Friday, June 30, 2017

ஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா?


ஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா? ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள் என்பதும், பள்ளிக் கல்வி என்பது அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையாக்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால், அப்பள்ளிக் கல்வி சீரழிந்து வருவதற்கும், கல்வியின் தரம் குறைந்துவருவதற்குமான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ஆசிரியர்கள் தலையில் சுமத்துவது சரியல்ல. - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, June 29, 2017

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?


பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? | பான் எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உத் தரவு அமலுக்கு வர இருக்கிறது. இதற்காக வருமான வரி கணக்கு தொடர்பான இணையதள பக்கமான www.incometaxindiaefiling.gov.in. என்ற பக்கத்தில் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான வசதி ஏற்படுத் தப்பட்டுள்ளது. வழிமுறைகள் வருமான வரித்துறையின் www.incometaxindiaefiling.gov.in. என்ற இணையப் பக்கத்தை கிளிக் செய்து உள்ளே செல்லவும். இதற்கு எந்த ரிஜிஸ்ட்ரேஷனும் நீங்கள் செய்ய வேண்டாம். பின்னர் அதில் கேட்கப்பட் டுள்ள `பான்' எண்ணுடன் `ஆதார்' எண்ணை இணைக்க பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்ட சரியான பெயரை கொடுக்க வேண்டும். வருமான வரித்துறை வழங்கி உள்ள அறிவுரையின்படி, ஆதார் திட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் யுஐடிஏஐ சோதனை செய்தபின்னர், இணைப்பு உறுதிசெய்யப்படும். எஸ்.எம்.எஸ். மூலம் இணைப்பு ஆதார் எண்ணை பான் எண் ணுடன் இணைப்பதற்கு குறுஞ் செய்தி வசதியையும் வருமான வரித்துறை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கைபேசியில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.அதன் பின் சிறிய இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணைக் குறிப்பிட்டு இதனை என்ற 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட ஆதார் பெயரில் ஏதேனும் சிறிய பிழை இருப்பின், ஆதார் ஒடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) தேவைப்படும். ஒன் டைம் பாஸ்வேர்ட் பதிவு செய்யப்பட்ட செல்போன் அல்லது இ-மெயிலுக்கு அனுப்பப்படும். `பான்' எண்ணுடன் `ஆதார்' எண் இணைப்பை ஏற்படுத்த பய னாளர்கள் பான் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலினத்தைச் சரியாக குறிப்பிடுவது மிக அவ சியம். பான் எண்ணில் உள்ள பெயர் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயர் வேறாக இருந்தால்: ஆதார் எண்ணில் கொடுத்த பெயருக்கும் பான் எண்ணில் உள்ள பெயருக்கும் இடையே ஸ்பெல்லிங் வேறுபாடு இருக்கு மாயின் இணைப்பு தோல்வி யடையும். வரி செலுத்துவோர் ஆதார் பெயரையோ அல்லது பான் பெயரையோ திருத்த வேண்டி யிருக்கும், அதாவது ஆதார் தரவுப் பெட்டகத்திலோ பான் தரவுப் பெட்டகத்திலோ ஸ்பெல்லிங் கைத் திருத்த வேண்டியிருக்கும். பயனாளர்கள் பான் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலினத்தைச் சரியாக குறிப்பிடுவது மிக அவசியம்  DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, June 25, 2017

சர்க்கரை நோய் காரணமாக நாடு முழுவதும் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிப்பு அப்போலோ மருத்துவமனை தகவல்


சர்க்கரை நோய் காரணமாக நாடு முழுவதும் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிப்பு  அப்போலோ மருத்துவமனை தகவல் | நாடுமுழுவதும் சர்க்கரை நோயால் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அப்போலோ மருத்துவமனையின் செயல் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி தெரி வித்தார். அப்போலோ மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நேற்று தொடங்கியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர். இந்த சர்வதேச கருத்தரங்கு குறித்து அப்போலோ மருத்துவமனையின் செயல் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயால் 6 கோடியே 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி பேர் சர்க்கரை நோய் வருவதற்கான ஆரம்ப நிலையில் உள்ளனர். சர்க்கரை நோய் மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளால் 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சர்க்கரை நோய் இதயம், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தாக்குகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட இருப்பதை 70 சதவீதம் பேருக்கு முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோய் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம், பிற உறுப்புகள் பாதிக்கப்படுவதை தடுத்தல், விரைவில் நோய் கண்டறிதல் உள்ளிட்ட சர்க்கரை நோய் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்காக நாடுமுழுவதும் 55 அப்போலோ சர்க்கரை நோய் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2.5 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 6 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த 1.5 லட்சம் பேருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, June 10, 2017

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 4

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் -  4 |

 அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. அண்ணா பேசிக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் விநாயகம் ஒரு கேள்வி கேட்டார், ""பேருந்துகளில், யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்ற குறள் யாருக்காக எழுதப்பட்டுள்ளது? பேருந்து ஓட்டுநருக்கா அல்லது பேருந்து நடத்துநருக்கா?'' என்றார். அதற்கு அண்ணா சட்டென்று பதில் சொன்னார், ""நா உள்ள (நாக்கு உள்ள) ஒவ்வொருவருக்காகவும்.''



