளின் தோற்​று​வாய்' மனி​த​னின் வழி​வ​ழி​யாக வந்த சிந்​த​னைப் போக்​கையே மடை​மாற்​றம் செய்​வித்​தது.​

"பீகிள்' என்ற ஆய்​வுக் கப்ப​லில் பய​ணித்து ஐந்​தாண்​டு​கள் மேற்​கொண்ட கட​லாய்​வுக்​குப் பிறகு அப்​போது கிடைக்​கப்​பெற்ற விலங்​கு​க​ளின் எலும்​புக் கூடு​கள்,​​ ராட்​சத ஆமை​கள்,​​ புழு பூச்​சி​கள்,​​ விநோத விலங்​கி​னங்​கள்,​​ தாவ​ரங்​கள் போன்​ற​வற்​றைக் கொண்டு ஆழ​மா​க​வும் வித்​தி​யா​ச​மா​க​வும் ஆய்​வு​களை மேற்​கொண்​டார் விஞ்​ஞானி ​ டார்​வின்.​

இந்த ஆய்​வின் விளை​வாய் "இயற்​கை​யின் தோற்​றம்',​ "வாழ்க்​கைப் போராட்​டம்',​ "தகுதி மிக்​கது மிஞ்​சு​வது' என்ற தனது அரி​தி​னும் அரி​தான கண்​டு​பி​டிப்​பு​களை உள்​ள​டக்கி "உயி​ரி​னங்​க​ளின் தோற்​று​வாய்' என்ற பூவு​ல​கச் சிந்​த​னை​யைப் புரட்​டிப் போட்ட நூலை எழு​தி​மு​டித்​தார்.​ இந்​நூல் புதிய கேள்​வி​யை​யும் பல​ரின் மத்​தி​யில் சர்ச்​சை​யை​யும் உரு​வாக்​கி​யது.​ ஆனால்,​​ காலத்தை வென்ற கருத்​துக் கரு​வூ​ல​மாக அந்​நூல் இப்​போது உல​கோ​ரால் ஒப்​புக் கொள்​ளப்​பட்​டுள்​ளது.​

டார்​வி​னின் சம​கா​லத்​தில் வாழ்ந்த கார்ல் மார்க்​ஸின் "மூல​த​னம்' என்ற நூல் இதே அள​வுக்கு உல​கின் கவ​னத்தை ஈர்த்​தது.​ மனி​த​குல சமூ​கப் பொரு​ளா​தார அடிப்​படை மாற்​றம் குறித்து "மூல​த​னம்' நூல் அலசி ஆராய்ந்​துள்​ளது.​

"இது​வரை அகில உல​க​ள​வில் தோன்​றிய அறி​ஞர்​கள் அனை​வ​ரும் உல​கின் போக்​கு​களை விமர்​சித்​துள்​ள​னர்,​​ வியாக்​கி​யா​னம் செய்​துள்​ள​னர்.​ ஆனால்,​​ கார்ல் மார்க்ஸ் தனது "மூல​த​னம்' நூலின் மூல​மாக உலகை மாற்றி அமைக்​கிற சூத்​தி​ரத்​தைச் சொல்​லி​யி​ருக்​கி​றார்' என்று "மூல​த​னம்' வெளி​வந்த பிறகு தத்​து​வக்​கீர்த்​தி​மிக்​கோர் தங்​க​ளது கருத்தை வெளி​யிட்​டுள்​ள​னர்.​

"மூல​த​னம்' நூலை உரு​வாக்​கப் பதி​னைந்து ஆண்​டு​கள் முழுக்க முழுக்க ஐக்​கி​யப்​பட்டு ஈடு​பாட்​டோடு அர்ப்​ப​ணித்து உழைத்​தார் கார்ல் மார்க்ஸ்.​ இந்த நூலை உரு​வாக்​கு​வ​தில் உட​னி​ருந்து அரும்​ப​ணி​யாற்​றி​ய​தோடு,​​ முறைப்​ப​டுத்தி அச்​சிட்டு வெளிக்​கொ​ணர்​வ​தில் தோழ​மைக்கு இலக்​க​ணம் வகுத்த கார்ல் மார்க்​ஸின் நெருங்​கிய தத்​து​வ​யி​யல் ஆய்​வா​ளர் பிர​ட​ரிக் எங்​கெல்ஸ் பெரும் பங்​காற்​றி​யுள்​ளார்.​ ஒரு நூல் சமூக அமைப்பை மாற்​றும் வல்​ல​மை​யு​டை​யது என்​ப​தற்கு "மூல​த​னம்' ஒரு சிறந்த முன்​னு​தா​ர​ணம்.​

"எத்​தனை நூல்​களை வாசிக்​கி​றோம் என்​ப​தல்ல...​ எத்​த​கைய நூல்​களை வாசிக்​கி​றோம் என்​ப​து​தான் முக்​கி​யம்'' என்​றார் ஜவா​ஹர்​லால் நேரு.​ ​

ஒரு "சத்​திய சோதனை' நெல்​சன் மண்​டே​லாவை சிந்​திக்​கத் தூண்​டி​யது போல,​​ ஒரு "திருக்​கு​றள்' மகாத்மா காந்​தி​ய​டி​களை வியப்​புக்​குள்​ளாக்​கி​யது போல,​​ நம் மண்​ணில் தோன்​றிய மாபெ​ரும் மனி​தர்​க​ளின் மகத்​தான கருத்​து​கள் ஞானப் பெட்​ட​கங்​க​ளா​கப் புத்​தக வடி​வில் நம்​முன் விரிந்து கிடக்​கின்​றன.​

இல்​லந்​தோ​றும் நூல​கங்​களை உரு​வாக்க நாம் உறு​தி​யேற்க வேண்​டும்.​ "நூல​க​மில்லா ஊரில் குடி​யி​ருக்க வேண்​டாம்' என்ற புது​மொ​ழியை திக்​கெட்​டும் பரப்ப வேண்​டும்.​ "நல்ல நூல்​களே நல்ல நண்​பர்​கள்' என்ற சிந்​தனை இளைய நெஞ்​சங்​க​ளின் இத​யத்​தில் கல்​வெட்​டாய்ப் பதிக்​கப்​பட வேண்​டும்.

2 comments:

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.