- TRB - TAMIL - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - ENGLISH - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - MATHEMATICS - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - PHYSICS - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - CHEMISTRY - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - BOTANY - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - ZOOLOGY - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - HISTORY - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - ECONOMICS - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - COMPUTER SCIENCE - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - COMMERCE - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - PHYSICAL EDUCATION DIRECTOR GRADE I - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - EDUCATION METHODOLOGY - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - GEOGRAPHY - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - POLITICAL SCIENCE - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - TELUGU - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - GENERAL KNOWLEDGE - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - MICRO BIOLOGY - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - BIOCHEMISTRY - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
- TRB - HOME SCIENCE - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
Sunday, May 21, 2017
TRB - ALL SUBJECTS - PGTRB - BTTRB - SYLLABUS - ORIGINAL GOVT QUESTION PAPERS - ANSWER KEYS - LATEST STUDY MATERIALS DOWNLOAD
Tuesday, May 16, 2017
அடுத்த 3 ஆண்டுகளில் 2 லட்சம் பொறியாளர்கள் ஐடி துறையில் வேலை இழப்பர் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் கணிப்பு
அடுத்த 3 ஆண்டுகளில் 2 லட்சம் பொறியாளர்கள் ஐடி துறையில் வேலை இழப்பர் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் கணிப்பு | டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஐடி துறையில் ஆண்டுதோறும் 2 லட்சம் பணியாளர்கள் வேலை இழப்பர் என்றும், இந்த நிலை அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தொடரும் என்றும் இத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களான இன்ஃபோ சிஸ், காக்னிசென்ட் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங் களில் இந்நிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனங் களில் ஊழியர்களின் செயல்பாடு அடிப்படையில் மதிப்பீடு செய்து அவர்களை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன. நிறுவனங்களின் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக இது எடுக்கப்படுவதாகக் கூறப் படுகிறது. மேலும் ஐடி துறைக்கு பெருமளவு வேலையை வழங் கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்நாட் டில் உள்ளவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற பாது காப்புக் கொள்கை கடைப்பிடிக் கப்படுவதால் ஏராளமானோர் வேலையிழக்கும் சூழல் உருவாகி வருகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் இந்திய ஐடி நிறுவனங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. பொதுவாக இது போன்ற நடவடிக்கைகள் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஐடி துறையில் தொடர்ந்து நடைபெறும் என்று குளோபல்ஹன்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுநீல் கோயல் தெரிவித்துள்ளார். ஆள்குறைப்பு நடவடிக்கைகள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். அதேசமயம் இத்துறை பொறியாளர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் வேலை வாய்ப்பில் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார். புதிய முறை தொழில்நுட்பத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். பொதுவாக எழுதப்பட்ட சாஃப்ட் வேரை மனிதர்கள் சோதித்துப் பார்க்கும் நடைமுறை (டெஸ்டிங்) இப்போது பின்பற்றப்படுகிறது. இதற்கு மாற்றாக ஆட்டோமேடட் டெஸ்டிங் முறையை பல நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கி யுள்ளன. இதனால் இப்பிரிவில் உள்ள டெஸ்டிங் பணியில் ஈடுபட் டுள்ளவர்களின் வேலை போகும் அபாயம் உருவாகியுள்ளது. அதேசமயம் டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ, டிஜிட்டல் துறையில் குறிப் பிட்ட துறை சார்ந்த நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு அதிக தேவை உள்ளது. இத்துறையில் உள்ள வர்கள் கட்டாயம் தங்களை மாற்றத்துக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டிய தருணமிது. அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு ஐடி சேவைத் துறையில் இந்நிலை நீடிக்கும். இதையடுத்தே ஸ்திரமான வளர்ச்சியை நோக்கி நிறுவனங்கள் நகர முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். டேலன்ட் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் கெல்லி ஓசிஜி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் பிரான்சிஸ் பத்மநாபன் கூறியது: ஐடி துறையில் மிகப் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. எவ் வளவு பேர் வேலையிழப்பர் என்று உறுதியாகக் கூற முடியாது என்றார். ஜப்பானின் நொமுரா நிறுவனத்தின் கணிப்பின்படி மொத்தமுள்ள 7.60 லட்சம் பணியாளர்களில் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் பேருக்கு வேலை போகலாம் என தெரிவித்துள்ளது. இதில் இன்ஃபோசிஸ், காக்னிசென்ட், டெக் மஹிந்திரா, விப்ரோ என நிறுவனங்களிடையே பேதமிருக் காது என்றும் தெரிவித்துள்ளது. டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கை முழுமையடையும் வரை ஆள்குறைப்பு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
