உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Friday, September 10, 2010

ஓவியர் மேனகா

தஞ்சை அருகில் பூதலூர்தான் என் சொந்த ஊர். எப்போதும் பசுமையாக காட்சி தரும் எங்க ஊர். அப்பவே களிமண்னைப் பிசைஞ்சு, எனக்குத் தேவையான விளையாட்டு சாமான்களை நானே செஞ்சுக்குவேன்.அங்கிருந்து, அப்பாவின் வேலையால், திருச்சி பெல் சிட்டி போனோம். அங்கு போனாலும், என் ஊரின் பசுமையான நினைவுகள் வந்து போகும். அந்த செடி கொடிகள், மூங்கில் குத்து, ஆத்தங்கரை, இப்படி எல்லாவற்றையும் மனசுக்குள் ஓட விட்டுக்கிட்டே இருப்பேன். அதை அப்படியே கிறுக்க ஆரம்பிச்சேன்.அந்த சமயம், ஆசிரியர் யானை எழுதச் சொல்ல, அதை நான் படமாக வரைந்தேன். அன்று என் மேல் கோபப்படாமல், ஈஸ்வரி டீச்சர் கொடுத்த ஊக்கம் தான், என்னை ஓவியரா உருவாக்கியிருக்கு. ஓவியத்திற்காக பள்ளி, கல்லூரிகளில் பல பரிசுகளைக் குவிச்சிருக்கேன்.

ஆனா, இதுவரை முறையா யாரிடமும் ஓவியம் வரைய கற்றுக் கொள்ளவில்லை.ஆனா, இன்னும், நல்லா ஓவியம் வரையணும்னா, உலகப் புகழ் பெற்ற ஓவியர்களான லியனார்டோ டாவின்சி, கான்ஸ்டபிள் போன்றவர்களின் ஓவியங்களைத் தேடிப் பிடிச்சுப் பார்த்தேன்; அதை மீள் உருவாக்கம் செய்ய ஆரம்பித்தேன்.என் முதல் ஓவியக் கண்காட்சி, விழுப்புரத்தில் நடந்தது. அதில் எனக்கு, "கலைரத்னா' விருது கொடுத்தாங்க.
  என் கணவர் நரேஷ், குழந்தைகள் பூஜா, ஸ்ரீஜா இவர்களின் தூண்டுதலால், சமீபத்தில் சென்னையில், ஓவியக் கண்காட்சி நடத்தினேன். மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.இன்னும் நிறைய ஓவியங்கள் வரைய வேண்டும்... இந்த ஓவியங்கள் அனைத்தும், என்னை ஊக்குவித்த ஈஸ்வரி டீச்சருக்கும், என்னை வளர்த்த சித்திக்குமே அர்ப்பணம்
நன்றி : தினமலர்

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.