You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: August 2010
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Thursday, August 19, 2010

ஓவியக்கண்காட்சி

நடிகர் சிவக்குமார் அவர்கள் திறந்து வைத்த திருமதி மேனகா நரேஷ் அவர்களின் ஓவியக்கண்காட்சி துளிகள்Tuesday, August 17, 2010

ஓவிய கண்காட்சி

திருமதி மேனகாநரேஷ் அவர்களின் ஓவிய கண்காட்சி

துவக்க விழா:

18.08.2010, மாலை 6.00 மணிக்கு

துவக்கி வைப்பவர்:


நடிகர் சிவக்குமார் அவர்கள்கண்காட்சி நடைபெறும் நாட்கள்

19.08.2010 முதல்  22.08.2010 வரை

10.00 am - 8.00 pm

தலைப்பு :

“ EVES AND BUDS ” and “ GO GREEN ”


இடம் :

CP ART CENTRE, 1,ELDEMS ROAD,ALWARPET,CHENNAI - 600018

அனைவரும் வாரீர்... அனுமதி இலவசம்...

இதோ அழைப்பிதழ்...

Sunday, August 8, 2010

Minjur Desalination Plant

The Minjur desalination plant is the largest desalination plant in India.It is located in Kattupalli village near Minjur about 35km north of the state capital city, Chennai.The plant is established on 60 acre site at a cost of Rs.600 crore. Note : The second largest plant is in Jamnagar, Gujarat, with a capacity of 96 Million Litres per Day (MLD).

The Minjur desalination plant consists of 8,600 sea water reverse osmosis (RO) membranes.The pre-treatment of the raw sea water will include coagulation-flocculation, gravity and pressure filtration.

Minjur desalination plant Supplies 100-million-litres-a-day to the Chennai Metro water at the rate of Rs.48.66 per 1,000 litres (0ne litre Rs 4.86)

The facility has been implemented on a design, build, own, operate and transfer basis by Chennai Water Desalination Limited (CWDL), which is a special purpose vehicle of IVRCL Infrastructures and Project Limited and Befesa Aqua, Spain

The plant  produces potable water using reverse osmosis (RO) technology and serves an estimated population of 500,000 in Chennai.

The plant was originally scheduled to be opened in January 2009. The work on the plant, however, was delayed due to Cyclone Nisha in October 2008. The cyclone had damaged a portion of the completed marine works and also destroyed the cofferdam used for installation of transition pipes.
Chennai has a chronic water problem as the city depends extensively on ground water, replenished by an average rainfall of 1,276mm. The coastal city receives about 985mld of water from ground and surface water sources against the demand of 1,200mld. The demand is expected to increase to about 2,700mld by 2031. The underground aquifers are getting depleted at an alarming rate due to an increase in groundwater usage.

"The state government has decided to alleviate the freshwater problems by the desalination of sea water. Besides the Minjur plant, the Chennai Metropolitan Water Supply and Sewerage Board (CMWSSB) is also constructing a 100mld capacity desalination plant at Nemmeli, which is expected to be operational by December 2011.

Water from the desalination plant will be supplied for industrial purposes such as the Ennore Port Trust and North Chennai thermal power plant. The water will be supplied to public during droughts.

Minjur desalination plant design

The Minjur desalination plant consists of 8,600 sea water RO membranes, 248 pressure vessels, 23 pressure exchangers, five high-pressure pumps, 16 pressure filter vessels, electrical, automation and control systems, and a 1,200m of HDPE pipeline of 1,600mm diameter.

The CMWSSB has laid a 33km pipeline with a cost of INR930m ($20m) to carry the treated fresh water from Minjur to Red Hills. The project also includes infrastructure for the collection of seawater. A 110kV/22kV sub-station has been set up by the Tamil Nadu Electricity Board for uninterrupted power supply to the desalination plant.

A thorough environmental impact study was conducted to establish the effect of the plant on the livelihoods of fishermen and other communities. Studies were also conducted on the impact of high saline discharge on the fisheries and turtle nesting before the construction of the plant.

Sea water treatment process

Pre-treatment of the raw sea water, containing up to 6.4ppm aluminium and about 50NTU of turbidity, includes coagulation-flocculation, gravity and pressure filtration.

After filtration, the water is pumped to the plant. Here, it undergoes preliminary treatments before being passed through the RO trains. The water is forced through the RO membranes at high pressure. The membranes retain salts and pass the desalinated water.

The final water product from the RO system undergoes the post-treatment process. Flavour is added to the fresh water and stored in a 20mld underground water tank. It is then pumped to the Red Hills reservoir before releasing into the city grid.

The RO technology of the plant  produces 100mld of desalinated water from 273 million litres of sea water.

Chennai Water Desalination (CWDL) is executing the project for the CMWSSB on a design, build, own, operate and transfer (DBOOT) basis.

"The water will be supplied to public during droughts."In September 2005, the CMWSSB signed a bulk water purchase agreement (BWPA) with CWDL to purchase water from the Minjur desalination plant at a cost of INR48.66/m³ ($1.03/m³). It will be sold to industries at a rate of INR60/m³ ($1.27/m³). At the end of the 25-year agreement, the plant will be transferred to the state government of Tamil Nadu.

CWDL is a special-purpose vehicle established by the consortium of IVRCL Infrastructure and Projects and Befesa Agua. IVRCL holds 75% and Befesa holds 25% stake in CWDL.

The RO membranes for the plant were supplied by Hydranautics. Bekaert provided the pressure vessels, while Flowserve supplied the high-pressure pumps. The filter pressure vessels were provided by Hindustan Dore Oliver and the pressure exchanger by Energy Recovery (ERI).

The automation and control systems were supplied by Telvent while Siemens, ABB and Schneider supplied the electrical system. The HDPE pipes were provided by Pipelife Norge and Jain Irrigation.

