உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Thursday, November 24, 2011

ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.5 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

 இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.

கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.

இந்நிலையில், "தமிழகத்தில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என, 2008ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில அளவிலான வேலைவாய்ப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.

பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, எழுத்துத் தேர்வு அடிப்படையில், நியமனம் செய்யப்படுவர்.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். தேசிய கவுன்சில் வகுத்துள்ள கல்வித் தகுதி உள்ளவர்கள் தான், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

தேர்வு முறை

* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.

* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.

* முதல் தாள், மொத்தம் 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும்.

* இரண்டாம் தாள், 150 கேள்விகள் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.

* அறிவியல் ஆசிரியர்களுக்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து 60 கேள்விகளும், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, அதில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும்.

* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். எனினும், பள்ளி நிர்வாகம், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, இடஒதுக்கீடு கொள்கையின்படி, சலுகைகள் வழங்கலாம். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச் சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, கல்வியியல் ஆணையமாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் தொடக்கக் கல்விக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது.
  
  தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி., முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

இதுதவிர, இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆணையம் வகுத்துள்ள குறைந்தபட்ச தகுதி இல்லாத ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த தகுதியை பெற வேண்டும்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தகுதித் தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

40 comments:

 1. ஐயா, எனது குழப்பத்தை தீர்க்கவும்.

  சிபிஎஸ்சி நடத்துகின்ற CTET தேர்வில் வெற்றி பெற்றால் இந்த டிஆர்பி நடத்தும் TET தேர்விலும் வெற்றி பெற வேண்டுமா? வேண்டாமா?

  சிபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றதே போதுமானதாக இருக்குமா?

  ReplyDelete
 2. TET 9, 10 , 11 , 12 ku porunthuma or porunthatha? EMPLOYMENT SENIORITY UNDA, KIDAYATHA?

  ReplyDelete
 3. sir i too want to know those who already selected in ctet again they want to write the exam....?

  ReplyDelete
 4. CTET மத்திய அரசு பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும். தமிழகத்தில் தனியாக TET எழுதவேண்டும்

  ReplyDelete
 5. I WAS APPOINTED ON 2010 SEP SO THAT I TOO HAVE TO WRITE THE EXAM HA..........

  ReplyDelete
 6. CTET மத்திய அரசு பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும். தமிழகத்தில் தனியாக TET எழுதவேண்டும்>

  ReplyDelete
 7. 01.04.2010 அடுத்டுது நியமணம் செய்யப்பட்டவர்கள் எழுத வேண்டும்

  ReplyDelete
 8. how could i get the application for tet exam and when is the last date by anitha

  ReplyDelete
 9. HOW CAN i know the total topics of TET syllabus by siva

  ReplyDelete
 10. sir,
  i want to know teachers who are handling 9and10 class[DSE] SHOULDwrite the tet exam or not.please clarify my doubt

  ReplyDelete
 11. sir, the test will be based on science, maths and social. what about language( tamil and english). reka.

  ReplyDelete
 12. sir, the test will be based on science, maths and social. what about language( tamil and english). reka
  பதில்:
  language1- mother tongue or tamil, telugu, malayalam, kannadam.

  language2: Ling language "english"

  ReplyDelete
 13. Paper I (for classes I to V); No. of MCQs – 150;
  Duration of examination: one-and-a-half hours
  Structure and Content (All Compulsory)
  (i) Child Development and Pedagogy 30 MCQs 30 Marks
  (ii) Language I 30 “ 30 “
  (iii) Language II 30 “ 30 “
  (iv) Mathematics 30 “ 30 “
  (v) Environmental Studies 30 “ 30 “

  ReplyDelete
 14. Paper II (for classes VI to VIII); No. of MCQs – 150;
  Duration of examination : one-and-a-half hours
  Structure and Content
  (i) Child Development & Pedagogy (compulsory) 30 MCQs 30 Marks
  (ii) Language I (compulsory) 30 “ 30 “
  (iii) Language II (compulsory) 30 “ 30 “
  (iv) (a) For Mathematics and Science teacher : Mathematics and Science – 60 MCQs
  of 1 mark each
  (b) For Social studies teacher : Social Studies - 60 MCQs of 1 mark each
  (c) for any other teacher – either 4(a) or 4(b)

  ReplyDelete
 15. i want to know teachers who are handling 9and10 class[DSE] SHOULDwrite the tet exam or not.please clarify my doubt

  பதில்:ஆசிரியர் தகுதித் தேர்வு 1 முதல் 8 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் என்று NCTE அறிவித்துள்ளது. 9- 10 வகுப்பு ஆசிரியர்களுக்கு தேவை இருக்காது.

