Thursday, February 16, 2023

க்ரைம் ரவுண்ட்-அப் 2022

தமிழகம் ஜன. 3: சென்னை திருவான் மியூர் ரயில்நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரூ. 1.5 லட்சம் கொள்ளை அடித்ததாக ரயில்வே ஊழியர் டீக்காராம், அவரது மனைவி சரஸ்வதி இணைந்து நாடகமாடினர். உண்மையை ஒரே நாளில் கண்டுபிடித்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். ஜன.11: சென்னை புரசை வாக்கத்தில் மனநலம் பாதிக்கப் பட்ட 17 வயது சிறுமி, சிகிச்சைக்குப் பின் குணம் அடைந்தார். 11 வயதில் உறவினர் ஒருவர் பலாத்காரம் செய்ததால் மனநலம் சரியில்லாமல் ஆனது என தெரிவிக்க, பக்கத்து வீட்டு ஆட்டோ டிரைவர் நாராயணன் 59, கைது. ஜன.27: அரியலுார் வடுகர் பாளையத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி லாவண்யா, விஷம் குடித்து தற்கொலை. மதம் மாற கட்டாயப்படுத்தியதாக எழுந்த புகாரில் உண்மையில்லை என மாவட்ட கல்வி அலுவலர் விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. பிப்.13: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்ற தீட்சிதர், பெண் தாக்கப்பட்டனர். 3 தீட்சிதர் மீது வழக்கு. மார்ச்8: சேலம் ஓமலுாரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ். 2015ல் நாமக்கல், தொட்டி பாளையம் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 16 பேர் கைது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி யுவராஜுக்கு 3 ஆயுள், 5 பேருக்கு இரட்டை ஆயுள், 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மே7: சென்னை விசாரணை கைதி விக்னேஷ் மரணம் அடைந்ததில் போலீஸ் மீது கொலை வழக்குப் பதிவு. மே25: ராமேஸ்வரம் வடகாடு பகுதி கடற்கரையில் இறால் பண்ணையில் வேலை செய்த வடமாநில இளைஞர்களால், பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை. 6 பேர் கைது. ஜூன்2: ஈரோட்டில் சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்பனையில் ஈடுபட்ட தாயார், அவரின் கள்ளக்காதலன் கைது. வீண் வன்முறை: ஜூலை13: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி, 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை. இரு ஆசிரியர்கள் கைது. 3 நாட்களுக்குப் பின் மக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி பஸ்சிற்கு தீ வைத்து, அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர். 350 பேர் கைதாகினர். ஸ்ரீமதி உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஜூலை 23ல் அடக்கம் செய்யப்பட்டது. மாணவி கொலை செய்யப்பட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை என கோர்ட் கூறியதால் தாளாளர் உட்பட 3 பேருக்கு ஜாமின். ஆக.5: கச்சநத்தத்தில் 2018ல் 3 பேர் கொலை வழக்கில் 27 பேருக்கு சிவகங்கை கோர்ட் ஆயுள் தண்டனை. ஆக.13: சென்னை அரும்பாக்கம், பெடரல் வங்கியில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளை. அதே வங்கியில் பணியாற்றிய சந்தோஷ் உட்பட 5 பேர் கைது. 18 கிலோ நகை பறிமுதல். சந்தோஷ் உறவினர் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் 3.7 கிலோ நகை பறிமுதல். கொள்ளையில் ஈடுபட்ட 8 பேரில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது. ஆக.18: துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை. செப்.23: மதுரை, சோழ வந்தான் பேட்டை பகுதியை சேர்ந்த சந்தியா 27, என்பவர் 6 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்தார். நாமக்கல், திருச்செங்கோட்டில் 7வது திருமணத்துக்கு தயாரான போது, சந்தியா உட்பட 4 பேர் கைது. செப்.26: சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை, அவரது உறவினரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள், போலீஸ் ஒருவருக்கு 20 ஆண்டு சிறை. என்ன கொடுமை இது: அக்.13: சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில், காதலை ஏற்காத மாணவி சத்யாவை, ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷ், குண்டர் சட்டத்தில் கைது. சத்யாவின் தந்தை மாணிக்கம் தற்கொலை. நவ.8: தமிழகத்தில் 9 இடத்தில் போலியாக கூட்டுறவு வங்கி துவங்கி மோசடி செய்த சந்திரபோஸ் கைது. டிச.13: திருவண்ணாமலை கீழ்குப்பத்தில் கூலித் தொழிலாளி தனது 4 குழந்தைகள், மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை. இந்தியா ஜன.10: கேரளாவில் சமூக வலைதளத்தில் குழுக்களை ஏற்படுத்தி, மனைவிகளை மாற்றிக் கொண்ட கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது. தவறான முடிவு: ஜன.28: கர்நாடக முன்னாள் முதல்வர், பா.ஜ.,வின் எடியூரப்பா பேத்தி டாக்டர் சவுந்தர்யா 30, பெங்களூரு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை. பிப்:12: மும்பை கப்பல் கட்டும் நிறுவனம் ஏ.பி.ஜி.ஷிப்யார்டு ரூ. 22 ஆயிரம் கோடி மோசடி. போதையின் பாதையில்...: பிப்:12: குஜராத்தில் கடல் வழியாக கடத்தப்பட்ட ரூ. 2000 கோடி போதைப் பொருள் பிடிபட்டது. பிப்.18: 56 பேர் பலியான ஆமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு துாக்கு, 11 பேருக்கு ஆயுள். ஏப்.8: ரயில் சிக்னலை துண்டித்து திருப்பதி எக்ஸ் பிரசில் புகுந்த கொள்ளையர்கள் பயணிகளிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றனர். மே17: சீன தொழிலாளர்களிடம் ரூ. 50 லட்சம் பெற்று பாஸ்போர்ட் வழங்கியதாக சிவகங்கை எம்.பி., கார்த்தி மீது சி.பி.ஐ., வழக்கு. மே20: லட்சத்தீவு கடற் பகுதியில் ரூ.1500 கோடி போதைப் பொருளுடன் கும்பல் கைது. ஜூன்6: 28 பேரை பலி கொண்ட வாரணாசி இரட்டை குண்டுவெடிப்பு (2006) பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு துாக்கு. ஜூன்24: குஜராத் இனக்கலவர வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு. செப்.22: பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்த புகாரில் தமிழகம், கேரளா உட்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை. இதில் 106 பேர் கைதாகினர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் வீடு, வாகனங்களில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டன. பார்த்தா...அர்பிதா: ஜூலை23: மேற்குவங்க ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி கைது. அக்.11: தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் ரோஸ்லின் என இரு பெண்களை கேரளா திருவனந்தபுரத்தில் நரபலி கொடுத்த பகவந்த், லைலா தம்பதி கைது. உடலை வெட்டி பூஜை செய்தது, சமைத்து சாப்பிட்டது, உடல் உறுப்புகளை விற்றது தெரியவந்தன. இவர்களுக்கு உதவியாக இருந்த முகமது ஷாபியும் கைது. காதலன் டூ வில்லன்: நவ.14: டில்லியில் காதலருடன் தனியாக வசித்த இளம்பெண் ஸ்ரத்தா, 35 துண்டுகளாக வெட்டிக் கொலை. 6 மாதங்களுக்குப் பின் கொலை செய்த காதலன் அப்தாப் கைதாகினார். நவ.28: டில்லி, பாண்டவ் நகரில் கணவர் அஞ்சன் தாசை கொலை செய்து, சிறு துண்டுகளாக பல்வேறு பகுதிகளில் வீசிய மனைவி பூனம், மகன் தீபக் கைது. உலகம் மார்ச்12: சவுதி அரேபிய வரலாற்றில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை. மே15: அமெரிக்க சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்து, துப்பாக்கிசூடு நடத்தியதில் 10 பேர் பலி. இதை கொலையாளி இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பினான். ஜூலை6: மியான்மரில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை. ஆக.10: 2021ல் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ., சோதனை. ஆக.12: நியூயார்க் கருத்தரங்கில் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.