உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, May 4, 2010

அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டவர் பார்ப்பது 'ஒயிட் காலர்' வேலைகள்தான்

உலகின் பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவோர், 'ஒயிட் காலர்' வேலைகளான நிர்வாகம், தொழில்நுட்பம் போன்றவற்றில் தான் பணியாற்றுகின்றனர் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பிற நாடுகளிலிருந்து குடியேறுவோர் பற்றிய ஆய்வு ஒன்றை அந்நாட்டுப் பத்திரிகையான 'தி நியூயார்க் டைம்ஸ்' நடத்தியது. இதில் ஆயிரத்து 600 இளைஞர்கள் பங்கு கொண்டனர். பிற நாடுகளிலிருந்து குடியேறுவோரில் யார் மீது அமெரிக்கர்களின் விருப்பமும், யார் மீது வெறுப்பும் இருக்கிறது என்பது குறித்தும் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உற்பத்தி, தூய்மைப் பணி, கட்டுமானம் போன்ற 'ப்ளூ காலர்' வேலைகளை விட, நிர்வாகம், தொழில்நுட்பம் போன்ற 'ஒயிட் காலர்' வேலைகளில் தான் பெரும்பான்மையான வெளிநாட்டவர் இருக்கின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவின் பாஸ்டன், நியூயார்க், சான்பிரான்ஸிஸ்கோ உள்ளிட்ட முக்கியமான 25 நகரங்களில் 14 நகரங்களில் இதுதான் நிலைமை. அமெரிக்காவின் பெருநகரங்களில் தற்போது இரண்டரைக் கோடி பேர் 'ஒயிட் காலர்' வேலை பார்க்கும் வெளிநாட்டவர்தான்.

இந்த ஆய்வு, அமெரிக்க அரசியல்வாதிகள், வல்லுனர்கள், பிரபல வக்கீல்கள் ஆகியோர் கொண்டிருந்த, 'அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பெரும்பாலும் குறைந்த சம்பளத்தில்தான் வேலை பார்க்கின்றனர்' என்ற கருத்தை உடைத்துள்ளது.அமெரிக்கர்கள் ஏழையாயிருந்தாலும் பணக்காரராயிருந்தாலும், அதிகத் திறமையுள்ள வெளிநாட்டவரை அவர்கள் நேசிக்கின்றனர்'என்கிறார் அமெரிக்க அரசியல் ஆர்வலர் ஜென்ஸ் ஹெய்ன்முல்லர்.

ஆனால்,சாதாரண குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் வெளிநாட்டவரை, 60 சதவீதத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வெறுக்கின்றனர் என்றே இந்த ஆய்வு காட்டுகிறது. இதனால் தற்போது, அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டவர்கள் பற்றிய கொள்கையில் அந்நாட்டு அரசு மாற்றம் கொண்டுவரக் கூடும். இதன் மூலம் அதிகத் திறமையுள்ளவர்கள் மட்டுமே அங்கு குடியேற வழிவகுக்கப்படும். அதற்கான முயற்சிகளை அந்நாட்டு அரசியல்கட்சிகள் எடுத்து வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.