Saturday, August 7, 2010

அறிவியல் தகவல்கள்

 வவ்வால்

சி​றிய வவ்வால்​க​ளால் பார்க்க முடி​யாது.​ அவற்​றிற்கு வெளிச்​ச​மும் அவ​சி​ய​மில்லை.​ அவை வாயாலோ,​​ மூக்​காலோ ஒரு​வித ஓசையை எழுப்​பு​கின்​றன.​ இதை "அல்ட்​ரா​சா​னிக் ஓசை' என்று சொல்​வார்​கள்.​ மனி​தர்​க​ளால் இந்த ஓசை​யைக் கேட்க முடி​யாது.​ இந்த ஓசை,​​ முன்​னால் உள்ள பொருட்​க​ளின் மீது பட்​டுத் திரும்பி வரும்.​ இப்​ப​டித் திரும்பி வரும் எதி​ரொ​லி​யின் தன்​மை​யைப் புரிந்​து​கொண்டு,​​ இந்​தப் பொருட்​க​ளின் பரு​ம​னை​யும்,​​ வடி​வத்​தை​யும்,​​ அது இருக்​கின்ற தூரத்​தை​யும்,​​ அதன் அசை​வை​யும் வவ்வால்கள் தெரிந்​து​கொள்​ளும்.​ ​

வ​ளர்ந்த பெரிய வவ்வால்​கள் பார்​வைத் திற​னைப் பயன்​ப​டுத்​தி​தான் இரவு நேரங்​க​ளில் பறக்​கின்​றன.​ வவ்வால்​கள் பொது​வாக பழங்​க​ளையே விரும்பி உண்​ணும்.​ வெளி​நா​டு​க​ளில்,​​ மற்ற பாலூட்​டி​க​ளின் உதி​ரத்​தைக் குடிக்​கின்ற வவ்வால்​க​ளும் உண்டு.​
சிப்பிக்குள் முத்து
கட​லின் அடி​யில் வாழ்​கின்ற ஒரு வகை சிப்​பி​கள்​தான் முத்​துக்​களை உண்​டாக்​கு​கின்​றன.​ நன்​நீ​ரில் வாழ்​கின்ற சில சிப்​பி​க​ளி​லும் எப்​போ​தா​வது ​ முத்​துக்​கள் இருக்​கும்.​ முத்​துச் சிப்​பி​யின் ஓடு,​​ இரு பட​லங்​கள் உடை​ய​தா​க​வும்,​ உறு​தி​யா​ன​தா​க​வும் இருக்​கும்.​ அதன் உள்ளே இருப்​பது அதி மென்​மை​யான உடற்​ப​குதி.​ இந்த மென்​மை​யான உடற்​ப​கு​தி​யைக் காப்​ப​தற்​கா​கத்​தான் கடி​ன​மான மேலோடு இருக்​கி​றது.​ உடற்​ப​கு​தியை மூடு​கிற,​​ வெளிப்​பு​றத்​தில் உள்ள சவ்வை "மான்​டில்' என்று குறிப்​பி​டு​வார்​கள்.​ இந்த மான்​டி​லுக்​கும்,​​ மேலோட்​டிற்​கும் இடை​யில் எதிர்​பா​ரா​த​வி​த​மாக ஏதா​வது மணல் துகளோ,​​ மற்ற ஒட்​டுண்​ணி​களோ எப்​போ​தா​வது புகுந்​து​வி​டும்.​ இது​போன்று வெளியி​லி​ருந்து உள்ளே நுழை​யும் பொருள் சிப்​பி​யின் உட​லில் ஒரு வித​மான உறுத்​தலை  உண்​டாக்​கும்.​ இப்​படி உறுத்​தலை ஏற்​ப​டுத்​தித் தொல்லை தரும் பொருளை வெளி​யேற்ற முடி​யா​மல் போகும்​போது,​​ அப்​பொ​ரு​ளி​னால் ஏற்​ப​டும் தொல்​லை​யைத் தவிர்ப்​ப​தற்கு சிப்பி ஒரு செய​லைச் செய்​யும்.​
மான்​டில் என்று சொல்​லப்​ப​டும் இப்​ப​ட​லத்​தின் ஓரத்​தில் கொஞ்​சம் செல்​கள் இருக்​கின்​றன.​ அவற்றி​லி​ருந்து கால்​சி​யம் கார்​ப​னேட்​டின் ஒரு​வித நீர்​மப் பொருள் தோன்​றும்.​ இந்தத் திர​வம் உள்ளே நுழைந்த பொருளை மூடும்.​ மீண்​டும் மீண்​டும் இந்த திர​வம் உரு​வாக்​கப்​பட்டு அது அந்​தப் பொரு​ளின் மீது படிந்​த​ப​டி​யி​ருக்​கும்.​ இப்​ப​டிப் படிந்​தவை கெட்​டிப்​பட்​டுத்​தான் முத்​தாக மாறு​கி​றது.​ ​

சிப்​பி​கள் கட​லின் அடி​யில் உள்ள பாறை​க​ளில் ஒட்​டிக்​கொண்​டு​தான் இருக்​கும்.​ முத்​தெ​டுப்​ப​வர்​கள் இவற்​றைப் பெயர்த்​தெ​டுத்து மேலே கொண்டு வரு​வார்​கள்.​ இவர்​கள் கொண்டு வரு​கின்ற எல்லா சிப்​பி​க​ளி​லும் முத்​துக்​கள் இருக்​காது.​ ஒரு சில​வற்​றில்​தான் முத்​துக்​கள் இருக்​கும்.​ ​

மு​தன் முத​லாக முத்து விவ​சா​யத்​தைத் தொடங்​கி​யது ஜப்​பா​னி​யர்​கள்​தான்.​ முத்​துச் சிப்​பி​க​ளால் கட​லின் அடி​யில் வாழ முடி​யாத சூழ்​நிலை ஏற்​ப​டும்​போது,​​ சிப்​பி​க​ளைப் பொறுக்​கி​யெ​டுத்து பரி​சோ​த​னைச்​சா​லை​யில் வளர்ப்​பார்​கள்.​ பிறகு சிப்​பி​க​ளின் உடற்பகு​தியை லேசா​கக் கீறி,​​ உறுத்​தும் பொருளை உள்ளே செலுத்​து​கி​றார்​கள்.​ பிறகு அவற்​றைக் கூடை​க​ளில் இட்டு கட​லில் வளர்க்​கி​றார்​கள்.​ இரண்டு மூன்று வரு​டங்​க​ளுக்​குப் பிறகு இந்​தச் சிப்​பி​களை எடுத்​துத் திறந்து பார்த்​தால் நன்கு முதிர்ந்த முத்​துக்​கள் கிடைக்​கும்.​ இது​தான் முத்து விவ​சா​யம்.​

