Saturday, February 18, 2023

CA JANUARY 2023

பிப்ரவரி 5 : அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெல் கொள்முதல் விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வு கள் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சில வழிகாட்டுதலுடன் மாதாந்திர மின்கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி னார். பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறிய ஆதிச்சநல்லூரை அடுத்துள்ள திருக்கோளூரில் அகழாய்வு பணி தொடங்கியது. கச்சா எண்ணெய் மீதான லாப வரியையும், டீசல், விமான ஏரிபொருள் மீதான ஏற்றுமதி வரியையும் மத்திய அரசு உயர்த்தியது. இந்தியாவில் 48 கோடி பேர் PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டனர். மார்ச் 31-ந் தேதிக்குள் இணைக்காவிட்டால் PAN எண் செயலற்றதாகிவிடும்.சாதனை வெளிநாட்டு போர் பயிற்சியில் ஈடு பட்ட முதல் இந்திய பெண் விமானி என்ற புதிய சரித்திரத்தை அவனி சதுர்வேதி படைத்துள்ளார். 

பிப்ரவரி 6 : 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தமிழ் நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. அ.தி.மு.க. வேட்பு மனுவில் கையெழுத்திட அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிருக்கு ஹெக்டேருக்கு 2000 ரூபாய், பயிர் வகைகளுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியில் இருந்துஒ.பன்னீர் செல்வம் தரப்பு விலகியது. நாடாளுமன்றத்தில் அதானி விவ காரம் பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி தன்னால் இயன்றதை செய்வார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்ராகுல்காந்தி கூறினார். தமிழகத்தில் அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தங்களது படிப்புக்கு ஏற்ற வசதி, வாய்ப்புகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற முதுநிலை டாக்டர்கள் மறுக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட 120 கிலோ வெடி மருந்துகளை என்ஐஏ. அதிகாரிகள் அழித்தனர். 

பிப்ரவரி 7 : ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டி யிட காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர் கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மோடி ஆட்சிக்காலத்தில் அதானி சொத்துகள் உயர்ந்தது எப்படி என்று மக்களவையில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். ஓ.பி.சி. இடஒதுக்கீட்டில் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூபாய் 8 லட்சத்தில் இருந்து உயர்த்தும் திட்டம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சமூக நீதித்துறை மந்திரி வீரேந்திரகுமார் தெரிவித்தார். சமஸ்கிருதத்துக்கு ரூ.198 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு, தமிழுக்கு வெறும் ரூபாய் 11 % கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் கனிமொழி எம்.பி. ஆவேசமாக பேசினார். ஏழைகள் நலன்தான் - பா.ஜனதா அரசு தாக்கல் செய்த ஒவ்வொரு பட்ஜெட்டின் முக்கிய நோக்கம் என்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். ஜே.இ.இ.தேர்வு நாடு முழுவதும் 8 லட்சத்து 23 ஆயிரத்து 967 பேர் எழுதிய ஜே.இ.இ. முதன்மைத்தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதில் 20 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணை எடுத்தனர். பிப்ரவரி 8 தங்கம் விலை மீண்டும் ரூ.43 ஆயி ரத்தை தாண்டியது. தமிழ்நாட்டில் அமையும் பாதுகாப்பு தொழில் வழித்தடம் திட்டத்தில் இதுவரை ரூ.3,861 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.நிதி நெருக்கடிகள் இருந்தாலும் தேர்தல் அறிக்கையில் அறிவித்த உறுதி மொழிகளில் 85 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளோம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

பெங்களூரு விமானநிலையத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக் கும் திட்டத்தை நீக்கியதற்காக மத்திய அரசுக்கு தி.மு.க. கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. வங்கி கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் 0.25 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால், வீடு, வாகன கடன் களுக்கான வட்டி உயரும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக 31 லட்சத்து 49 ஆயிரத்து 398 ஆண்களும், 36 லட்சத்து 9 ஆயிரத்து 27 பெண்களும், 273 திருநங்கைகளும் என மொத்தம் 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 பேர் பதிவு செய்திருக்கின்றனர் என அரசு தெரிவித்துள்ளது. பனிமலைப் பகுதியில் உள்ள பனி ஏரி கள் உடையும் அபாயத்தால், இந்தியாவில் 30 லட்சம் மக்களுக்கு ஆபத்து என்றும், இது உலகிலேயே அதிகம் என்றும் ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல் துறையில் பெண்கள் எண்ணிக்கையை 33 சதவீதமாக போலீஸ் உயர்த்துமாறு நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.பிப்ரவரி 9 சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று டி.ஆர். பாலுஎம்.பி. மக்களவையில் வலியுறுத்தினார். 

சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தால், சமையல் கியாசை மிகவும் மலிவான விலைக்கு விற்க முடியும் என்று நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய மந்திரி கூறினார். 2030-ம் ஆண்டுக்குள் கொத் தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்று தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உறுதி கூறியுள்ளார். குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப் பட்ட தடை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள நெல் கொள் முதல்நிலையங்களில் மத்தியகுழுவினர் 2-வது நாளாக ஆய்வு செய்தனர். தங்கம் இலங்கையில் இருந்து படகில் கடத்தப்பட்டு மண்டபம் கடற்பகுதி யில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டி கள் கடலில் இருந்து மீட்கப்பட்டது. நீச்சல் வீரர்கள் உதவியுடன் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி னார்கள். ஆன்லைன் டிக்கெட் யூ.டி.எஸ். செயலியில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 50.75 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. மேலும் 21/2 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 

மரம் வளர்ப்புத்திட்டம் தமிழ்நாட்டில் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்திடும் நடவடிக் கையாக அமெரிக்க நிதி உதவி யுடன் தமிழ்நாட்டில் மரம் வளர்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10 : டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 9 மாதத்தில் எல்.ஐ.சி.யின் மொத்த பிரீமிய வருவாய் ரூபாய் 3.42 லட்சம் கோடியாகும். தமிழகத்தின் குலசேகரபட்டினத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏவப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார். உரிய வசதிகள் இல்லாத மருத்துவ கல்லூரிகள் மீது நான் நடவடிக்கை எடுத்ததால், மதுரை எய்ம்ஸ் பற்றி தவறான தகவல் பரப்புவதாக மக்களவை யில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா குற்றம் சாட்டினார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சென்னை-மைசூரு இடையே பயணிகளை ஈர்ப்பதில் சதாப்தி எக்ஸ்பிரசை வந்தே பாரத் சொகுசு ரெயில் முந்தியது. எஸ்.எஸ்.எல்.வி.டி2 3 செயற்கைக்கோள்களுடன் புதிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி2 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. 

பிப்ரவரி 11 : திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங் களில் ரூ.105 கோடியில் 106 நவீன மேற் கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங் களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டு மான பணிகள் 2028-ம் ஆண்டுதான் முடிவடையும் என்று ஜப்பான் சென்று திரும்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை 6 வழிச்சாலைப்பணி கிடப்பில் கிடக்கிறது என்றும், தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வில்லை என்பது தவறு என்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார். திட்டப்பணிகளுக்கு ரூ.98/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின்பே 2023-24-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளை யாட்டு திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள்,விக்டோரியா மண்டபம் சுழல் அருங்காட்சியகமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

பிப்ரவரி 5: தங்கள் வான்பரப்பில் பறந்து வந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல மாட்டேன் என ரஷிய அதிபர் புதின் உறுதி அளித்தார். சில முக்கியமான பொருட்களுக்காக சீனாவை இந்தியா சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் சுமன் பெரி கூறினார். பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். பிப்ரவரி 6 : துருக்கி, சிரியா நாடுகளில் அதி காலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2300 பேர் பரிதாபமாக இறந்தனர். மீட்பு பணிக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி யது. அமெரிக்காவில் நடந்தகிராமி விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல பாடகி பியோன்ஸ் 4 விருதுகளை வென்றார். இதன் மூலம் அவர் மொத்தமாக 32 கிராமி விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்தார். அமெரிக்காவில் உட்டா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவுவதற்காக இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்தது. ராணுவ மருத்துவ குழுவும் புறப்பட்டுச் சென்றது. பிப்ரவரி 7 மாகாணத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

பிப்ரவரி 8 : துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. இந்தியா அனுப்பிவைத்த இரு நாடுகளுக்கும் நிவாரண பொருட்கள், விமானத்தில் போய்ச் சேர்ந்தன. பிப்ரவரி 9 : வடகொரிய ராணுவத்தின் 75- வது ஆண்டு தின கொண்டாட்டத்தை யொட்டி, நள்ளிரவில் அந்த நாடு நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டது, உலக அரங்கை அதிரவைத்தது. பிப்ரவரி 10 : துருக்கி, சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்து விட்டது. அங்கு வாட்டும் குளிரால் மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. உளவு பலூன் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் வலுத்து வருகிறது. பிப்ரவரி 11 : ரஷிய அதிபர் புதினை சமா தானப்படுத்தி, பிரதமர் மோடியால் உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று அமெரிக்கா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டு பிப்ரவரி 5: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி எங்கள் நாட்டுக்கு வராவிட்டால், அங்கு நடக்கும் உலகக்கோப்பை போட்டியை புறக்கணிக்க வேண்டியது வரும் என்று பாகிஸ்தான் மீண்டும் எச்சரித்துள்ளது. பிப்ரவரி 7 : ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிப்ரவரி 11: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.