பிளஸ் 1 பாடங்களை படிக்காத மாணவர்கள் அதிக கட் ஆஃப் மதிப்பெண் பெற்றும் பொறியியல் படிப்பில் திணறும் பரிதாபம்
பிளஸ் 1 பாடங்களை படிக்காத மாணவர்கள் அதிக கட் ஆஃப் மதிப்பெண் பெற்றும் பொறியியல் படிப்பில் திணறும் பரிதாபம் | 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் பிளஸ் 1 பாடங்களை படிக்காமல் நேரடியாக பிளஸ் 2 பாடங்களை படிக்கும் மாணவர் கள் பொறியியல் படிப்பில் திணறு கிறார்கள். அடிப்படை கணித அறிவை மேம்படுத்தும் பிளஸ் 1 கணித பாடத்தைப் படிக்காததே இந்த அவல நிலைக்கு காரணம் என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். பிளஸ் 2 தேர்வில் மிக அதிக மான மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பலரும் முதல் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைகிறார்கள். பொறியியல் படிப்புக்கான அடிப்படை பிளஸ் 1 கணித பாடம் தான். பல தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அந்த வகுப்புக் குரிய பாடங்களை நடத்துவ தில்லை. மாறாக அடுத்த ஆண்டு வரவிருக்கிற பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்கும் நோக் கில் பிளஸ் 2 பாடங்களை நடத்து கிறார்கள். ஒருசில பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்கள் பெயரளவில் நடத் தப்படும். 12-ம் வகுப்பு பாடங் களுக்கே முக்கியத்துவம் கொடுக் கப்படும். இவ்வாறு பிளஸ் 1 வகுப்புக்குரிய பாடங்களை நடத் தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை நடத்துவதால் மாணவர்கள் அடிப் படை கணித அறிவு பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே, அவர்கள் பிளஸ் 2 தேர்வில் 200-க்கு 200 அல்லது 199, 198 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தாலும் முதல் ஆண்டில் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். கணித பாடத்தில் அடிப்படை அறிவு கிடைக்காமல் செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறைவ துடன் சிலர் தோல்வி அடைய வும் நேரிடுகிறது. பொறியியல் படிப்புக்கான அடிப்படை விஷ யங்கள் பிளஸ் 1 பாடங்களில் உள்ளன. பிளஸ் 1 பாடத்தை படிக்காமல் நேரடியாக பிளஸ் 2 பாடத்தை படித்ததன் காரண மாகவும், பாடங்களை புரியாமல் மனப்பாடம் செய்ததாலும் மாண வர்கள் சிரமங்களுக்கு ஆளாகி றார்கள் என்பதை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வின் மூலம் கண்டறிந்தது. இதைத்தொடர்ந்து, பொறியியல் படிப்புக்கு அடிப் படையான பிளஸ் 1 கணித பாடத்தை கடந்த 2015-ம் ஆண்டு பொறியியல் முதல் ஆண்டு செமஸ்டர் பாடத்திட்டத்தில் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 பாடங்களை நடத்துவது தொடர்ந்து கொண்டுதான் இருக் கிறது. ஓராண்டு படிக்க வேண்டிய பாடங்களை 2 ஆண்டுகள் படித் தால் மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர உதவும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி யல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப் பெண் வாங்கிவிடலாம் என்ற ஆசையே இதற்குக் காரணம். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் மாணவர்களை இதுபோன்ற சூழ லுக்கு தள்ளுவதால் அடிப்படை அறிவு பெறாமல் பட்டப் படிப்பில் அவர்கள்தான் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று ஆசிரியர்கள் எச்சரிக்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது: மேல்நிலைக் கல்வி பாடத் திட்டத்தைப் பொறுத்தவரையில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் அடிப்படை கருத்துகள், கோட்பாடுகள் பிளஸ் 1 பாடத்திட்டத்தில்தான் இடம்பெற்றுள்ளன. பிளஸ் 1 தேர்வு சாதாரண தேர்வாக இருப்பதால் அதற்கான பாடங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை. அதற்கு உரிய முக்கியத்துவமும் கொடுக்கப்படுவது கிடையாது. மாணவர்களும் சரிவர படிப்ப தில்லை. பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தாதவரை, ஆசிரியர் களும் அந்த வகுப்புக்கான பாடங்களை ஒழுங்காக நடத்த மாட்டார்கள். அதேபோல் மாண வர்களும் சரியாக படிக்க மாட்டார்கள். பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டால் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்புக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள். ஐஐடி, நீட் போன்ற அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகிவிடுவார்கள். எனவே, இந்த ஆண்டே பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் கூறியதாவது: தற்போது அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுக ளில் ஆந்திர மாணவர்கள் 16.6 சதவீதமும், மகாராஷ்டிரா மாணவர்கள் 6.5 சதவீதமும், கர் நாடக மாணவர்கள் 5.7 சதவீதமும், கேரள மாணவர்கள் 2.4 சதவீதமும், பிகார் மாணவர்கள் 2.6 சதவீதம் பேரும் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் வெறும் 0.6 சதவீதம் பேரே வெற்றி பெறுகிறார்கள். ஆந்திர மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் சிறந்து விளங்குவதற்கு காரணம் அங்கு பிளஸ் 1 தேர்வு 1978 முதல் பொதுத் தேர்வாக இருந்து வருகிறது. நுழைவுத் தேர்வுக்கான பாடத் திட்டத்தில் 50 சதவீதம் பிளஸ் 1 வகுப்பில் இடம்பெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பு தேர்வு, சாதாரண தேர்வாக இருப்பதால் அதற்கு ஆசிரியர்களும் சரி, மாணவர் களும் சரி முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பிளஸ் 1 தேர்வை பொதுத் தேர்வாக அறிவியுங்கள் என்று கடந்த 6, 7 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். பிளஸ் 1 தேர்வு பொதுத் தேர்வாகிவிட்டால், தற்போது நடைபெறுவது போன்று பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படாது. பொதுத்தேர்வாக இருப்பின் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பு பாடங்களை நன்கு படிப்பார்கள். இதனால், அகில இந்திய நுழை வுத் தேர்வுகளுக்கு தமிழக மாண வர்கள் தயாராகிவிடுவார்கள் என்றார்.