உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Saturday, December 15, 2012

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு பள்ளிகள் சாதிக்க 6ம் வகுப்பிலிருந்து தயார்படுத்த வேண்டும் : அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் அறிவுரை

JD P.A.NARESH"தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்'', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார். ராமநாதபுரத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும், பத்தாம் வகுப்பில் மட்டும், மாணவர்களை தேர்ச்சிக்கு தயார்படுத்தினால் சாதிக்க முடியாது. ஆறாம் வகுப்பிலிருந்தே, மாணவர்களை படிப்பில் சிறந்து விளங்க தயார் செய்ய வேண்டும். இதற்காக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை படிப்படியாக உயர்த்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே தகவல் தொடர்பு இல்லாவிட்டால், சாதிப்பது கடினம். முதல்வர் ஜெ., கல்வி துறையின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள், பொது தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதுடன், நூறு சதவீத தேர்ச்சிக்கு முயற்சி எடுக்க வேண்டும். ஒரு பள்ளியில் 90 சதவீதம் வெற்றி என்றால், அங்கு, 10 சதவீத தோல்விக்கு, தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும். எனவே நூறு சதவீதம் என்பதை சவாலாக எடுத்து, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும், என்றார்.

11 comments:

 1. DIRECTORS wish is ok but the cooperation is sought from students and parents

  ReplyDelete
 2. Michael Pandiaraj J
  All messages and informations are right and good. They are very useful to students and teachers. Thank you Kalvisolai.

  ReplyDelete
 3. முதலில் அரசு ஆசிரிகளின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும்

  ReplyDelete
 4. முதலில் அரசு ஆசிரிகளின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. Dear Ronald, Your suggestion is good. Today education is commercial and job giving. The government schools unnoticed for more than 2 decades by the government.The government schools are neglected by parents of all categories Govt. school teachers are also parents.No ration shop worker use the rice from the shop for his food. No government doctors get treatment in their hospitals. No government authority go to G.H. It will take time for govt. teachers to get their children admitted in their schools. We have to wait and cannot do by order. Don't be so emotional. A.KS

   Delete
  2. Dear Ronald, Your suggestion is good. Today education is commercial and job giving. The government schools unnoticed for more than 2 decades by the government.The government schools are neglected by parents of all categories Govt. school teachers are also parents.No ration shop worker use the rice from the shop for his food. No government doctors get treatment in their hospitals. No government authority go to G.H. It will take time for govt. teachers to get their children admitted in their schools. We have to wait and cannot do by order. Don't be so emotional. A.KS

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கூற்று மிக சரியானதாகும்

   Delete
 6. நல்லதுதான். ஆனாலும் அரசுப் பள்ளிகளின் மாணவர்களின் நிலை, அவர்களது பெற்றோர்களின் நிலை ஆகியவைகளையும் கணக்கில் கொண்டுதான் தேர்ச்சி சதவிதததை நிர்ணயம் செய்யவேண்டும்.

  ஜெயசதயா.

  ReplyDelete
 7. IT IS GOOD THINK...!

  BUT SAME TIME NEED KNOWLEDGE EQUIVALENT TO ENGLISH MEDIUM IN GOVT SCHOOL STUDENTS BY COMPARING ANY ACTIVITIES

  IF ABOVE STATEMENT WHEN WILL COME TRUE .

  PARENTS OR STUDENTS NO ONE WILLING TO JOIN METRIC
  BY
  RAM

  ReplyDelete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.