முத்​துக்​கள் பல நிறங்​க​ளில் உள்​ளன.​ வெள்ளை,​​ இளஞ்​சி​வப்பு,​​ பழுப்பு நிறம்,​​ நீலம்,​​ மஞ்​சள்,​​ பச்சை,​​ கருப்பு முத​லான நிறங்​க​ளில் முத்​துக்​கள் கிடைக்​கின்​றன.​ முத்​துச் சிப்​பி​யின் உணவு,​​ அது வாழ்​கின்ற தண்​ணீ​ரின் வெப்​பம் முத​லான அம்​சங்​கள் இந்த நிற வித்​தி​யா​சங்​க​ளுக்​குக் கார​ணங்​க​ளாக அமை​கின்​றன.​ அது​போல முத்​துக்​கள் எல்​லாம் உருண்டை வடி​வில்​தான் இருக்​கும் என்​றில்லை.​ நீள உருண்டை வடி​வி​லும்,​​ சது​ர​வ​டி​வி​லும் முத்​துக்​கள் உரு​வா​கும்.​ உருண்டை வடி​வான முத்​துக்​க​ளுக்​குத்​தான் விலை அதி​கம்.​
 ஒட்​ட​கம்.​


உட​லிலி​ருந்து தண்​ணீர் அதிகம் வெளியேறுவதை தவிர்ப்​ப​தற்​கான அமைப்​பு​கள் ஒட்​ட​கத்​தின் உட​லில் உண்டு.​ மனித உட​லின் வெப்​ப​நிலை,​​ வியர்​வை​யின் கார​ண​மாக சீராக வைக்​கப்​ப​டு​கி​றது.​ பாலை​வ​னத்​தில் வெப்​பம் அதி​க​ரிப்​ப​தற்​குத் தகுந்​த​படி தன் உட​லின் வெப்​ப​நி​லையை அதி​க​ரிப்​ப​தற்கு ஒட்​ட​கத்​தால் முடி​யும்.​ அது 41 டிகிரி செல்​சி​யஸ் வரை இப்​படி அதி​க​ரிக்​கும்.​ அந்த வெப்ப அள​வில் ஒட்​ட​கத்​திற்கு வியர்வை வராது.​ மனி​தர்​க​ளுக்கு வியர்​வை​யின் மூல​மாக ஏற்​ப​டு​கின்ற நீரி​ழப்​பு​போல ஒட்​ட​கத்​திற்கு ஏற்​ப​டாது.​ நீரி​ழப்பு ஏற்​பட்​டா​லும், அதை ஏற்​றுக் கொள்​ளும் திறன் அதற்கு உண்டு.​

சா​தா​ரண பாலூட்டிகளின் உட​லில் உள்ள நீர​ள​வில் 20 சத​வீ​தம் இழப்​பா​னால்,​​ பிறகு அந்த உயி​ரி​னத்​தால் வாழ முடி​யாது.​ ஒட்​ட​கங்​க​ளால் 40 சத​வீ​தம் நீரி​ழப்​பைக் கூட தாங்​கிக் கொள்ள முடி​யும்.​ ஒட்​ட​கங்​க​ளின் ரத்​தத்​தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்​க​ளின் பிரத்​தி​யே​கத் தன்​மை​யால்​தான் இந்​த​ளவு நீரி​ழப்பை அது தாங்​கிக் கொள்​கி​றது.​ தவிர,​​ தண்​ணீர் கிடைக்​கும் போது அது மிக மிக அதி​க​மாக தண்​ணீர் குடிக்​கும்.​ ஒட்​ட​கத்​தைப் போன்ற அசை​போ​டும் எல்​லாப் பிரா​ணி​க​ளுக்​கும் வயிற்​றில் நான்கு அறை​கள் இருக்​கும்.​ இந்த நான்கு அறை​க​ளில் முத​லா​வ​தில் உண​வு​டன் கலந்த நிறை​யத் தண்​ணீர் இருக்​கும்.​ இதைத் தவிர,​​ தண்​ணீரை மட்​டுமே சேக​ரித்து வைக்​கும் அமைப்பு எது​வும் ஒட்​ட​கத்​தின் உட​லில் இல்லை.​ அதன் திமி​லில் தண்​ணீர் அல்ல,​​ கொழுப்​பு​தான் சேக​ரித்து வைக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​ உணவு கிடைக்​காதபோது ஒட்​ட​கத்​தின் உடல் இந்​தக் கொழுப்பை உப​யோ​கப்​ப​டுத்​திக் கொள்​ளும்.​

மூச்​சுக் காற்​றின் மூல​மாக நீரா​வி​யின் வடி​வில்,​​ நீர் இழப்​பா​வ​தற்​கான வாய்ப்பு இருக்​கி​றது.​ இந்த இழப்​பைக் குறைப்​ப​தற்கு ஒட்​ட​கத்​திற்கு ஒரு பிரத்​தி​யேக அமைப்பு இருக்​கி​றது.​ அதன் மூக்​கிற்​குள்,​​ காகி​தச் சுருள் போல சுருண்டு கிடக்​கிற ஒரு அமைப்​பு​தான் இது.​ தண்​ணீரை உறிஞ்​சும் திறன் உள்ள மெல்​லிய ஒரு பட​லத்​தால் இந்​தப் பாகம் மூடப்பட்டிருக்கும். நீராவி கலந்த வெப்​ப​மான காற்றை வெளியே விடும் போது,​​ அதி​லுள்ள நீராவி முழு​வ​தை​யும் இந்த பட​லப் பகுதி உறிஞ்​சிக் கொள்​ளும்.​ இப்​படி சாதா​ரண பாலூட்டிகளில் சுவா​சம் மூல​மாக இழப்​பா​கிற நீர்ச்​சத்​தில் 70 சத​வீ​தம் வரை தவிர்க்க ஒட்​ட​கங்​க​ளால் முடி​யும்.​ இதன் உடலி​லி​ருந்து சிறு​நீராக வெளி​யே​று​கிற நீரின் அள​வும் மிகக் குறை​வு​தான்.​ இது​போன்ற கார​ணங்​க​ளால்​தான்,​​ ஒட்​ட​கம் பாலை​வ​னத்​தில் வாழக்​கூ​டிய தகுதி பெற்​றி​ருக்​கி​றது.​
உடலின் வெப்பநிலை சீராகப் பராமரிக்கப்படுவது எப்படி?
தவளை, பாம்பு போன்றவை குளிர் ரத்தப் பிராணிகளாகும். மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகள் வெப்ப ரத்தப் பிராணிகள். இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்? குளிர் ரத்தமாகவோ, வெப்ப ரத்தமாகவோ இருப்பதால் என்ன பயன்?

