Thursday, February 16, 2023

ஜூன் 2022

தமிழகம் ஜூன்1: பத்திரப்பதிவுக்கு 'தட்கல்' முறை அறிமுகம். டோக்கனுக்கு ரூ. 5000 கட்டணம். * அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 பழமையான சுவாமி சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு. ஜூன்2: ராஜ்யசபா எம்.பி., யாக தி.மு.க.,வின் கல்யாண சுந்தரம், கிரிராஜன், ராஜேஷ் குமார், அ.தி.மு.க.,வின் சண்முகம், தர்மர், காங்., சிதம்பரம் தேர்வு. ஜூன்9: சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்முறையாக பெண் டவாலி தியானா நியமனம். ஜூன்10: டி.என்.பி.எஸ்.சி., தலைவராக (பொறுப்பு) முனியநாதன் பதவியேற்பு. ஜூன் 11: சபரிமலையில் இசைக்கப்படும் 'ஹரிவராசனம்' பாடலின் நுாற்றாண்டு விழாவை சென்னையில் கவர்னர் ரவி துவக்கினார். ஜூன்14: முதன்முறையாக கோவை-ஷீரடிக்கு தனியார் ரயில் சேவை. மலை ரயிலின் ராணி: ஜூன்16: நீலகிரி மலை ரயிலில் முக்கிய 'பிரேக்ஸ் மேன்' பணிக்கு முதன்முறையாக பெண் (சிவஜோதி) நியமனம். ஜூன்23: அ.தி.மு.க., பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு. 23 தீர்மானங்கள் ரத்து. பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். ஜூன் 25: பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் 'கல்லுாரி கனவு' திட்டம் துவக்கம். இந்தியா ஜூன்1: 2020 -2021 நிதி ஆண்டில் தனிநபர், நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை யாக பா.ஜ., ரூ. 477 கோடி, காங்., ரூ. 74 கோடி பெற்றன. ஜூன் 4: உ.பி.,யில் ரசாயன ஆலை வெடித்ததில் 9 பேர் பலி. ஜூன்9: சர்வதேச நிதியத்தின் ஆசிய-பசிபிக் மண்டல இயக்குனராக இந்தியாவின் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் நியமனம். ஜூன்11: ஐ.சி.ஏ.ஆர்., நிறுவனம் தயாரித்த விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி 'அனோகோவாக்ஸ்' அறிமுகம். 'ஏசி' ரயில் நிலையம்: ஜூன்13: முழுவதும் 'ஏசி' வசதி செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ரயில் நிலையம் பெங்களூருவில் திறப்பு. இளமை... புதுமை: ஜூன்15: முப்படையில் இளைஞர்களுக்கு நான்காண்டு பணி வழங்கும் 'அக்னிபாத்' திட்டம் துவக்கம். ஜூன்24: தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) இயக்குநர் ஜெனரலாக திங்கர் குப்தா பதவியேற்பு. ஜூன்26: கேரளாவின் கிருஷ்ணப்பிரியா தன் சகோதரர்களுக்கு உலகின் நீளமான கடிதம் (1423 அடி) எழுதி சாதனை. *ஜெர்மனியின் மியூனிக்கில் நடந்த 'ஜி7' மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்பு. பெரிய சோலார் மையம்: ஜூன்27: கேரளாவின் காயம்குளத்தில் நாட்டின் பெரிய மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை (101.6 மெகாவாட்) அமைத்து டாடா பவர் நிறுவனம் சாதனை. பரப்பளவு 350 ஏக்கர். துல்லிய தாக்குதல்: ஜூன்29: ஆயுதம் தாங்கிச் சென்று வானில் உள்ள இலக்கை தாக்கும் 'அப்யாஸ்' போர் வாகனத்தை இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் சோதனை செய்தது. ஏக்நாத்துக்கு அதிர்ஷ்டம்: ஜூன்30: மஹாராஷ்டிரா முதல்வராக சிவசேனா அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு. உலகம் ஜூன்5: வங்கதேசத்தில் ரசாயன கன்டெய்னர் சேமிப்பு கிடங்கில் தீ. 50 பேர் பலி. ஜூன்12: உலகில் நீண்டகால அரசப்பணியில் 2ம் இடம் பெற்று பிரிட்டன் ராணி எலிசபெத் (70 ஆண்டு, 126 நாட்கள்) சாதனை. பிரான்சின் 14ம் லுாயிஸ் (72 ஆண்டு, 110 நாட்கள்) முதலிடம். ஜூன்15: 60 வருடத்துக்கு முன் கடத்தப்பட்ட கும்பகோணம் கோயில் சுவாமி சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு. ஜூன்18: சோமாலியா அதிபராக ஹம்சா அப்தி பதவியேற்பு. ஜூன்21: ஐ.நா.,வின் இந்திய நிரந்தர பிரதிநிதியாக ருச்சிரா காம்போஜ் பதவியேற்பு. *உலகில் ஆற்று நீரில் வாழும் பெரிய திருக்கை மீன் (நீளம் 13 அடி, எடை 300 கிலோ) கம்போடியாவில் பிடிபட்டது. அதிர் ந்தது ஆப்கன்: ஜூன்22: ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தின் கோஸ்ட் நகரில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1163 பேர் பலி. ஜூன்23: அமெரிக்க அதிபரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஆர்த்தி பிரபாகர் பதவியேற்பு. ஜூன்24: உலகின் பெரிய பாக்டீரியா (2 செ.மீ. நீளம்) கரீபியன் தீவில் கண்டுபிடிப்பு. *உள்நாட்டில் தயாரான 'நுாரி' ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை அனுப்பி தென்கொரியா சாதனை. ஜூன்25: கருக்கலைப்பு உரிமையை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மாகாணங்களே தனியாக முடிவு செய்யலாம் என அறிவிப்பு. *வங்கதேசத்தின் பத்மா நதியின் குறுக்கே நீண்ட சாலை ரயில் பாலம் (6.15 கி.மீ.,) திறப்பு. ஜூன் 26: இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 470 ஆக உயர்வு. ஜூன் 27: ஜெர்மனியில் 48வது 'ஜி-7' நாடுகளின் மாநாடு நடந்தது. ஜூன்30: பிலிப்பைன்ஸ் அதிபராக மார்கோஸ் பதவியேற்பு. டாப் 4 ஜூன்13: ஆசியாவின் மிக நீள தந்தம் (7.33 அடி) கொண்ட 'போகேஸ்வரா' யானை 60, கர்நாடகாவில் உயிரிழப்பு. ஜூன்15: 27 ஆண்டுக்கு பின் 'இன்டர்நெட் எக்ஸ்புளோரர்' தேடுதளத்தின் சேவை நிறுத்தம். ஜூன்18: வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பதற்கு மத்திய அரசு அரசாணை. ஜூன்22: இந்தியாவில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.