Thursday, February 16, 2023

அக்டோபர் 2022 / நவம்பர் 2022

தமிழகம் அக்.9: தி.மு.க., தலைவராக ஸ்டாலின், துணை பொதுச் செயலராக கனிமொழி தேர்வு. அக்.12: திண்டுக்கல், கரூரில் 29,160 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைய உள்ளது. அக்.23: கோவை, கோட்டை மேட்டில் கார் குண்டு வெடிப்பில் ஜமேஷா முபின் பலி. நவ.4: ஆரஞ்சு நிற ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்வு. நவ.10: மதுரை, திருமங்கலம் அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி. வந்தே பாரத் ரயில்: நவ.11: தென்னிந்தியாவில் முதன்முறையாக சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே, நவீன வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் சேவை துவக்கம். நவ.12: மயிலாடுதுறை சீர்காழியில் 122 ஆண்டுகளுக்கு பின் 44 செ.மீ., மழை பதிவானது. நவ.23: மின்சார எண்ணுடன், ஆதார் எண் இணைக்க உத்தரவு. அடடா அரிட்டாபட்டி: நவ.24: தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக மதுரையின் அரிட்டாபட்டி கிராமம் (477.24 ஏக்கர் நிலப்பகுதி) அறிவிப்பு. இந்தியா அக்.1: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக ஆர்.வெங்கட்ராமன் பதவியேற்பு. அக்.5: இந்தியாவில் தயாரான இலகுரக போர் ஹெலிகாப்டர் 'பிரசன்ட்', விமானப்படையில் சேர்ப்பு. *தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியை, பாரத் ராஷ்ட்ரீய சமீதி என பெயர் மாற்றினார். அக்.17: ஹிந்தியில்மருத்துவப் படிப்பு ம.பி.,யில் அறிமுகம். அக்.24: இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எலிசபெத் ஜோன்ஸ் பதவியேற்பு. இரட்டை கோபுரம் தகர்ப்பு: ஆக.28: உபி.,யின் நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரட்டை கோபுரம் (அபெக்ஸ் 335 அடி உயரம், 32 மாடி, சியேன், 318 அடி உயரம், 29 மாடி), வெடி வைத்து 9 வினாடியில் தகர்ப்பு. ஹரஹர மஹாதேவ்: அக்.30: ராஜஸ்தானின் நாத்வாரா பகுதியில் உலகின் உயரமான (369 அடி) சிவன் சிலை திறப்பு. பாரம் தாங்காத பாலம்: அக்.30: குஜராத்தில் மோர்பி தொங்கும் நடைபாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் பலி. நவ.1: இந்தியாவின் முதல் மீன் பூங்கா அசாமில் அமைக்கப்பட்டது. நவ.5: இந்தியாவின் முதல் வாக்காளரான ஹிமாச்சல பிரதேசத்தின் சியாம் சரண் நேகி 106, காலமானார். *திருப்பதி கோயில் சொத்து மதிப்பு ரூ. 2.26 லட்சம் கோடி என அறிவிப்பு. நவ.6: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு. நவ.9: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு. நவ.11: ஜார்க்கண்டில் இட ஒதுக்கீடு 77 சதவீதமாக உயர்த்துவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றம். நவ.19: உ.பி.,யின் வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கினார். நவ.20: கர்நாடகாவின் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. நவ.23: மேற்கு வங்க கவர்னராக சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்பு. உலகம் அக்.2: இந்தோனேஷியாவின் கன்சுருஹன் மைதானத்தில் கால்பந்து ரசிகர்கள் இடையே வன்முறையில் 125 பேர் பலி. அக்.5: துபாயில் ஜெபெல் அலி கிராமத்தில் 70 ஆயிரம் சதுர அடியில் ஹிந்து கோயில் திறப்பு. அக்.10: பாகிஸ்தானின் கில்ஜித் - பலுசிஸ்தான் மாகாணத்தில் உலகின் உயரமான இடத்தில் (15,396 அடி) ஏ.டி.எம்., திறப்பு. அக்.13: குவைத்துக்கான இந்திய துாதராக ஆதர்ஷ் ஸ்வைகா பதவியேற்பு. அக்.18: சுவீடன் பிரதமராக உல்ப் கிறிஸ்டெர்சன் பதவியேற்பு. அக்.23: சீன கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலராக அதிபர் ஜி ஜின்பிங் தேர்வு. இந்தியருக்கு மகுடம்: அக்.25: பிரிட்டன் பிரதமராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் பதவியேற்பு. அக்.27: எழுபது வருடமாக குளிக்காத, உலகின் அழுக்கு மனிதர் ஈரானின் அமா ஹாஜி 94, காலமானார். அக்.30: தென்கொரியாவின் சியோலில் 'ஹாலோவீன்' திருவிழா நெரிசலில் 158 பேர் பலி. அக்.31: பிரேசில் அதிபராக லுலா சில்வா பதவியேற்பு. நவ.14: இந்தோனேஷியாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஷீ ஜிங்பிங் முதல் முறையாக சந்திப்பு. நவ.15: உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியது. *இந்தோனேஷியாவில் 17வது 'ஜி-20' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு. நவ.21: இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 252 பேர் பலி. நவ.22: கஜகஸ்தான் அதிபராக காசிம் ஜோமார்ட் டோக்யேவ் மீண்டும் பதவியேற்பு. நவ.29: பாரத் பயோடெக் தயாரித்த மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல். உலக அழகியே...: நவ.29: 'மிஸ் எர்த் - 2022' அழகி பட்டம் வென்ற முதல் தென்கொரிய பெண் மினா ஷு சாய். டாப் 4 அக்.26: காங்., தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு. நவ.11: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. நவ.11: காந்தி கிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு நவ.24: மலேசிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் 75, பதவியேற்பு.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.