You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: நாம் நம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Tuesday, June 21, 2011

நாம் நம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை


* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.


* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.


* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.


* கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.

* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், "சாப்ட்வேர்' தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான, "போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.

* ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.

* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.

* "நாவிகேஷன்' - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் - படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. "நவ்காத்' எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், "நாவிகேஷன்' என்றானது. ஆங்கிலத்தில், "நேவி' என, கடற்படையைக் குறிக்கும் சொல், "நூவ்' என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.

* சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.

* கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.
* கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

* கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் - மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.

* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.

* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர். 

உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்...


இவை சிறு எடுத்துக்காட்டு தான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!

37 comments:

 1. G.BASKER PG ASST COMMERCE SAYS
  THANK YOU FOR YOUR USEFUL INFORMATIONS. I HOPE IT WILL ENCOURAGE OUR YOUNG GENERATION TO ACHIEVE MORE.

  ReplyDelete
  Replies
  1. thank u for this information v will achieve more

   Delete
 2. Great Information ,ThankYou.

  ReplyDelete
 3. THANK YOU SIR,VERY USEFULL

  ReplyDelete
 4. really very super thank you for giving this kind of information

  ReplyDelete
 5. nalla thodakkam nalla seithi anal ennakku thangalathu eruthi pathi tham satru udampadillai ungal utharanam indiavil erukkum varai indianukku mariyathai illai enbathu pole ullathu
  valga valamudan

  ReplyDelete
 6. உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்...

  ReplyDelete
  Replies
  1. என்று மாறும் இந்த நிலைமை ...............

   Delete
 7. Its really amazing. Dear friends read it, feel it & make ourselves "BEST".

  ReplyDelete
  Replies
  1. Indians can achieve anything if they wish

   Delete
 8. VERY INTERESTING WE ARE KNOW ABOUT OUR HISTORIC ACHIEVEMENTS AND TRY AND FOLLOW THEM ............

  ReplyDelete
 9. When Indians work in India itself, India will be No:1

  ReplyDelete
 10. Really it's amazing news for our young Indian people.....
  It should be know our all Indian.....
  Thanks for valuable news India and Indian people

  ReplyDelete
 11. Really it's amazing news for our all young Indian people.....
  It should be know our all Indian.....
  Thanks for your valuable news about India and Indian people

  ReplyDelete
 12. intresting facts be proud for indian

  ReplyDelete
 13. பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்;

  எங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியா்களுக்கு தேவையான அடிப்படை தகுதிகள் ஏதும் இல்லாமல் பணிபுரியும் கணினி ஆசிரியா்கள் எண்ணிக்கை 1002 அதைவிட இரண்டு முறை தோ்வில் தோல்வி அடைந்து பணிபுரியும் கணினி ஆசிரியா்கள் எண்ணிக்கை 700 இதையும் சோ்த்துகங்க

  ReplyDelete
 14. நமது தமிழ்நாட்டில் கல்வியை வியாபாரமாகத்தான் பார்க்கிறர்கள். அரசு பள்ளிகளில் கட்பிகும் முறையை முதலில் மாற்ற வேண்டும்.அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட தன்னுடைய குழந்தைகளை தனியார் பள்ளிகளில் தான் சேர்த்துகின்றனர். இந்த நிலையை முதலில் மாற்ற வேண்டும்.

  ReplyDelete
 15. athisayam aanal unmai

  ReplyDelete
 16. சவ மொழியான சமசுகிருதம் கணிணி பயன்பாட்டிற்கு ஏற்றது என்பது தவறு. வரலாற்றை திரித்துக் கூறுவதால் பயன்ஒன்றும் இல்லை. ஏனெனில் கணிணிப் பயன்பாட்டிற்கான மூல அணுக்கூறுகளை கண்டறிந்தவர்கள் தமிழர்களான கனிஆதன், பக்குடுக்கை நன்கணியனார் என புறநானுற்றுப் பாடல் கூறியுள்ளதை சார்லஸ் பாபேஜ் ஏற்றுக்கொண்டுள்ளார். அதேபோல ஆயுர் வேத மருத்துவ முறைக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சித்த வைத்திய முறை இன்றும் சீனா, சப்பான், மலேசியா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. இங்கே இயந்திரங்களை உருவாக்கும் கல்விமுறைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். தமிழக பாரம்பரியங்களை அழிக்க நாமே துணைபோகிறோம். பண்பாட்டை இழந்துவிட்டு படிப்பினை பெற்று யாருக்கும் நன்மை கிடைக்கப்போவதில்லை. வர்க்கம், அரசியல், சாதி இவை மூன்றும் ஒன்றாக இணையும்போது சமூக சீர்கேடுகளும் பண்பாட்டுச் சிதைவுகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.- கருவைமுருகு.

  ReplyDelete
 17. please visit these website; be proud to be tamilian; but try to know where we are suppressed; its true we are suppressed

  http://archaeologyindia.com/adichanallur.asp
  http://our_legacy.pitas.com/

  ReplyDelete
 18. thanks i am very happy to your Information.loganayaki

  ReplyDelete
 19. உண்மைதான் நண்பரே... இந்தியன் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் வாழ்கிறான்.

  ReplyDelete
 20. Really very useful information TNPSC,TRB,BANK EXAMS Students .
  by
  VISWA SCHOOL OF BANKING
  11 TH CROSS THILLAI NAGER,TRICHY-18
  7402587727

  ReplyDelete
 21. arumaiana thagaval
  ovoru indianum therinthu iruka vendum

  ReplyDelete
 22. It is not correct to say that India has not invaded any country for the p 10,000 years. India is formed as one country only by British.
  Moreover please also note that Raja Raja Cholan conqured Sri Lanka in the year 991 AD

  ReplyDelete
 23. thanks for the messege.

  ReplyDelete
 24. super msg.endrendrum naam thaan thalai.

  ReplyDelete
 25. புதிய படைப்புக்களுக்கு வாய்ப்பும்,மதிப்பும் இல்லாமல் இருக்கும் வரை இந்நிலை தான் நீடிக்கும்.

  ReplyDelete
 26. AMUTHA APR-29
  IT IS VERY GOOD INFORMATION EACH EVERY ONE PERSON TO KNOW THAT INFORMATION

  ReplyDelete
 27. I really appreciate this message.thank u it was good boost to us. I am pride to be an indian

  ReplyDelete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.