அரசு அதிகாரிகள் குடியிருப்பில் அமைந்திருக்கும் அந்த வீட்டுக்குள் நுழைந்தால், கலை உலகத்திற்குள் நுழைந்த பிரமிப்பு.
புன்னகை முகமாய் காட்சி தரும் பெண்ணின் பெரிய ஓவியம், சுவரையே உயிருள்ள சித்திரமாக்கி பேசவைக்கிறது.
-என்னோடு ஒரு நிமிடம் பேச முடியுமா?' என்று பார்ப்பவரிடம் கேட்பது போல் தோன்றுகிறது, பழக்கூடை சுமந்த இன்னொரு பெண்ணின் ஓவியம்.
திரும்பிய பக்கங்கள் எல்லாம் இப்படி திரும்பிப் பார்க்கவைக்கும் அந்த கலை உலகத்திற்குள் ஓடிக்குதித்து விளையாடிக்கொண்டிருக்கின்றன, இரண்டு உயிர் படைப்புகள். இரண்டும் பெண் குழந்தைகள்!
`அம்மாவை எங்கே?' நாம் கேட்டு முடிப்பதற்குள், `தனக்கும் அந்த அற்புதமான ஓவியங்களுக்கும் தொடர்பே இல்லை' என்பது போன்ற எளிமையுடன், கிராமத்து மணம் கலந்த பேச்சுடன் நம்மை வரவேற்கிறார், ஓவியர் மேனகா நரேஷ்.
"உலகிலே தலை சிறந்த ஓவியர் இயற்கைதான். இயற்கை படைத்த வானம், கடல், மலை, அருவி.. எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அவைகளை காலம் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதே இயற்கைதான் ஓவியம் வரைய நம்மையும் படைத்திருக்கிறது. அதனால் இயற்கையோடு நாம் இரண்டறக் கலந்து சிந்தித்து, செயல்படத் தொடங்கிவிட்டாலே நமக்கு ஓவியம் வரையும் ஆற்றல் வந்துவிடும்..''- என்று கூறும் இவர், ஓவிய சாதனையாளர். எம்.எஸ்சி, எம்.பில். படித்துள்ளார். மல்டி மீடியா துறையில் முதுகலை டிப்ளமோ படித்துவிட்டு அனிமேஷன் துறையில் 3 டி ஓவியராகவும் திகழ்கிறார்.
எல்லா குழந்தைகளும் சுவரில் கிறுக்குகிறது. அதுவே சிறுமியானதும், கோலமிடு கிறது. வீட்டையும் அலங்காரம் செய்கிறது. இப்படி படைப்பாற்றல் எல்லா பெண்களிடமும் இருந்தும், சிலரால் மட்டும்தானே ஓவியர் ஆக முடிகிறது. அது ஏன்?
"எல்லா குழந்தைகளும் பார்ப்பதை, கேட்பதை ரசிக்கின்றன. தான் ரசிக்கும் அழகில் கற்பனையையும், திறமையையும் கலந்து படைப்பாக வெளிக்கொண்டுவர துடிக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் கிறுக்கல். கிறுக்கல்களில் ஆரம்பித்து படிப்படியாக மேம்பட்டு, ஓவியராவது ஒரு வகை. ஓவியத்தைப் பார்த்து, பிரமித்து அதில் ஏற்படும் ஈடுபாட்டால் ஓவியரிடம் பயிற்சி பெற்று, ஓவியராக உருவாகுவது இன்னொரு வகை.
ஒரு பெண் ஓவியராக வெற்றி பெற வேண்டுமென்றால், அவரது குடும்பத்தினர் ஒத்துழைப்பு தரவேண்டும். திருமணத்திற்கு பிறகு கணவர் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவளால் ஓவியராக நிலைத்து நிற்க முடியும். ஓவியம் வரைய சரியான ஆரம்பம் வேண்டும். தொடர்ந்து நிறைய, நிறைய கற்பனை செய்யவேண்டும். வெளி விஷயங்களிலோ, பொழுதுபோக்கிலோ நேரத்தை செலவிடாமல், அந்த நேரத்தை எல்லாம் ஓவியத்திற்காக அர்ப்பணிக்கவும் வேண்டும். அது எல்லோராலும் முடியாது என்பதால்தான் நிறைய ஓவியர்கள் உருவாவதில்லை..''
ஓவியத்தில் சிறந்து விளங்குவது ஆணா? பெண்ணா?
"ஓவியர்களில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. ஆனால், ஆண் என்றால் நேரங்காலம் பார்க்காமல் தனியாக எந்த இடத்திற்கு சென்றும் வரையலாம். பெண்களால் அது இயலாத காரியம். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பது, கவனம் சிதறாமல் வரைவது போன்றவைகளில் ஆண்களை விட பெண்களுக்கு வாய்ப்புகள் அதிக சதவீதத்தில் உள்ளது..''
நீங்கள் ஓவியம் வரையத் தொடங்கிய காலத்தில் அதிகம் கிடைத்தது, பாராட்டா? திட்டா?