  ReplyDelete
 16. how could i get the application for tet exam and when is the last date by anitha
  பதில்: தேர்வு தேதி பற்றி முறையான அறிவிப்பு இதுவரை வெளிப்படவில்லை

  ReplyDelete
 17. sir what about commerce teachers.

  ReplyDelete
 18. sir what about commerce teachers.
  பதில்:
  6 முதல் 8 வகுப்பு வரை பணி அமர்த்தப்பட்டிருந்தால் மட்டும்
  Paper II (for classes VI to VIII) No. of MCQs – 150
  (i) Child Development & Pedagogy (compulsory) 30 MCQs 30 Marks

  (ii) Language I (compulsory) 30 “ 30 “

  (iii) Language II (compulsory) 30 “ 30 “
  (iv) (a) Mathematics and Science – 60 MCQs
  அல்லது
  (b) Social Studies - 60

  ReplyDelete
 19. thanks for yours information sir 6 to 8 posting allowed sir.

  ReplyDelete
 20. sir, as per the govt announcement, 50000 postings are going to be appointed. whether the postings are based on tet or trb.

  ReplyDelete
 21. sir, the test will be based on science, maths and social. what about language( tamil and english). pl clarify.said told your ans

  ReplyDelete
 22. sir, as per the govt announcement, 50000 postings are going to be appointed. whether the postings are based on tet or trb.
  பதில்:TET தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம் இருந்து வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி அமர்வு செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

  ReplyDelete
 23. Government has announced that teachers will be selected from those passed tet. Two are equal marks in tet. which one will be given importance whether seniority of higher score in tet.

  ReplyDelete
 24. sir samacheerkavi education rules& regulation any favourable to commerce teachers posting to middle school

  ReplyDelete
 25. when exam conduct sir.

  ReplyDelete
 26. sir,
  I was appointed B.T Asst [science]B.Sc.B.ED]teacher,Department selected for Director of school Education [DSE]. my date of appointment was 13-09-2010.I am teaching for classes 9th and 10th.As per the Govt order who are appointed after 01 .o4 2010 must complete the TET exam within 5 years. Kindly you are requested to clarify my doubt whether should I write TET exam or not
  Thankyou

  ReplyDelete
 27. sir, as your above said answer, the middle school and primary teachers will be selected on the basis of tet and seniority. then how will be the high and higher secondary teachers appointed, whether seniority or trb?

  ReplyDelete
 28. Sir clear my doubt, pass in tet is 60marks or 60%(90marks) Which one is correct.

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. sir;
  am completed b.sc,b.ed computer science i can atten the (tet)exam

  pl.reply

  ReplyDelete
 31. sir i was appointed on sep2010 by dept of school of education and by now iam handling 9th and 10th.Do to is i should write exam or not...

  ReplyDelete
 32. It is 60%. 90 marks out of 150.

  ReplyDelete
 33. school wise non-teaching post, how to apply i am completed 10th , +2 & M.com (ous) with typewriting both higher & basic computer knowledge.

  email ID : rajapranauv@rediffmail.com

  ReplyDelete
 34. sir iam sanskrit teacher in aided school i have joined as a sanskrit teacher in 15 th march of 2011. the eligable test is must for me? kindly tell the portion for sanskrit teachers.
  Thanking you,
  Dr.Anandhan.s

  ReplyDelete
 35. sir iam sanskrit teacher in aided school i have joined as a sanskrit teacher in 15 th march of 2011. the eligable test is must for me? kindly tell the portion for sanskrit teachers.
  Thanking you,
  Dr.Anandhan.s
  anandresearch03@rediffmail.com
  ReplyDelete

  ReplyDelete
  Replies
  1. MUST TET TEST ALL KINDS OF TEACHER HANDLED IN 6 TO 8 CLASS, SO YOU MUST WRITE TET TEST.
   Paper I (for classes I to V); No. of MCQs – 150;
   Duration of examination: one-and-a-half hours
   Structure and Content (All Compulsory)
   (i) Child Development and Pedagogy 30 MCQs 30 Marks
   (ii) Language I 30 “ 30 “( language1- mother tongue or tamil, telugu, malayalam, kannadam.)

   (iii) Language II 30 “ 30 “
   (iv) Mathematics 30 “ 30 “
   (v) Environmental Studies 30 “ 30 “

   Delete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.