உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Friday, June 15, 2012

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 14.6.2012 அன்று தலைமைச் செயலகத்தில், 2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழைமொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்கள்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 14.6.2012 அன்று  தலைமைச் செயலகத்தில், 2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழைமொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்கள்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு, மாணவ சமுதாயத்தின் நலனிற்காகவும், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட ஊக்குவிக்கும் வகையிலும், கட்டணமில்லா கல்வி, சத்துணவு, பேருந்து பயணஅட்டை, மிதிவண்டிகள், மடிக்கணினிகள், சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபட புத்தகம், காலணிகள், ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு வசதி, கல்வி பயிலுதலில் இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகைகள் ஆகிய எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவி எஸ். சுஷ்மிதா-க்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவி டி. கார்த்திகா, மாணவர்கள் பி. அசோக் குமார், சி. மணிகண்டன் ஆகிய மூன்று மாணவ, மாணவிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாம் இடங்களைப் பெற்ற பி. மகேஸ்வரி, எஸ். பிரபா சங்கரி ஆகிய இரண்டு மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என 6 மாணவ மாணவிகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்கள்.
மேலும், 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் பி. ஸ்ரீநாத்-க்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடங்களை பெற்ற மாணவிகள் இ.எம். நந்தினி, கே.என். மகாலஷ்மி, ஸ்வாதி சென்னியப்பன், என். அகிலா, மாணவர்கள் எஸ். ஜென்கின்ஸ் காட்பிரே, டி. கவின், ஆகிய ஆறு 2 மாணவ, மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவிகள் எஸ். ஸ்மிதா, கே. சூர்யா, ஆர். தாரணி, டி. வினுமிதா, கே. ஷர்மிளா, பி.கே. பூஜாஸ்ரீ, பி. அம்ரிதா, ராஜேஸ்வரி, மாணவர்கள் எஸ்.கே. அபிஷேக், எம். ஸ்ரீதராஐ. ஜஸ்டின் சேவியர் ஆகிய பதினொரு மாணவ, மாணவிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என 18 மாணவ மாணவிகளுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டியதுடன், பரிசுப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மாநில அளவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கியதோடு, கல்வியில் சிறந்து விளங்கி, விடாமுயற்சியுடன் தங்கள் லட்சியத்தை எய்தி, சமுதாய முன்னேற்றத்திற்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபட வேண்டும் என்று வாழ்த்தினார்கள். மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், மாநில அளவில் பரிசுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஊட்டி, பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற வைத்த ஆசிரியப் பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடமிருந்து ரொக்கப் பரிசுகளைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் அளித்துப் பாராட்டி, வாழ்த்திய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.