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3



அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் -  3 |

சாக்ரடீஸின் சீடர் ஒருவர், ""ஐயனே, அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?'' என்று கேட்டார். உடனே அவர், ""அதோ இருக்கிறாரே ஒரு கிழவர், அவரிடம் சென்று இங்கிருந்து கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு வா!'' என்றார். சீடரும் அந்தக் கிழவரிடம் சென்று அவ்வாறே கேட்டார். அவர் பதிலேதும் கூறவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். பலன் இல்லை. கிழவருக்குப் புத்திசுவாதீனம் இல்லையோ என்று நினைத்து, வந்த வழியே திரும்பிச் சில அடிகள் எடுத்து வைத்தார் அந்தச் சீடர். உடனே கிழவர் அவரை அழைத்து, ""நீ பத்து நிமிடங்களில் கிராமத்தை அடையலாம்!'' என்றார். ""நீங்கள் ஏன் இந்தப் பதிலை நான் கேட்டவுடன் கூறவில்லை?'' என்று சந்தேகத்துடன் கேட்டார் சீடர். ""நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்பதைப் பார்க்காமல் எப்படியப்பா, நீ கிராமத்தை எவ்வளவு நேரத்தில் அடைவாய் என்பதைக் கூற முடியும்?'' என்று திருப்பிக் கேட்டார் அந்தக் கிழவர். சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும் சாக்ரடீஸ், ""அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம்!'' என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 2 |



​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் -  2 |

காமராஜரை, சென்னை, திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சந்திக்க வருபவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். காமராஜர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வருகிறவர்களிடம் பேசுவாரே தவிர, அவர்களிடம் "சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்க மாட்டாராம் காமராஜர். இதற்கான காரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகே பலருக்கும் தெரிய வந்தது. காமராஜர் சாப்பிடும் உணவில் போதுமான உப்போ, புளிப்போ, காரமோ இருக்காதாம். டாக்டர் ஆலோசனைப்படி, உடல்நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சமைக்கப்பட்ட உணவாக அது இருந்தது. அந்த உணவை மற்றவர்களுக்கும் கொடுத்து சங்கடப்படுத்த காமராஜர் விரும்பவில்லை. மேலும், பெரும்பாலும் கஞ்சி உணவையே அவர் சாப்பிடுவார். எனவேதான் யாரையும் சாப்பிடுங்கள் என்று சொன்னதில்லை. ஆனால் வெளியூர்பயணம் என்றால், தனது சாப்பாடு முடிந்தால் சரி என்கிற நினைப்பு அவருக்கு எப்போதுமே இருந்தது கிடையாது. உடன் வந்த போலீஸ், பத்திரிகையாளர்கள், டிரைவர்கள் "எல்லோரும் சாப்பிட்டாயிற்றா' என்று கேட்டு, "ஆச்சு' என்று பதில் வந்தபின்புதான் பயணத்தைத் தொடருவார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் 1

றிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் 1 |

தெருவிளக்கில் படித்து, தன்னுடைய திறமையால் படிப்படியாக முன்னேறி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்ந்தவர் ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர். அவர் எதற்கும் அஞ்சாத மன உறுதி படைத்தவர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு - ஒருசமயம், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆங்கிலயேரின் வீட்டுத் தோட்டத்தில் நுழைந்ததற்காக ஒருவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டார் அந்த ஆங்கிலேய நீதிபதி. அடி வாங்கிய நபர், அந்த நீதிபதியின் மேல் வழக்குத் தொடுத்தார். அந்த வழந்கு ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரிடம் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஐயரிடம் வந்து, ""குற்றம் சுமத்தப்பட்ட ஆங்கிலேயர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். நேரில் வந்து வழக்கில் ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டனர். ஆனாலும் முத்துசாமி ஐயர் அந்த ஆங்கிலேய நீதிபதியை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர் செய்தது குற்றம் என்று தீர்ப்பளித்து, மூன்று ரூபாய் அபராதம் விதித்தார். ஓர் இந்தியக் குடிமகனுக்காக ஆங்கிலேய ஆட்சியில் ஓர் ஆங்கிலேயரை, அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியையே தண்டித்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரின் நேர்மையையும் துணிச்சலையும் அனைவரும் வியந்து பாராட்டினர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, June 6, 2017

கடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி


கடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி | நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். Aska Svn ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது? அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம். கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்… "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.- காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE