Thursday, February 16, 2023

மே 2022

தமிழகம் மே3: இலங்கை மக்களுக்கு தி.மு.க., சார்பில் ரூ. 1 கோடி உதவி. மே5: அரசு பஸ்சில் 5 வயது வரை இலவசமாக செல்ல அனுமதி. புனிதர் பட்டம்: மே15: கன்னியாகுமரியில் 18ம் நுாற்றாண்டில் வாழ்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு இத்தாலியின் வாடிகனில் 'புனிதர்' பட்டம் வழங்கப்பட்டது. மே18: தேனி அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். பட்டின பிரவேசம்: மே22: மயிலாடுதுறை தருமபுர ஆதினம் பட்டின பிரவேசம் நடந்தது. மே24: ஜூனுக்கு பதிலாக மேமாதத்தில் மேட்டூர் அணை பாசனத்துக்கு திறப்பு. மே26: சென்னையில் ரூ.31,530 கோடி திட்டப்பணிகளை பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் துவக்கினர். மதுரை - தேனி ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. மே27: ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு. புதிய தலைமை: மே28: பா.ம.க.,வின் தலைவராக அன்புமணி பதவியேற்பு. இந்தியா மே1: ராணுவ துணை தளபதியாக பி.எஸ்.ராஜூ பதவியேற்பு. *வெளியுறவு துறை செயலராக வினய் மோகன் வத்ரா நியமனம். மே2: கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு. மே5: ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தொகுதி எண்ணிக்கை 83ல் இருந்து 90 ஆக உயர்வு. லோக்சபா தொகுதி 6ல் இருந்து 5 ஆக குறைப்பு. மே10: குழந்தைகளுக்கு 'பெர்த்' வழங்கும் வசதி, லக்னோ மெயில் ரயிலில் அறிமுகம். மே13: டில்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் பலி. மே15: திரிபுரா முதல்வராக மாணிக் சாஹா பதவியேற்பு. *தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பதவியேற்பு. மே17: இந்தியாவில் தயாரான 'சூரத்', 'உதயகிரி' போர்க்கப்பல்கள் அறிமுகம். மே21: மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ. 7 குறைத்தது. மே25: காங்கிரசில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் விலகல். *காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு டில்லி என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மே28: உலகின் முதல் 'நானோ' யூரியா ஆலையை பிரதமர் மோடி, குஜராத்தில் திறந்து வைத்தார். உலகம் மே1: அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளி நந்த் முல்சந்தானி நியமனம். மே4: ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். வானமேஎல்லை: மே4: உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், (கடல் மட்டத்திலிருந்து 28,970 அடி) வானிலை நிலையம் அமைத்து சீனா சாதனை. மே6: உலகில் முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு லண்டனில் பதிவானது. மே8: எவரெஸ்டில் 26வது முறையாக ஏறி நேபாளத்தின் கமி ரீட்டா சாதனை. மே10: தென்கொரிய அதிபராக யூன் சுக் யோல் பதவியேற்பு. *ஹங்கேரியின் முதல் பெண் அதிபராக கடாலின் நோவக் பதவியேற்பு. மே12: இலங்கை இடைக்கால பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்ரமசிங்கே பதவியேற்பு. மே14: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக ஷேக் முகமது பின் அல் நஹ்யான் பதவியேற்பு. நீளமான தொங்கு நடை பாலம்: மே14: செக் குடியரசில் உள்ள ஸ்லாம்னிக் - கிலம் மலை இடையே உலகின் நீளமான (2365 அடி) தொங்கு நடை பாலம் திறப்பு. மே15: சோமாலியா அதிபராக ஹசன் ஷேக் முகமது பதவியேற்பு. மே16: பிரான்ஸ் பிரதமராக எலிசபெத் போர்னி பதவியேற்பு. மே18: தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகையை (புளூ ஹவுஸ்) மக்கள் பார்வையிட 74 ஆண்டுக்குப்பின் அனுமதி. மே22: ஆஸ்திரேலிய பிரதமராக அந்தோணி ஆல்பனிஸ் பதவியேற்பு. *கிழக்கு திமோர் அதிபராக ஜோஸ் ரமோஸ் ேஹார்தா பதவியேற்பு. மே23: சோமாலியா அதிபராக ஹாசன் ேஷக் முகமது பதவியேற்பு. மே25: உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் பதவியேற்பு. நெஞ்சம் தகர்ந்தது: மே25: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண துவக்கப்பள்ளியில், இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 19 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி. மே26: பயனர்களின் தகவலை விற்ற வழக்கில் 'டுவிட்டர்' நிறுவனத்திற்கு ரூ.1165 கோடி அபராதம். மே29: நேபாள விமான விபத்தில் 22 பேர் பலி. டாப் 4 மே7: 8000 மீட்டர் உயரமான 5 சிகரங்களில் (கஞ்சன்ஜங்கா, எவரெஸ்ட், லோட்சே, மக்காலு, கிளிமஞ்சாரோ) ஏறி மஹாராஷ்டிராவின் பிரியங்கா சாதனை. மே11: ஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா 87, பிளஸ் 2 தேர்வில் வெற்றி. மே18: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. மே25: இந்தியாவின் முதல் பெண் போர் விமானியானார் கேப்டன் அபிலாஷா பராக்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.