"நான் அறியாத வயதில் வரைந்த ஓவியங்களுக்கு பாராட்டைவிட திட்டுகளே அதிகம் கிடைத்தது. அதில் ஒரு திருப்பமாக 10 வயதில், இசைஞானி இளைய ராஜாவின் படம் கிடைத்தது. அந்த இரவே அதை தத்ரூபமாக வரைந்து பெற்றோரிடம் காட்டி பாராட்டு வாங்கிவிட்டேன். அன்றிலிருந்து நான் திட்டு வாங்கவே இல்லை..''
சராசரி பெண்ணும், ஓவியரான பெண்ணும் பிரச்சினைகளை அணுகும் விதத்தில் வித்தியாசப்படுவார்களா?
"ஓவியப் பெண்கள் சராசரி பெண்களைக்காட்டிலும் பொறுமைசாலிகள். பிரச்சினையின் தீவிரத்தை அறிந்து எளிதில் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக, சகிப்புத்தன்மையுடன் அணுகுவார்கள். தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள். அவர்களின் அணுகுமுறையில் மென்மை எப்போதும் இருக்கும் என்பதால், எந்த பிரச்சினையும் எல்லைமீறி வன்முறையில் போய் முடிந்துவிடாது''
பெண் ஓவியர்கள் எந்த நேரமும் தூரிகையும், கற்பனையுமாக இருந்தால்- யதார்த்த உலகத்திற்கும், அவர்களுக்கும் இடைவெளி விழுந்துவிடும் அல்லவா?
"எந்த பெண்ணாலும் முழுநேர ஓவியராக இருக்கமுடியாது. குடும்பத்திற்காக அவள் தன் கடமைகளை செய்தாகவேண்டும். இந்திய பெண்களின் வெற்றி என்பது அவளது குடும்பத்தோடு கலந்ததாகத்தான் இருக்கும். என் வெற்றிக்கு என் கணவர் காரணம். என்னுடைய இருமகள்களும் மிகுந்த பொறுப்புணர்ச்சி கொண்ட வர்கள். இரண்டாம் வகுப்பு படிக்கும் என் பெரிய மகள் பூஜா பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், அவளது பள்ளி அடையாள அட்டையையும், பெல்ட்டையும் கழற்றி அவளுடைய பையிலே வைத்துக்கொள்வாள். அதனால் அவைகளை மறுநாள் காலையில் தேடி எடுக்கும் நேரம் மிச்சமாகும். யு.கே.ஜி. படிக்கும் சின்ன மகள் ஸ்ரீஜாவும் அப்படித்தான். இருவரும் இப்போதே ஓவியத்திலும், கல்வியிலும் பரிசுகளை குவிக்க ஆரம்பித்து விட்டார்கள்..''
பாடகிகள் தோற்றத்திலும் அழகுணர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். ஓவியம் வரையும் பெண்களும் அழகாக தோன்றுவது அவசியமா?
"பொதுவாக பாடகிகள் பாடும்போதும், நடன கலைஞர்கள் ஆடும்போதும் அவர்களது தோற்றமும் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. ஆனால் ஓவியரைப் பொறுத்தவரையில் அவரது படைப்பு மட்டுமே பார்க்கப்படுகிறது. ரசிக்கப்படுகிறது. ஆனாலும் ஓவியம் வரையும் பெண்களும் அழகுணர்ச்சி கொண்டவர்கள்தான். அவர்களது நடை, உடை, பாவனையிலும் நேர்த்தியிருக்கும்''
ஒரு ஓவியரின் மிகச்சிறந்த படைப்பு எது?
"என்னைப் பொறுத்தவரையில் தினமும் எனது ஒவ்வொரு செயலையும் சிறந்த படைப்புபோல் ஆழ்ந்து கவனித்துதான் செய்கிறேன். ஓவியத்திற்கு அப்பால், என் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும், என் குழந்தைகளுக்காக சமைப்பதும், கணவருக்கு தேவையானதை செய்வதும் என் கனிவான படைப்புதான். ஓவியர்களின் வாழ்க்கையே படைப்பு மாதிரி முழுமையுடன் அழகாக ஜொலிக்கும்..''
மாநில அளவில் உங்களுக்கு முதன்முத லில் பரிசு வாங்கித் தந்த ஓவியம் எது?
"அழகு என்ற தலைப்பில் முகத்தில் வரைந்த `பேஸ் பெயிண்டிங்' எனக்கு மாநில அளவில் பரிசு பெற்றுத்தந்தது. ஒரு பெண் முகத்தின் பாதியில் அவளது 20 வயது தோற்றத்தையும், மறுபாதியில் அவளது 80 வயது தோற்றத்தையும் வரைந்தேன். அழகு நிரந்தரமல்ல என்ற என் ஓவியக் கருத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது..''
எத்தனை வகையான ஓவியங்கள் உங்களுக்கு தெரியும்?