குளிர் ரத்தப் பிராணிகளின் உடல் வெப்ப நிலை, எப்போதும் ஒரே நிலையில்தான் இருக்கும்.

சூழ்நிலைக்கு ஏற்ப மாறாது. அதாவது, அவற்றின் உடலால் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள முடியாது.

இதன் காரணமாக பாம்பு, தவளை போன்றவற்றின் உடல் மிகவும் குளிர்ந்து விடும்போது, உடல் வெப்பத்தை அதிகரித்துக் கொண்டு உயிர் வாழ அவை வெயிலில் காய்வது உண்டு. அப்படிச் செய்யவில்லை என்றால், ஒரு நிலைக்குமேல் அவற்றால் உயிர்வாழ முடியாது.

ஆனால், நமது வெப்பச் சமநிலையை நம் மூளை பராமரிக்கிறது. நம் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் எனும் ஒரு பகுதி, ஒரு இயற்கை இயந்திரத்தைப்போல இந்தப் பராமரிப்பு வேலையைச் செய்கிறது.

ஹைபோதாலமஸ் பகுதிக்குள் பாய்ந்து செல்லும் ரத்தத்தின் வெப்பநிலையை வைத்தும், வெப்பத்தை நன்கு உணர்ந்துகொள்ளும் தன்மை கொண்ட, தோலின் கீழே முடிவடையும் நரம்புகள் அனுப்பும் தகவல்களின் அடிப்படையிலும்தான் ஹைபோதாலமஸ் செயல்படுகிறது.

வழக்கமான வெப்பநிலையைவிட, உடல் வெப்பநிலை அதிகரித்தால் ஹைபோதாலமஸின் ஒரு பகுதியும், உடல் வெப்பநிலை குறைந்தால் ஹைபோதாலமஸின் மற்றொரு பகுதியும் அவற்றைச் சரியாக உணர்ந்துகொண்டு செயல்படும் வகையில் மூளை அமைந்துள்ளது.

உடலின் வெப்பநிலை தேவையைவிட அதிகரித்தால், வியர்வை மூலம் வெப்பம் வெளியேற்றப்படும்.

அதேநேரம் சுற்றுப்புறம் குளிராக இருந்தால், உடல் மாற்றத்தின் ஒரு பகுதியாக கூடுதல் வெப்பநிலை உருவாக்கப்படும். நடுக்கம்போன்ற தசைச் செயல்பாடுகளும் உருவாக்கப்படும்.

உடல் செயல்பாடுகளின் ஒரு பகுதியான அனிச்சைச் செயல்பாடுகள், நரம்புப் பாதைகளில் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் உடலின் வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.

கடுமையான வெப்பநிலையை தாங்கிக்கொள்ள முடியாமல், உடலில் உள்ள நீர் பெருமளவு வெளியேற நேர்ந்தால், "சன் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்பத்தாக்கு காரணமாக உயிரிழக்கும் அபாயமும் ஏற்படும். இதுபோன்ற ஆபத்துக்களை ஹைபோதாலமஸ்

வெüவால்​கள் பாலூட்​டும் இனத்​தைச் சேர்ந்​தவை.​ அதன் பின் கால்​கள் மிக​வும் பல​வீன​மா​னவை.​ அத​னால் தரை​யில் நிற்​ப​தற்கோ,​​ நடப்​ப​தற்கோ வெüவால்​க​ளால் முடி​யாது.​ தரை​யில் ஊர்ந்து செல்​வ​தற்​கும்,​​ மரத்​தில் ஏற​வும்​தான் அவற்​றால் முடி​யும்.​ பறப்​பதே அவற்​றிற்கு மிக​வும் சுல​ப​மா​னது.​ வெüவால்​க​ளின் இரண்டு முன்​கால்​க​ளி​லும் நீண்ட விரல்​கள் இருக்​கின்​றன.​ இந்த விரல்​க​ளுக்கு இடை​யில் சவ்​வு​போன்ற பகுதி உண்டு.​ இந்த சவ்​வுப் பட​லத்தை சிற​கு​போல விரித்​து​தான் அவை பறக்​கின்​றன.​

Sunday, August 1, 2010

அறிவியல் தகவல்கள்

மின்மினிகள்
மின்மினிகள் தங்கள் இணையைக் கவர்வதற்காகத்தான் மின்னுகின்றன. ஆண் மின்மினிக்கும், பெண் மின்மினிக்கும் இந்த வெளிச்சம் உண்டு. பெண் மின்மினிப் பூச்சியின் வெளிச்சம், ஆண் மின்மினியின் வெளிச்சத்தைவிட குறைந்த நேரம் ஒளிரக் கூடியதாக இருக்கும். மின்மினியின் வயிற்றுப் பகுதியின் பின்புறத்திலிருந்துதான் வெளிச்சம் வருகிறது. அதன் உடலிலுள்ள "லூஸிபெரோஸ், லூஸிபெரின்' எனும் ரசாயனப் பொருட்களின் செயல்பாட்டால்தான் வெளிச்சம் உண்டாகிறது. இந்த செயல்பாட்டிற்கு நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படும். இது வெளிச்சம் மட்டும்தான். சற்றும் வெப்பமாக இருக்காது. மின்மினிகளில் பல இனங்கள் இருக்கின்றன. ஒளிர்வதற்கும் அணைவதற்கும் இடையிலான இடைவெளி, ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். ஒரு மின்மினி தன் இனத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று இன்னொரு மின்மினி, இந்த ஒளிர்ந்தணையும் இடைவெளியை வைத்துத்தான் கண்டுபிடிக்கிறது.

சிலந்தி
சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன.

கங்காரு
கங்காரு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்கு. இதன் குட்டிகள் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்துவிடுகின்றன. பாக்கி வளர்ச்சியெல்லாம் கங்காருவின் வயிற்றுப் பையில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். பிரசவ நேரத்தில் கங்காரு, குட்டி வெளியே வருகிற துளை முதல் வயிற்றின் மேல் பகுதிவரையான பாகத்தை நக்கும். இப்படி நக்கி நக்கி தன் உடல் ரோமத்தின் வழியே ஒரு பாதையை ஏற்படுத்தும். குட்டி இந்தப் பாதை வழியே ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத்தவிர மற்ற உணவை, செரிக்கக்கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி, அம்மாவின் பைக்குள்ளேயேதான் இருக்கும். குட்டியின் உடற்பகுதிகளெல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும். பிறகு எப்போதாவது நரியோ, கழுகோ, மற்ற விலங்குகளோ பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஏறி ஒளிந்துகொள்ளும்.

கடல்குதிரை
மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.

முள்ளம் பன்றி
எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகத்தான் முள்ளம் பன்றிக்கு முட்கள் அமைந்துள்ளன. எதிரிகள் தாக்க வரும்போது முள்ளம் பன்றி முட்களையெல்லாம் நிமிர்த்திக்கொண்டு விறைப்புடன் நிற்கும். எதிரிகள் முட்களை சரியாகப் பார்க்கும்படி முதுகு காட்டிதான் நிற்கும். சில சமயம் முட்களை ஒன்றாக மெதுவாக அசைக்கும். இதைப் பார்த்தும் எதிரி பயந்தோடவில்லையென்றால், பின்புறமாகவே விரைந்து வந்து எதிரியின் உடலில் முட்களைச் செருகும். எவ்வளவு சக்தியுள்ள பெரிய மிருகமாக இருந்தாலும் முள்ளம் பன்றியின் முள் குத்தினால் பெரும் சிரமம்தான். முள்ளம் பன்றியால் தாக்கப்பட்ட விலங்கு சில சமயம் இறந்துவிடுவதும் உண்டு. விருப்பப்படி அசைக்க முடிகிற தளர்வான தசைகளில்தான் முட்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தசைகளை தளர்த்தியும் இறுக்கியும், முட்களைப் படிய வைக்கவோ உதிர்க்கவோ முள்ளம் பன்றிகளால் முடியும்.

முள்ளம் பன்றியால் குத்துப்பட்ட மிருகத்தின் உடலில் தைத்த முள்ளின் முனைகள் சிறிய கொக்கிகளைப்போல நிமிர்ந்து மடங்கி உட்சென்றுகொண்டிருக்கும். எதிரிகளிடமிருந்து ஓடியோ, ஒளிந்தோ, தப்பிக்க இயலாதவை முள்ளம் பன்றிகள். அதனால்தான் இயற்கை முட்களின் பாதுகாப்பை இவற்றிற்கு வழங்கியுள்ளது. முட்களற்ற பகுதி முள்ளம் பன்றியின் வயிறுதான். இது உடலில் மிகவும் மென்மையான பகுதி. எதிரிகள் இந்தப் பகுதியை பற்றிவிட்டால் முள்ளம் பன்றி வசமாகச் சிக்கிக் கொண்டுவிடும். எதிரிகளைக் கண்டால் சில சமயம் இவை உடலைச் சுறுட்டிக்கொண்டு பந்துபோலக் கிடக்கும். இந்த நிலையில், முட்களற்ற பகுதி வெளியே தெரியாது. ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் முள்ளம் பன்றிகள் வசிக்கின்றன.

தேனீக்கள்

தேனீ அதன் மூக்காலோ,​​ வாயாலோதான் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.​ அது உண்மையில்லை.​ தேனீயிடமிருந்து வரும் ரீங்கார ஓசை, அதன் இறகுகளின் மிக விரைவான துடிப்பால்தான் ஏற்படுகிறது.​ அப்படி இறகுகள் துடிப்பதன் மூலம்தான் தேனீ பறக்கிறது.​ அதன் இறகுகள் நொடிக்கு நானூறு முறை துடிக்கின்றன.​ அதிவிரைவான இந்த அசைவு காற்றில் உண்டாக்குகிற அதிர்வு நம் காதை அடையும் போது நாம் அதை ரீங்காரமாக உணர்கிறோம்.
சமூக வாழ்க்கை நடத்தும் தேனீக்களின் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீதான் இருக்கும்.​ அந்தக் கூட்டில் அதுதான் சர்வாதிகாரி.​ கூட்டில் இன்னும் இரண்டு வகை தேனீக்களும் இருக்கும்.​ கூட்டை நிலைக்கச் செய்வதற்காகப் பாடுபடும் பெண் தேனீக்கள் ஒரு வகை.​ இவை இனப்பெருக்க திறனற்றவை.​ இன்னொரு வகை தேனீக்கள்,​​ சோம்பேறியான ஆண் தேனீக்கள்.
ராணித் தேனீ,​​ மற்ற தேனீக்களைவிட உருவத்தில் பெரியதாக இருக்கும்.​ வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான் தேனும்,​​ மகரந்தப் பொடியும் சேகரிக்கும்.​ மெழுகால் கூடு கட்டுவது,​​ கூட்டைச் சுத்தப்படுத்துவது,​​ குஞ்சுத் தேனீக்களுக்கும்,​​ ராணித் தேனீக்கும் உணவு கொடுப்பது முதலான பல வேலைகளையும் பெண் தேனீக்கள்தான் செய்கின்றன.​ ​

வேலைக்காரத் தேனீக்கள் சேகரித்து வைத்த தேனைக் குடிக்கின்ற வேலையைத்தான் சோம்பேறிகளான ஆண் தேனீக்கள் செய்யும்.​ ஆண் தேனீக்களின் உடல் அமைப்பும்,​ தேனோ மகரந்தமோ சேகரிப்பதற்கு ஏற்ற விதத்தில் இருக்காது.​ இவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்.​ இவை குறிப்பிட்ட காலங்களில் ராணித் தேனீயுடன் இணை சேர்கின்றன.​ தேனீக்களின் சமூக வாழ்க்கை நிலைப்பதற்கு ஆண் தேனீக்கள் மிகவும் அவசியம்.​ ராணித் தேனீக்கள் கூட்டின் அதிபதிகள் என்பதில் சந்தேகம் இல்லை.​ ஆனால் இவை அத்தனை வேலைக்காரத் தேனீக்களையும் சார்ந்து வாழ்கின்ற "முட்டையிடும் இயந்திரங்கள்" மட்டுமே.

ராணித் தேனீக்களின் மூளை,​ வேலைக்காரத் தேனீக்களின் மூளையைவிட சிறியதாக இருக்கும்.​ ஆனால்,​​ ராணித் தேனீ மட்டும்தான் முட்டையிடும் திறன் பெற்றிருக்கிறது.​ கூட்டில் ஒன்றிற்கும் அதிகமான ராணிகள் இருப்பதற்கு,​​ ஏற்கனவே கூட்டில் இருக்கும் ராணி அனுமதிப்பதில்லை.​ ராணித்தேனீ முட்டையிடும்.​ முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ராணியாக வேண்டுமா அல்லது வேலைக்காரர்கள் ஆகவேண்டுமா என்று முடிவு செய்வது வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான்.
வேலைக்காரத் தேனீக்கள் குறிப்பிட்ட காலங்களில் சில முட்டைகளை கூட்டின் கீழ் முனையில் அமைத்திருக்கிற "ராணியறை'களுக்கு மாற்றுகின்றன.​ ஒவ்வொரு தேன் கூட்டிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் ராணியறைகள் இருக்கும்.​ ஆனால் அவை மற்ற அறைகளைவிட மிகப் பெரிதாக இருக்கும்.​ ராணியறைகளில் பிறக்கின்ற குஞ்சுகளுக்கு வேலைக்காரத் தேனீக்கள் பிரத்தியேகமான உணவை ஊட்டுகின்றன.​ இங்கே வளர்ந்து வருகிற பெண் தேனீக்கள்தான் எதிர்காலத்தில் ராணித் தேனீக்களாக இருக்கும்.​ ராணித் தேனீக்களின் பிரத்தியேகத் தன்மைகளுக்கு முக்கியக் காரணம்,​​ அவற்றின் உணவு முறையில் உள்ள மாற்றம்தான்.

புதிய ராணி வெளியே வரும்போது,​​ ஏற்கனவே இருக்கும் ராணி கூட்டமான வேலைக்காரத் தேனீக்களுடன் இடத்தை விட்டுச் சென்றிருக்கும்.​ அவை வேறொரு இடத்தில் புதிய கூடமைத்து வாழத் தொடங்குகின்றன.​ சில சமயம் அறைகளின் மேல் படலத்தைத் திறந்து வெளிவரும் புதிய ராணிகள் இதுபோன்று வேலைக்காரத் தேனீக்களுடன் இடம் விட்டுச் செல்கின்றன.​ ஒன்றிற்கு மேற்பட்ட ராணிகள் ஒரே நேரத்தில் வெளியே வரும்போது,​​ அவர்களுக்கிடையே மிகக் கடுமையான சண்டை நடக்கும்.​ ஒரு ராணி மட்டுமே மிஞ்சும்வரை இந்தப் பலப்பரீட்சை தொடரும்.​ புதிதாக வெளியே வந்த ராணிக்கும்,​​ கூட்டில் ஏற்கனவே இருந்துகொண்டிருந்த ராணிக்கும் இடையே யாராவது ஒருவர் வெற்றி பெறுவதுவரை போட்டி நடக்கிறது.​ அதனால் ஒரு தேன் கூட்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட ராணிகள் இருக்கும் நிலை ஏற்படுவதில்லை.

தேனீக்கள்
தேனீக்கள் நிறைய தேன் உள்ள பூக்களுடைய ஒரு இடத்தைக் கண்டுபிடித்த பிறகு, திரும்பி வந்து அந்தச் செய்தியை மற்ற தேனீக்களிடம் தெரிவிக்கின்றன.​ இத்தகைய கருத்துப் பரிமாற்றத்திற்காக,​​ அவை குறிப்பிட்ட விதமான நடன முறையைக் கையாள்கின்றன.​ ஒன்று,​​ வட்டத்திற்குள் வட்டமாகப் பறப்பது.​ இந்த நடன முறைக்கு,​​ தேனுள்ள இடம் கூட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் உள்ளது என்று அர்த்தம்.​ இந்தச் செய்தியைத் தெரிவிக்கும் நடனத்தை ஆடிக்கொண்டே அந்தத் தேனீக்கள்,​​ தான் சேகரித்த உணவை கூட்டினுள்ளே இருக்கும் மற்ற தேனீக்களுக்குக் கொடுக்கும்.​ இதன்மூலம்,​​ நூறு மீட்டர் தொலைவில் அது கண்டுபிடித்த உணவின் சுவையையும்,​​ மணத்தையும் மற்ற தேனீக்கள் புரிந்துகொள்ளும்.​ உடனே அனைத்துத் தேனீக்களும் நாற்புறமும் பறந்து அந்த பூக்களைத் தேடிப் போகும்.​ இந்த "வட்ட நடன'த்திலிருந்து,​​ நூறு மீட்டர் தொலைவில் பூக்கள் இருக்கின்றன என்று அறிந்துகொள்ளலாமே தவிர,​​ பூக்கள் இருக்கும் சரியான இடத்தை ​ புரிந்துகொள்ள முடியாது.​ அதனால்தான் அவை குறிப்பிட்ட இலக்கு நோக்கிச் செல்லாமல் நாற்புறமும் பறந்து தேடப் போகின்றன.

    தேனுடைய பூக்கள் இருக்கும் இடத்தைச் சரியாகத் தெரிவிக்கும் நடனமுறை ஒன்றும் தேனீக்களிடம் உண்டு.​ இந்த முறைக்கு "வேகல்' (waggle)​​ நடனம் என்று பெயர்.​ முதலில் தேனீ நேர்க் கோடாக பலமாக நடுங்கிச் செல்லும்.​ சற்று மேலாகச் சென்ற பிறகு ஒரு புறமாகத் திரும்பி கீழே வந்து மீண்டும் முதலாவது நேர்க்கோடு வழியே மேலே செல்கிறது.​ பிறகு முதலில் திரும்பியதற்கு எதிர்த்திசையில் திரும்பி ​ கீழே வந்து மீண்டும் நேர்க்கோட்டில் திரும்பி மேலே செல்கிறது .​ நடனமாடும் தேனீ,​​ இந்த நடனத்தின் மூலமாக மற்ற தேனீக்களுக்கு இரண்டு விஷயங்களைத் துல்லியமாக அறிவிக்கிறது.​ ஒன்று,​​ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உணவு கிடைக்கும் இடம்,​​ கூட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்ற விஷயம்.​ இரண்டு,​​ சூரியனையும்,​​ கூட்டையும் தொடர்புபடுத்துகிற நேர்க்கோட்டிலிருந்து எத்திசையில் எவ்வளவு சரிவான கோணத்தில் அந்த இடம் அமைந்திருக்கிறது என்பது.

