Thursday, February 16, 2023

பிப்ரவரி / மார்ச் 2022

மார்ச்8: துாத்துக்குடியில் ரூ.4755 கோடியில் பர்னிச்சர் (அறைகலன்) பூங்காவிற்கு அடிக்கல். மார்ச்29: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜ கண்ணப்பனும், போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கரும் இலாகா மாற்றம். மார்ச்31: வன்னியருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு. இந்தியா உயரமான ராமானுஜர்: பிப்.5: தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அமர்ந்த நிலையில் இருக்கும் உலகின் 2வது உயரமான சிலை இது. முதலிடத்தில் தாய்லாந்தின் புத்தர் சிலை (354 அடி) உள்ளது. பிப்.13: 10 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் அமைக்கப்பட்ட உலகின் நீளமானது (9.02 கி.மீ.,) 'அடல்' நெடுஞ்சாலை சுரங்கப்பாதை (ஹிமாச்சல், ரோஹ்டாங்க்). இதற்கு கின்னஸ் அங்கீகாரம் கிடைத்தது. பிப்.14: 54 சீன அலைபேசி செயலிக்கு மத்திய அரசு தடை. சவுகான் சாதனை: மார்ச்19: பா.ஜ., சார்பில் 15 ஆண்டு, 11 நாள் முதல்வர் பதவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் (ம.பி.,) சாதனை. பிப்.21: கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை. பிப்.26-28 : உக்ரைனில் இருந்து 6 விமானங்கள் மூலம் 1608 மாணவர்கள் இந்தியா திரும்பினர். மார்ச்10: 'நீட்' தேர்வுக்கு வயது உச்ச வரம்பு இல்லை என தேசிய மருத்துவ கழகம் அறிவிப்பு. மார்ச்15: பள்ளி, கல்லுாரி களில் சீருடை தான் அணிய வேண்டும் என 'ஹிஜாப்' வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு. மார்ச்16: சிறப்பு உயர்நிலை மருத்துவ படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு உச்ச நீதி மன்றம் அனுமதி. *12 - 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசி பணி துவக்கம். மார்ச்18: கேரளாவின் 'மாத்ரு பூமி' நாளிதழின் நுாற்றாண்டு விழாவை காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவக்கினார். மார்ச்21: மணிப்பூர் முதல்வராக பா.ஜ.,வின் பீரேன் சிங் மீண்டும் தேர்வு. *லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் சரத் யாதவின் லோக்தாந்ரிக் கட்சி இணைப்பு. மார்ச்22: மத்திய பல்கலையில் இளநிலை, முதுநிலை படிப்பில் சேர நுழைவுத்தேர்வு கட்டாயம் என யு.ஜி.சி., அறிவிப்பு. மார்ச்23: பா.ஜ., வின் புஷ்கர் சிங் தாமி உத்தரகண்ட் முதல்வராக பதவியேற்பு. மார்ச்25: உ.பி., முதல்வராக பா.ஜ., வின் யோகி ஆதித்யநாத் பதவியேற்பு. *நாகாலாந்தின் முதல் பெண் ராஜ்யசபா எம்.பி.,யாக பாங்னான் கோன்யாக் (பா.ஜ.,) தேர்வு. மார்ச்26: உத்தரகண்டின் முதல் பெண் சபாநாயகராக ரிதி கந்துாரி பதவியேற்பு. மார்ச்28: கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் (பா.ஜ.,) பதவியேற்பு. பிரமாண்ட கும்பாபிஷேகம் மார்ச்28: தெலுங்கானாவில் ரூ.1280 கோடியில் புனரமைக்கப்பட்ட லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. உலகம் பிப்.2: உலகின் நீளமான மின்னல் (768கி.மீ.,), அமெரிக்காவின் லூசியானா, மிசிசிப்பி, டெக்சாஸ் பகுதியில் தோன்றியது. பிப்.3: சிரியாவில் அமெரிக்க படை தாக்குதலில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் குரேஷி கொல்லப்பட்டார். உருக்குலைந்த உக்ரைன்: பிப்.24: 'நேட்டோ' அமைப்பில் உக்ரைன் சேர்வதை எதிர்த்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 10 மாதத்தை கடந்து போர் தொடர்கிறது. உக்ரைனில் 6755 பேர் பலியாகினர். 1.60 கோடி பேர் அகதிகளாகினர். மார்ச்4: பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் தற் கொலைப்படை தாக்குதலில் 56 பேர் பலி. மார்ச்8: ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை. மார்ச்9: 1999ல் இந்திய விமானத்தை காத்மாண்டுவில் இருந்து ஆப்கனுக்கு கடத்திய பயங்கரவாதி ஜாகூர் இப்ராஹிம், பாகிஸ்தானில் சுட்டுக்கொலை. மார்ச்10: தென் கொரிய அதிபராக யூன் சியோக் யூல் 61, பதவியேற்பு. மார்ச்11: சிலி அதிபராக கேப்ரியல் போரிக் 36, பதவியேற்பு. மார்ச்12: துர்க்மெனிஸ்தான் அதிபராக செர்தார் பெர்டி முகாமிதோவ் பதவியேற்பு. மார்ச்17: உலக அழகியாக (மிஸ் வேர்ல்டு - 2021 போலந்தின் கரோலினா பைலாஸ்கா 23, தேர்வு. மார்ச் 21: ஐ.நா., உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்திய பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் நியமனம். விழுந்த விமானம்: மார்ச்21: சீனாவில் குன்மிங் டூ குவாங்சு சென்ற விமானம் டெங்ஸியான் மலையில் விழுந்து 132 பேர் பலி. மார்ச் 22: மோசடி வழக்கில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு 9 ஆண்டு சிறை தண்டனை துபாய் பயணம்: மார்ச்24: முதல்வர் ஸ்டாலின் 4 நாள் பயணமாக துபாய் சென்றார். 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ. 6100 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. மார்ச் 28: ஆப்கனில் ஆண் துணையின்றி விமானத்தில் பெண்கள் பயணிக்க தடை. டாப் 4 பிப்.7: டில்லி ஜே.என்.யு., பல்கலை முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம். மார்ச்4: உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளில் 20ஐ தி.மு.க., கைப்பற்றியது. மார்ச்16: பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் சிங் மான் பதவியேற்பு. மார்ச்27: கொரோனா குறைந்ததால் 2 ஆண்டுக்கு பின் இந்தியாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் துவக்கம்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.