இந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ! | 5ஜி நெட்வொர்க் வசதியை கையகப்படுத்தும் முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ தொலைத்தொடர்பு சேவை, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி, வாடிக்கையாளர்களை அள்ளியது. பின்னர் படிப்படியாக சேவைக் கட்டணத்தை நிர்ணயித்தது. இதன் அதிவேகம் இணையச் சேவைக்காக ஏராளமானோர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 4ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், விரைவில் 5ஜி நெட்வொர்க்காக அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, அதனை கையகப்படுத்தும் முயற்சியில் முகேஷ் அம்பானி ஈடுபட்டுள்ளார். இது அமல்படுத்தப்படும் போது, ஜியோவின் 4ஜி சேவை, தானாக 5ஜி ஆக மாறும். ஆனால் அதற்காக 5ஜி நெட்வொர்க் வசதி கொண்ட ஸ்மார்ட்போனிற்கு மாற வேண்டும். சமீபத்தில் குவால்கம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் தனது டிவிட்டரில் 5ஜி ஸ்மார்ட்போனை பதிவிட்டுள்ளார். அதுவே உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் 5ஜி சேவையை பெற முயற்சி எடுக்கும். ஆனால் அவர்களின் ஜியோ முந்திக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Pages
- NEWS
- SSLC
- +2
- TET
- TRB
- TNPSC
- G.Os
- SCHOOL EDUCATION
- DOWNLOAD
- SITES
- LINKS
- kalvisolai.com
- news.kalvisolai.com
- forms.kalvisolai.com
- tngo.kalvisolai.com
- employment.kalvisolai.com
- smartclass.kalvisolai.com
- smartnews.kalvisolai.com
- pallikalvi.kalvisolai.com
- sslc.kalvisolai.com
- plustwo.kalvisolai.com
- tnpsc.kalvisolai.com
- trb.kalvisolai.com
- textbook.kalvisolai.com
- tamilgk.kalvisolai.com
- onlinetest.kalvisolai.com
- audio.kalvisolai.com
- video.kalvisolai.com
- tamilarticle.kalvisolai.com
- doctor.kalvisolai.com
- kitchen.kalvisolai.com

Sunday, October 29, 2017
Fwd: இந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.