உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Sunday, August 1, 2010

ஆக்டோபஸ்

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் முடிவை முன்னரே அறிவித்த ​(?) ஆக்டோபஸ்சை   யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள்.​ ஆக்டோ என்ற லத்தீன் சொல்லுக்கு எட்டு என்று பொருள்.​ பன்னெடுங்காலமாக கடல் பயணம் செய்பவர்களால் பேய் மீன் என்று பேசப்படும் எட்டு கால்களையுடைய அபூர்வ விநோதமான ஜீவராசியே ஆக்டோபஸ்.​ மெல்லுடலிகள் குடும்பத்தைச் சேர்ந்த இவை தலைகாலிகள் என்ற வகுப்பைச் சேர்ந்தவை.

இதில் உலகம் முழுவதும் 160 வகைகள் இருக்கின்றன.​ இவற்றின் அறிவுத்திறன் மற்றும் அதிசய குணங்கள் குறித்து,​​ மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியக் ​ காப்பகத்தின் கடல் உயிரியலாளர் ர.​ செந்தில்குமார் தெரிவித்தது.

ஒரு சில ஆக்டோபஸ் மட்டும் ஆழமற்ற கடல் பகுதியில் வசித்தாலும்,​​ பெரும்பாலானவை கடலில் மிக ஆழமான பகுதிகளில்தான் அதிகமாகவும் கூட்டம்,​​ கூட்டமாகவும் தனி சாம்ராஜ்யமே அமைத்துக்கொண்டு வசிக்கின்றன.​ ​

இந்த உயிரினத்தின் எட்டு கால்களில்,​​ ஒவ்வொரு காலிலும் இரண்டு வரிசையில் ​ உறிஞ்சு குப்பிகளாகவும்,​​ அவை சுவை உணர்வுகளையும் கொண்டிருக்கும்.இந்த சுவை உணர்விகள் மூலமே,​​ தனது உணவின் சுவை,நிறம் ஆகியனவற்றை இவை ​ எளிதாக அறிந்துகொள்கின்றன.​ மனிதர்களின் கண்களுக்கு இணையாக ஆக்டோபஸின் கண்களும் இருக்கின்றன.​ அதாவது பார்க்கும் பிம்பத்தின் நிறம்,​​ வடிவம்,​​ தூரம் முதலியனவற்றை மிகச் சரியாகத் ​ தெரிந்து கொள்கின்றன.​ தலை உருண்டையாகவும் அதனுள்ளே அனைத்து முக்கிய உறுப்புக்களையும் கொண்டதாகவும் இருக்கிறது.

இதன் மேல்தோல் மென்மையானதாகவும் அடிக்கடி தனது நிறத்தை பச்சோந்தி போல மாற்றிக் கொள்ளும் வசதியுடையதாகவும் இருக்கிறது.​ கூர்மையான பற்கள் இருக்கின்றன.​ இதன் மூளை ​ விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறன் பெற்றது.

அதனையும் மீறி எதிரிகள் இதன் அருகே வந்துவிட்டால்,​​ மை போன்ற ஒரு திரவத்தை சுற்றுப்புறம் முழுவதும் பீய்ச்சி அடித்து,​​ அந்த இடத்தையே கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசிய பகுதிபோல கருமையாக்கிவிட்டு,​​ பாறைகளுக்கு இடையே ஒளிந்து ஆக்டோபஸ்கள் தப்பி விடுகின்றன.

உலகில் சில நாடுகளில் மட்டும்,​​ இதனையும் ஒரு செல்லப் பிராணிகளாகவே வளர்த்து வருகிறார்கள்.​ பல கோடி ரூபாய் கொடுத்து அதை விலைக்கு வாங்கவும்,​​ பலர் தயாராக உள்ளனர்.

உலகக் கோப்பை சோதிடத்துக்குப் பிறகு ஒருபடி மேலே போய்,​​ ஸ்பெயின் அரசு அந்த ஆக்டோபஸ்க்கு கவுரவக் குடியுரிமையே வழங்கிவிட்டது.

சின்னஞ்சிறு மீன்கள்,நத்தைகள்,சிப்பிகள் இது போன்ற அசைவ அயிட்டங்கள்தான் ​ இவற்றின் இரை.​ சில சமயங்களில் பெரிய ஆக்டோபஸ்கள் சிறிய ஆக்டோபஸ்சை கபளீகரம் செய்து விடுகின்றன.​ இரண்டு ஆண்டுகள்தான் இதன் ஆயுட்காலம் என்றாலும்,​​ ஒரே சமயத்தில் 200 ​ முட்டைகள் வரை இடுகின்றன.

ஆண் ஆக்டோபஸ் தனது உயிரணுக்களை,​​ அதன் காலில் அமைந்துள்ள சிறப்பு உறுப்பான ஹெக்டோ காட்டிலஸ் மூலமாக பெண்ஆக்டோபஸ் இனத்துடன் இனச்சேர்க்கை நடத்துகிறது.​​

ஏறக்குறைய 3 வாரங்கள் கழித்து,​​ ஒவ்வொரு குஞ்சுகளாக வெளிவருகின்றன.​ மன்னார் வளைகுடா பகுதியில் ஆக்டோபஸ் தொடர்பான ஆராய்ச்சிகள் எதுவும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.

வடக்கு பசிபிக் ஆக்டோபஸ் உருவத்தில் பெரிதாகவும்,​​ 30 அடி வரை வளரக்கூடியதாகவும் உள்ளது.​ கலிபோர்னியா ஆக்டோபஸ் ஒரு இன்ச் மட்டுமே வளரும் மிகச்சிறிய உயிரினம்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.