உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, May 16, 2017

அடுத்த 3 ஆண்டுகளில் 2 லட்சம் பொறியாளர்கள் ஐடி துறையில் வேலை இழப்பர் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் கணிப்பு


அடுத்த 3 ஆண்டுகளில் 2 லட்சம் பொறியாளர்கள் ஐடி துறையில் வேலை இழப்பர் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் கணிப்பு | டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஐடி துறையில் ஆண்டுதோறும் 2 லட்சம் பணியாளர்கள் வேலை இழப்பர் என்றும், இந்த நிலை அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தொடரும் என்றும் இத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களான இன்ஃபோ சிஸ், காக்னிசென்ட் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங் களில் இந்நிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனங் களில் ஊழியர்களின் செயல்பாடு அடிப்படையில் மதிப்பீடு செய்து அவர்களை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன. நிறுவனங்களின் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக இது எடுக்கப்படுவதாகக் கூறப் படுகிறது. மேலும் ஐடி துறைக்கு பெருமளவு வேலையை வழங் கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்நாட் டில் உள்ளவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற பாது காப்புக் கொள்கை கடைப்பிடிக் கப்படுவதால் ஏராளமானோர் வேலையிழக்கும் சூழல் உருவாகி வருகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் இந்திய ஐடி நிறுவனங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. பொதுவாக இது போன்ற நடவடிக்கைகள் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஐடி துறையில் தொடர்ந்து நடைபெறும் என்று குளோபல்ஹன்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுநீல் கோயல் தெரிவித்துள்ளார். ஆள்குறைப்பு நடவடிக்கைகள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். அதேசமயம் இத்துறை பொறியாளர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் வேலை வாய்ப்பில் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார். புதிய முறை தொழில்நுட்பத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். பொதுவாக எழுதப்பட்ட சாஃப்ட் வேரை மனிதர்கள் சோதித்துப் பார்க்கும் நடைமுறை (டெஸ்டிங்) இப்போது பின்பற்றப்படுகிறது. இதற்கு மாற்றாக ஆட்டோமேடட் டெஸ்டிங் முறையை பல நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கி யுள்ளன. இதனால் இப்பிரிவில் உள்ள டெஸ்டிங் பணியில் ஈடுபட் டுள்ளவர்களின் வேலை போகும் அபாயம் உருவாகியுள்ளது. அதேசமயம் டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ, டிஜிட்டல் துறையில் குறிப் பிட்ட துறை சார்ந்த நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு அதிக தேவை உள்ளது. இத்துறையில் உள்ள வர்கள் கட்டாயம் தங்களை மாற்றத்துக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டிய தருணமிது. அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு ஐடி சேவைத் துறையில் இந்நிலை நீடிக்கும். இதையடுத்தே ஸ்திரமான வளர்ச்சியை நோக்கி நிறுவனங்கள் நகர முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். டேலன்ட் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் கெல்லி ஓசிஜி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் பிரான்சிஸ் பத்மநாபன் கூறியது: ஐடி துறையில் மிகப் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. எவ் வளவு பேர் வேலையிழப்பர் என்று உறுதியாகக் கூற முடியாது என்றார். ஜப்பானின் நொமுரா நிறுவனத்தின் கணிப்பின்படி மொத்தமுள்ள 7.60 லட்சம் பணியாளர்களில் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் பேருக்கு வேலை போகலாம் என தெரிவித்துள்ளது. இதில் இன்ஃபோசிஸ், காக்னிசென்ட், டெக் மஹிந்திரா, விப்ரோ என நிறுவனங்களிடையே பேதமிருக் காது என்றும் தெரிவித்துள்ளது. டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கை முழுமையடையும் வரை ஆள்குறைப்பு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.  

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.