"பேஸ் பெயிண்டிங் செய்வேன். மீள் உருவாக்கத்திலும் நிறைய படைத்துள்ளேன். மீள் உருவாக்கம் என்பது உலகப்புகழ் பெற்ற ஓவியர்களின் படைப்புகளை அதுபோல் அப்படியே பார்த்து வரைவது. லியானோ டோ டாவின்சி, லொரெய்ன், ஜான் கான்ஸ்டபிள், ராஜா ரவி வர்மா போன்ற பல உலகப் பிரபலங்களின் படைப்புகளை மீண்டும் உருவாக்கியுள்ளேன். ஒரே நிமிடத்தில் பூக்களை வரையக்கூடிய `ஒன் ஸ்டோக் பெயிண்டிங்', பேப்பரில் செய்யும் கலைவடிவங்கள், சில்க் ரிப்பனில் பூக்கள் தயாரித்தல், ரங்கோலி, களிமண்- சோப்பில் சிற்பங்கள் செய்தல் போன்றவைகளும் எனக்கு தெரியும். அதை எல்லாம் குழந்தைகளுக்கு இப்போது கற்றுக்கொடுக்கிறேன். என்னிடம் கற்ற பல குழந்தைகள் பள்ளிகளில் ஓவியப் பரிசுகளை வென்றுள்ளனர்''
நீங்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டது எப்படி?
"நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு கணினி அறிவியல் படித்தேன். அங்கு வருடத்திற்கு ஒருமுறை கலாசார விழா நடக்கும். அதில் 8 போட்டிகளில் வெல்பவர்களில் 2 பேரை சிறந்த ஓவியராக தேர்ந்தெடுத்து தேசிய போட்டிக்கு அனுப்புவார்கள். நானும் 8 போட்டிகளில் தேர்வாகி, தேசிய போட்டியில் கலந்துகொண்டேன்''
அனிமேஷன் கல்வியையும் கற்றிருக்கிறீர்கள். அதை எப்படி மக்களுக்கு பயனுள்ளதாக்குகிறீர்கள்?
"சிக்கலான அறிவியல் விஷயங்களை எளிமைப்படுத்துவதற்கும், சமூக பிரச்சினைகளை மக்களுக்கு எளிதில் புரிய வைப்பதற்கும் அனிமேஷன் உதவுகிறது. ஒரு நல்ல ஓவியரால்தான் சிறந்த அனிமேட்டராக முடியும். அனிமேஷன் மூலம் பெண் சிசுக்கொலை, தண்ணீர் சேமிப்பு, கண் தானம் போன்ற பல சமூக விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். மகாபலிபுரத்தில் உள்ள சிற்பங்களையும் அனிமேஷனில் புதுமையான முறையில் விளக்குகிறேன்''
மேனகா நரேஷ் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். பெற்றோர்: கண்ணன்- எழிலரசி. இவரது கணவர் நரேஷ் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குனராக பணியாற்றுகிறார். இவர்கள் சென்னை அரசினர் தோட்டத்தில் வசித்து வருகிறார்கள்.
நன்றி : தினத்தந்தி ஞாயிறு மலர் தேதி :14.01.2012
super
ReplyDeletewhatis very fantastic drawing? congratulaion to menaka p.a.naresh@ daily thanthi. k.velusamy,pudukkottai-district
ReplyDeleteமேனகா,உங்கள் ஓவியத்திற்கு நான் வணங்குகிறேன். ஆண்டவன் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் வழங்க வேண்டுகிறேன்
ReplyDeletevijaya
R.Subramanian.
ReplyDeleteReally very beautiful Drawings. Congratulations.
hai i am baskaran
ReplyDeleteyour drawing is very beautiful.specially the children draeing is super....
I astonished on seeing your brilliancy and great enthusiasm in art and house keeping. I wondered lot and imagine that how can you possible to make this wonderful performance. God bless you and your family. My heartiest wishes to Mr.JD Sir to support your brilliancy.
ReplyDeleteBy...
Your Ever....
VILLUPURAM NATIONAL ACADEMY SARAVANAA...
குழந்தைகள் ஓவியம் மிகச்சிறப்பாக உள்ளது மேடம்.பாராட்டுக்கள்...
ReplyDeleteVIJAYABASKAR Ramanatham , i watch so many times very nice.
ReplyDeleteமேனகா மேடம்..! வாழ்த்துக்கள் உங்களுக்கு ! ஒரு கலைஞன் என்ற முறையிலே! ஓவியங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன....!தொடருங்கள் கலைப் பயணத்தை...!
ReplyDeleteSuperb.I saw tradtional paintings.
ReplyDeletesupper
ReplyDeleteghjfhhhgh df
ReplyDeletehai iam dhina
ReplyDeleteI like your drawing
நான் பாதியிலிருந்துதான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். எங்க ஊரு முகவெட்டு இருக்கிறதே என்று நினைத்தேன். சரியாக இருந்தது. வாழ்க
ReplyDeletehai your drawings are very expressive.keep it up.
ReplyDeletehai your drawings are very expressive.keep it up.
ReplyDeleteyour painting is really super,congratulation
ReplyDeletepaintng is nice mam
ReplyDeleteAWESOME .............................
ReplyDelete