நடனத்தின் வேகத்திலிருந்தும்,​​ அதே நடனத்தை திரும்பத்திரும்பச் செய்வதிலிருந்தும் உணவு இருக்கும் இடம் எத்தனை தொலைவில் இருக்கிறது என்று மற்ற தேனீக்களுக்குத் தெரிந்துவிடும்.​ அது மட்டுமல்ல,​​ போகவேண்டிய இடம் கூட்டிலிருந்து சூரியனுக்கு நேராக இருக்கிறதா?​ அல்லது எதிர்திசையில் இருக்கிறதா?​ பக்கவாட்டில் இருக்கிறதா என்பதுபோன்ற விவரங்களும் சரியாகப் புரிந்துவிடும்.​ நடனம் அதிக நேரம் நீடித்தால் உணவு மிக நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கால்வோன்ப்ரிஷ் எனும் உயிரியல் விஞ்ஞானிதான் ஆய்வு செய்து,​​ தேனீக்களின் இந்த செய்திப் பரிமாற்றத்தைக் கண்டுபிடித்தார்.​ ​ ​ ​

தேனீக்களின்,​​ அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவருகிற லார்வாக்களின் முக்கிய உணவு தேன்தான்.​ பூவிலுள்ள தேனும்,​​ தேன் கூட்டிலுள்ள தேனும் வித்தியாசமானவை.​ தேனீ,​​ பூவிலிருந்து தேனெடுத்த பிறகு அந்தத் தேன் நேராக,தேனீயின் வயிற்றிலுள்ள இரண்டு அறைகளில் முதலாம் அறைக்குச் செல்லும்.​ ஒரு சிறிய "வால்வி 'ன் செயல்பாட்டினால் இந்தத் தேன் இரண்டாவது அறைக்குக் கடப்பதில்லை.​ பூவிலிருந்து சேகரித்த தேனுடன் கூட்டை அடைகிற தேனீ,​​ இந்தத் தேனை கூட்டில் உள்ள சில பிரத்தியேக தேனீக்களுக்குக் கொடுக்கிறது.​ அவை ஒன்றுக் கொன்று இந்தத் தேனை "கை'மாற்றிக் கொள்கின்றன.​ இந்த செயல்களுக்கிடையில் அதில் சில நொதிகள் (enzyme)​ சேரும்.

அதன்பிறகு இந்தத் தேன்,​​ கூட்டின் பிரத்தியேக அறைகளில் பாதுகாக்கப்படுகிறது.​ சில பிரத்தியேக தேனீக்கள்,​​ அவற்றின் சிறகுகளை விசிறியாகப் பயன்படுத்தி தேனில் உள்ள நீர்மையின் அளவைக் குறைக்கின்றன.​ இப்போது தேன் கூட்டில் தேன் தயாராகிறது.​ ஒரு சாதாரண தேன் கூட்டில் 45 கிலோகிராம் வரை தேன் சேகரிக்கலாம்.​ ஒரு கிலோகிராம் தேனுண்டாக்க ஒரு தேனீ ஒரு கோடி பூக்களிலிருந்து தேன் சேகரிக்கவேண்டும்.​ ஒரு பயணத்தில் ஒரு தேனீ 600 பூக்களைச் சந்திக்கும்.​ பூக்களிலிருந்து மட்டுமல்ல,​​ தேன் உண்கிற சில உயிரினங்களின் எச்சங்களிலிருந்தும் தேனீ தேன் சேகரிப்பதுண்டு.​ தேனீக்களுக்கு தேன்தான் முக்கியமான உணவு.​ எனவேதான் அவை தேன் சேகரித்து கூட்டில் பாதுகாக்கின்றன.

பால் தயிராவது எப்படி?

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதைவிட அதிகமான பாக்டீரியாக்கள் நமக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இல்லையென்றால், நாம் சாப்பிடும் உணவு செரிக்காது. நாமெல்லாம் உயிர் வாழவே முடியாது.

இப்படி சம்பளம் வாங்காமல் நமக்குச் சேவை செய்யும் பாக்டீரியாக்கள் எங்கிருந்து வருகின்றன?

நாமே நிறைய பாக்டீரியாக்களை மறுஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் தயிர். உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுடனும், மற்றொரு பொருள் சேரும்போது வேதிவினை நடக்கிறது. அதேபோல, பாலில் கொஞ்சம் தயிரை ஊற்றி உறை ஊற்றும் போது பாலில் வேதிவினைதான் நடக்கிறது. (சமைப்பதே ஒரு வேதியியல்தான்). பொதுவாக, பாலில் புரதச் சத்து அதிகம். இந்தப் புரதச்சத்துதான் நமது எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. பால் தயிராகும்போது, இந்தப் புரதச்சத்து கெட்டியாகி உறையும் செயல்பாடுதான் நடக்கிறது.

ஏற்கனவே உறைந்த தயிரில் "லாக்டோபேசில்லஸ் அசிடோபில்லஸ்' (Lactobacillus acidophilus) என்ற பாக்டீரியா இருக்கிறது. காய்ச்சப்பட்ட பாலில் இந்த உறைந்த தயிரை சிறிதளவு ஊற்றும்போது, பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரைப் பொருளை இந்தப் பாக்டீரியா நொதிக்கச் செய்கிறது. இதன்மூலம் லாக்டிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நேர்மின் ஹைட்ரஜன் அயனியை, பாலின் புரதப் பொருளில் உள்ள எதிர்மின் துகள்கள் ஈர்க்கின்றன. இதன் காரணமாக புரதப் பொருள் சமநிலையை அடைவதால், புரத மூலக்கூறுகள் ஒன்றை ஒன்று எதிர்ப்பதை விட்டுவிட்டு கெட்டியாகி உறைந்துவிடுகின்றன.

லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா செயல்படுவற்கு ஏற்ற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். அதன் காரணமாகத்தான், பால் காய்ச்சப்பட்ட பிறகு தயிர் உறை ஊற்றப்படுகிறது. ஆறிய பாலையும் சற்று வெப்பப்படுத்தி உறை ஊற்றினால், தயிர் நன்றாக உறையும்.

உடலில் உணவு செரிக்கவும், நோய்கள் குணமாகவும் லாக்டோ பேசில்லஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தேவை. இதை உணர்ந்து கொண்டுதான் நமது முன்னோர்கள் தயிர், மோரை அதிகம் சாப்பிடச் சொன்னார்கள். நம் வயிற்றுக்குள் செல்லும் உணவை செரிக்க வைப்பதற்கான சில நொதிகளை, இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தருகின்றன.

ஆக்டோபஸ்

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் முடிவை முன்னரே அறிவித்த ​(?) ஆக்டோபஸ்சை   யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள்.​ ஆக்டோ என்ற லத்தீன் சொல்லுக்கு எட்டு என்று பொருள்.​ பன்னெடுங்காலமாக கடல் பயணம் செய்பவர்களால் பேய் மீன் என்று பேசப்படும் எட்டு கால்களையுடைய அபூர்வ விநோதமான ஜீவராசியே ஆக்டோபஸ்.​ மெல்லுடலிகள் குடும்பத்தைச் சேர்ந்த இவை தலைகாலிகள் என்ற வகுப்பைச் சேர்ந்தவை.

இதில் உலகம் முழுவதும் 160 வகைகள் இருக்கின்றன.​ இவற்றின் அறிவுத்திறன் மற்றும் அதிசய குணங்கள் குறித்து,​​ மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியக் ​ காப்பகத்தின் கடல் உயிரியலாளர் ர.​ செந்தில்குமார் தெரிவித்தது.

ஒரு சில ஆக்டோபஸ் மட்டும் ஆழமற்ற கடல் பகுதியில் வசித்தாலும்,​​ பெரும்பாலானவை கடலில் மிக ஆழமான பகுதிகளில்தான் அதிகமாகவும் கூட்டம்,​​ கூட்டமாகவும் தனி சாம்ராஜ்யமே அமைத்துக்கொண்டு வசிக்கின்றன.​ ​

இந்த உயிரினத்தின் எட்டு கால்களில்,​​ ஒவ்வொரு காலிலும் இரண்டு வரிசையில் ​ உறிஞ்சு குப்பிகளாகவும்,​​ அவை சுவை உணர்வுகளையும் கொண்டிருக்கும்.இந்த சுவை உணர்விகள் மூலமே,​​ தனது உணவின் சுவை,நிறம் ஆகியனவற்றை இவை ​ எளிதாக அறிந்துகொள்கின்றன.​ மனிதர்களின் கண்களுக்கு இணையாக ஆக்டோபஸின் கண்களும் இருக்கின்றன.​ அதாவது பார்க்கும் பிம்பத்தின் நிறம்,​​ வடிவம்,​​ தூரம் முதலியனவற்றை மிகச் சரியாகத் ​ தெரிந்து கொள்கின்றன.​ தலை உருண்டையாகவும் அதனுள்ளே அனைத்து முக்கிய உறுப்புக்களையும் கொண்டதாகவும் இருக்கிறது.

இதன் மேல்தோல் மென்மையானதாகவும் அடிக்கடி தனது நிறத்தை பச்சோந்தி போல மாற்றிக் கொள்ளும் வசதியுடையதாகவும் இருக்கிறது.​ கூர்மையான பற்கள் இருக்கின்றன.​ இதன் மூளை ​ விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறன் பெற்றது.

அதனையும் மீறி எதிரிகள் இதன் அருகே வந்துவிட்டால்,​​ மை போன்ற ஒரு திரவத்தை சுற்றுப்புறம் முழுவதும் பீய்ச்சி அடித்து,​​ அந்த இடத்தையே கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசிய பகுதிபோல கருமையாக்கிவிட்டு,​​ பாறைகளுக்கு இடையே ஒளிந்து ஆக்டோபஸ்கள் தப்பி விடுகின்றன.

உலகில் சில நாடுகளில் மட்டும்,​​ இதனையும் ஒரு செல்லப் பிராணிகளாகவே வளர்த்து வருகிறார்கள்.​ பல கோடி ரூபாய் கொடுத்து அதை விலைக்கு வாங்கவும்,​​ பலர் தயாராக உள்ளனர்.

உலகக் கோப்பை சோதிடத்துக்குப் பிறகு ஒருபடி மேலே போய்,​​ ஸ்பெயின் அரசு அந்த ஆக்டோபஸ்க்கு கவுரவக் குடியுரிமையே வழங்கிவிட்டது.

சின்னஞ்சிறு மீன்கள்,நத்தைகள்,சிப்பிகள் இது போன்ற அசைவ அயிட்டங்கள்தான் ​ இவற்றின் இரை.​ சில சமயங்களில் பெரிய ஆக்டோபஸ்கள் சிறிய ஆக்டோபஸ்சை கபளீகரம் செய்து விடுகின்றன.​ இரண்டு ஆண்டுகள்தான் இதன் ஆயுட்காலம் என்றாலும்,​​ ஒரே சமயத்தில் 200 ​ முட்டைகள் வரை இடுகின்றன.

ஆண் ஆக்டோபஸ் தனது உயிரணுக்களை,​​ அதன் காலில் அமைந்துள்ள சிறப்பு உறுப்பான ஹெக்டோ காட்டிலஸ் மூலமாக பெண்ஆக்டோபஸ் இனத்துடன் இனச்சேர்க்கை நடத்துகிறது.​​

ஏறக்குறைய 3 வாரங்கள் கழித்து,​​ ஒவ்வொரு குஞ்சுகளாக வெளிவருகின்றன.​ மன்னார் வளைகுடா பகுதியில் ஆக்டோபஸ் தொடர்பான ஆராய்ச்சிகள் எதுவும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.

வடக்கு பசிபிக் ஆக்டோபஸ் உருவத்தில் பெரிதாகவும்,​​ 30 அடி வரை வளரக்கூடியதாகவும் உள்ளது.​ கலிபோர்னியா ஆக்டோபஸ் ஒரு இன்ச் மட்டுமே வளரும் மிகச்சிறிய உயிரினம்.